Friday, December 29, 2023
தேயிலை நிறுவன பிரதான மனேஜரான யுவதிக்கு குடும்பஸ்தர் மீது விபரீத மோகம்!! கொழும்பு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு!
தனது காதலனின் ஏழு வயது மகளின் புகைப்படங்களை ஆ பாச படங்களாகத் திருத்தியமைத்துப் பகிர்ந்தமைக்காக கைது செய்யப்பட்ட முன்னணி தேயிலை ஏற்றுமதி நிறுவனமொன்றின் பெண் பொது முகாமையாளரை 100,000 ரூபா பிணையில் விடுவிக்க கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசிங்க நேற்று (28) உத்தரவிட்டுள்ளார். .
அதே நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரியினால் கணனி குற்றப் புலனாய்வுப் பிரிவில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேகநபர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் கலகெடிஹேன பிரதேசத்தில் வசிப்பவர்.
திருமணமான நபரான முறைப்பாட்டாளர், சந்தேகநபரான பெண்ணுடன் தொடர்பில் இருந்தமை தொடர்பான உண்மைகளை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் முன்வைத்துள்ளனர்
அதே நிறுவனத்தில் பணிபுரியும் இருவரும் இருவரும் பல ஆண்டுகளாக தொடர்பில் இருந்துள்ளனர். முறைப்பாட்டாளர அந்த உறவை நிறுத்த முடிவு செய்து அதை சந்தேகநபரிடம் தெரிவித்தார்.
இதனால் ஆத்திரமடைந்த சந்தேகநபர், முறைப்பாட்டாளரின் 7 வயது பிள்ளையின் படங்களுடன் ஆ பாசமான வார்த்தைகளுடன் ஆ பாசமான படங்களை இணைத்து முறைப்பாட்டாளரின் வாட்ஸ்அப் கணக்கு மற்றும் மின்னஞ்சலுக்கு அனுப்பியதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றில் உண்மைகளை அறிவித்தது.
சம்பவம் தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறும் கொழும்பு மேலதிக பிரதான நீதவான் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவிட்டுள்ளார்.
Wednesday, December 27, 2023
யாழில் ஒரு பங்கு ஆட்டிறைச்சியை ஒருவனே தின்று தீர்த்ததாக கூறி அலுவலக நண்பன் மீது தாக்குதல்!!
யாழில் உள்ள முக்கிய அலுவலகம் ஒன்றின் அபிவிருத்து உத்தியோகத்தர் கடுமையாகத் தாக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். மோட்டார் சைக்கிளில் தவறி வீழ்ந்ததாக கூறியே இவர் சிகிச்சை பெற்று வருகின்ற போதும் இவர் தனது நண்பர்களால் நையப்புடைக்கப்பட்டதாகத் தெரியவருகின்றது. கடந்த ஞாயிற்றுக் கிழமை ஆண்டிறுதி கொண்டாட்டங்களுக்காக வடமராட்சி கிழக்குப் பகுதிக்கு குறிப்பிட்ட அலுவக நண்பர்கள் சகிதம் வான் ஒன்றில் சென்ற போதே இவர் நண்பர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார். மதுபாணங்கள் மற்றும் பளைப் பகுதியில் வாங்கப்பட்ட ஆட்டுப் பங்கு போன்றவற்றுடன் வடமராட்சி கிழக்குக்கு சுற்றுலா சென்றுள்ளார்கள் யாழ் அலுவலகம் ஒன்றின் உத்தியோகத்தர்கள். இவர்களில் இருவர் சமையல் வேலையில் ஈடுபட்டிருந்த போது ஏனையவர்கள் கடலில் குளித்தும் மணலில் உருண்டு பிரண்டு கொண்டிருந்ததாகவும் தெரியவருகின்றது.
ஆட்டிறைச்சிக் கறியை சமைக்கும் வேலையில் ஈடுபட்ட இருவரில் ஒருவரும் கடலில் குளிக்க சென்ற பின்னர் அங்கு தனியே நின்றிருந்த அலுவலர் ஆட்டிறைச்சி மற்றும் பியர்களுடன் தனித் தவில் வாசிக்கத் தொடங்கியுள்ளார். கடலில் குளிக்கச் சென்றவர்கள் ஏற்கனவே தாம் கொண்டு சென்ற மதுபாணப் போத்தல்கள் மற்றும் சாப்பாட்டு பொருட்களை கடற்கரையில் வைத்து பகிர்ந்து உண்டு கொண்டிருந்துள்ளார்கள். குளித்து விட்டு வந்த பின்னர் ஆட்டிறைச்சியை சுவைக்கவே அவர்கள் நினைத்திருந்தார்கள். இந் நிலையிலேயே ஆட்டிறைச்சியை சமைத்துக் கொண்டிருந்த நண்பன் இறைச்சியில் குறிப்பிடத்தக்க அளவை மதுவுடன் சாப்பிட்டு முடித்துள்ளார்.
அதன் பின்னர் நிறை வெறியில் கடற்கரையில் நின்றவர்களிடம் சென்றுள்ளார். அங்கு அவர்களுடன் சேர்ந்து மீண்டும் இறைச்சி சமைத்த இடத்திற்கு வந்த போது இறைச்சிக்கறி குறைந்த அளவே சட்டிக்குள் காணப்பட்டுள்ளது. இதன் பின்னர் ஏற்பட்ட வாய்த் தர்க்கம் கைகலப்பாக மாறியுள்ளது. இறைச்சியைத் தின்று தீர்த்ததாக கூறி நண்பன் மணலுக்குள் உருட்டி எடுக்கபட்டுள்ளான். அவனது வாய்க்குள் நிறை வெறியில் நின்ற ஏனைய நண்பர்களால் மணல் மண் அள்ளி திணிக்கப்பட்டதாக தெரியவருகின்றது. அதன் பின்னர் மூச்சுத்திணறல் ஏற்படவே குறித்த நண்பனை ஏனையவர்கள் சேர்த்து தென்மராட்சியில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் அனுமதித்து பின்னர் அவன் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரியவருகின்றது. நண்பனின் நுரையீரலுக்குள் மணல் சென்றுள்ளதாக தெரிவித்தே தற்போது சிகிச்சை பெற்று வருகின்றார். இச் சம்பவம் தொடர்பாக தற்போது அலுவலக ரீதியாக விசாரணைகள் நடைபெற்று வருவதாக தெரியவருகி்றது.
யாழ் - கொழும்பு தொடருந்து சேவை இடைநிறுத்தம்! மூடப்படும் திகதி வெளியீடு jaffna train service
வடக்கிற்கான தொடருந்து சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்படும் என தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
வடக்கு தொடருந்து மார்க்கத்தை நவீனமயமாக்கும் திட்டத்தின் இரண்டாம் கட்டம் ஜனவரி 07 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.
தற்காலிக இடை நிறுத்தம்
இதனால், மஹவ தொடக்கம் அனுராதபுரம் வரையான தொடருந்து மார்க்கமானது,
ஜனவரி 07 முதல் 06 மாதத்திற்கு மூடப்படவுள்ளதாக தொடருந்து திணைக்களத்தின் பிரதி முகாமையாளர் என்.ஜே. இந்திபொலகே குறிப்பிட்டுள்ளார்.
jaffna train service
எனினும் கொழும்பில் இருந்து மஹவ மற்றும் அனுராதபுரத்திலிருந்து காங்கசன்துறை செல்லும் தொடருந்து சேவைகள் இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Colombo Jaffna Sri Lanka Railways Northern Province of Sri Lanka Department of Railways
Tuesday, December 26, 2023
யாழில் ஆட்டோச் சாரதி மயூரன் விபத்தை ஏற்படுத்திய பயத்தில் துாக்கில் தொங்கி மரணம்!!
யாழ்ப்பாணத்தில் உள்ள பகுதியொன்றில் விபத்தினை ஏற்படுத்தி விட்டு தப்பிச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.இந்த சம்பவத்தில் முனியப்பர் கோவில் வீதி, கட்டுவன் மேற்கு பகுதியை சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான 41 வயதான சந்திரசேகரம் மயூரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த குடும்பஸ்தர் முச்சக்கரவண்டி சாரதியாக பணியாற்றி வருகின்ற நிலையில் நேற்று முன்தினம் (24-12-2023) இரவு முச்சக்கர வண்டியில் செல்லும்போது குப்பிழானில் விபத்து ஏற்பட்டுள்ளது.
இதனால் அவர் முச்சக்கர வண்டியை அவ்விடத்திலேயே விட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.இந்த நிலையில் நேற்றைய தினம் அவரது வீட்டுக்கு முன்னால் உள்ள புளியமரத்தில் சடலமாக தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் இன்றையதினம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
யாழில் ‘பட்டா’ வாகனத்துக்குள் 3 இளைஞர்களுடன் ஆடைகள் அற்ற நிலையில் பிடிபட்ட மாணவி!!
யாழ் அரியாலை கிழக்குப் பகுதியில் ‘பட்டா’ வானகம் ஒன்றின் உள்ளே முழு நிர்வாண நிலையில் 23 வயதான தாதிப் பயிற்சி மாணவியும் 3 இளைஞர்களும் அப்பகுதியைச் சேர்ந்தவர்களால் பிடிக்கப்பட்டுள்ளார்கள்.நேற்று அதிகாலை 1 மணியளவில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. நத்தார் ஆராதனையில் கலந்து கொண்ட பின் வீடு திரும்பிக் கொண்டிருந்த சிலர் தமது பகுதிக்கு அண்மையில் வீதி ஓரமாக சந்தேகத்துக்கிடமான முறையில் பட்டா வாகனம் ஒன்று நின்றுள்ளதை அவதானித்துள்ளார்கள்.
அந்த வாகனத்துக்குள் இருந்து முனகல் சத்தம் கேட்டுள்ளது. இதனையடுத்து அப்பகுதியால் சென்றவர்கள் தமது நண்பர்கள் சிலரையும் அழைத்துக் கொண்டு குறித்த வாகனத்தை நெருங்கிச் சென்றுள்ளனர். வாகனத்தின் உள்ளே நிர்வாண நிலையில் நிறை வெறியில் 3 ஆண்களும் பெண் ஒருவரும் காணப்பட்டுள்ளனர்.
அவர்களை ஆடைகளை அணிவிக்கச் செய்த பின் கீழே இறக்கி விசாரணை செய்த போது குறித்த பெண் தாதிப் பயிற்சி மேற்கொள்ளும் மாணவி எனவும் வேறு மாவட்டத்தைச் சேர்ந்தவர் எனவும் தெரியவந்துள்ளது. வாகனச் சாரதியும் அவனது இரு நண்பர்களும் யாழ் நகரப்பகுதியில் வாடகை வாகன சேவையில் ஈடுபடுபவர்கள் எனத் தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவர்களை கடுமையாக எச்சரித்து அனுப்பியுள்ளனர் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள்.
Monday, December 25, 2023
யாழ் பல்கலை மாணவி சுபீனா வைத்தியசாலையில் கொலையா? மாணவியின் சகோதரி அதிர்ச்சித் தகவல்கள்!! வீடியோ
தரமற்ற ஊசியை செலுத்தியதாலும் சரியான முறையில் சிகிச்சை வழங்காததினாலுமே தனது தங்கை உயிரிழந்துள்ளதாக உயிரிழந்த யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவியின் உடன் பிறந்த சகோதரி குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கலைப்பீட மாணவி குணரத்தினம் சுபீனா அவர்கள் உடல் சுகயீனம் காரணமாக தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அவர் யாழ்ப்பாணம் போதனை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட பின்னர் கடந்த 23 ஆம் திகதி இரவு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கயிலேயே குறித்த மாணவியின் சகோதரி இவ்வாறு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று தங்கச்சிக்கு உடல் டெங்கு காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் சிகிச்சைக்காக தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு மருத்துவர் பார்வையிடுவதற்கு வரும்போது வாந்தி காணப்பட்டதால் அதற்கு ஒரு ஊசி போடுமாறு தாதியருக்கு கூறினார்.
இந்நிலையில் குறித்த ஊசியை தாதியர் ஏற்றிவிட்டு போகும்போது மூச்சுத்திணறல், தலைவலி என்ற எனது தங்கை துடித்துள்ளார். இந்நிலையில் அந்த ஊசி மருந்துக்கு எதிரான தடுப்பு மருந்து ஒன்றினை கொடுத்துவிட்டு அவசர சிகிச்சை பிரிவுக்கு கொண்டு சென்றனர். அதன்பின்னர் செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டது.
பின்னர் மருத்துவர் வந்து “இதே ஊசி ஏனையோருக்கும் ஏற்றப்பட்டது. ஆனால் உங்களது தங்கச்சிக்கு தான் ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது. ஒவ்வாமை ஏதாவது இருக்கிறதா” என்று கேட்டார். ஆனால் ஏற்கனவே வைத்தியசாலையில் பதிவுகள் மேற்கொள்ளும் போது ஒவ்வாமை எதுவும் இல்லை என்று கூறினோம். பின்னர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பவுள்ளதாக கூறினர். பின்னர் தெல்லிப்பழை வைத்தியசாலையின் எந்தவிதமான ஆவணங்களும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்படாமலேயே தங்கச்சியை அனுப்பி வைத்தனர்.
இதயத்தை தொழிற்பட வைப்பதற்காக கழுத்துக்கு கீழ் பகுதியில் இருந்து துளையிட்டார்கள். ஏனென்றால் இதயத்தின் தசைநார்கள் இறுகிவிட்டன. ஆகையால் உடல் பாகங்களுக்கு இரத்தம் செல்லவில்லை. முகம் வெளிறி, கால்கள் மஞ்சள் நிறமாக மாற்றமடைந்தது.
பின்னர் இரவு என்னையும் எனது அம்மாவையும் அழைத்த வைத்தியர், ஏற்கனவே ஏற்றப்பட்ட ஊசியின் தாக்கத்தினை தடுப்பதற்காக சிகிச்சைகள் வழங்கவுள்ளோம் என்றனர். இரவு எட்டு மணிக்குத்தான் சிகிச்சைகள் ஆரம்பிக்கப்பட்டது.
எந்தவிதமான மருந்துகளும் வைத்தியசாலையில் இல்லாதது போல எல்லா மருந்துகளும் எங்களையே வாங்கி தருமாறு கூறினர். பின்னர் அடுத்தநாள் வைத்திய ஆலோசகருடன் பேசும்போது 90 வீதம் அபாய கட்டத்தில் இருந்து தற்போது 60 வீதம் நிலைமைகள் சீருக்கு வந்துள்ளது. ஆகையால் பயப்படத் தேவையில்லை என்று கூறினார்.
பின்னர் திடீரென செயற்கையாக இதயத்தை தொழிற்பட வைக்கும் மருந்தை குறைத்தனர். இவ்வாறு குறைத்ததால் மூன்று மணத்தியாலத்தில் திரும்பவும் அபாய கட்டத்திற்கு எனது தங்கச்சி சென்றார். இதன்போதே ஏதாவது எனது தங்கச்சிக்கு நடந்துவிட்டதா தெரியவில்லை. எனது தங்கச்சிக்கு ஏற்கனவே போட்ட ஊசி என்ன என நான் வைத்தியரை கேட்டவேளை அவர் என்ன ஊசி என்று கூறவில்லை. கண்ணுக்கு பிளாஸ்டர் போட்டு ஒட்டி இருந்தனர்.
பின்னர் இரவு எங்களை அழைத்தவேளை நாங்கள் போய் பார்த்தோம் வென்டிலேட்டர் குழாயில் இரத்தம் காணப்பட்டது.
ஊசி ஏற்றுவதற்கு முன்னர் செவ்வாய்க்கிழமை பரிசோதனைகள் செய்யப்பட்டது. ஆனால் புதன்கிழமை பரிசோதனை செய்யவில்லை. ஏனென்றால் மெசின் பழுதாகி விட்டதாக கூறினர். இரத்த அளவீடு பார்க்காமல், குருதிச் சிறு தட்டுகளின் அளவு பார்க்காமல், டெங்கின் அளவுகள் பார்க்கால் எவ்வாறு ஊசியை ஏற்றினார்கள்? அத்துடன் ஏற்றப்பட்ட அந்த ஊசி தரக்குறைவான ஊசி என அழியமுடிகிறது. போடப்பட்ட ஊசியின் பெயரோ அல்லது அது தொடர்பான விபரங்கள் எவையும் பதிவுகளில் இடம்பெறவில்லை.
பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது ஊசியின் தாக்கத்தினால் தான் எனது தங்கச்சி உயிரிழந்துள்ளதாக. எனவே இவ்வாறான இனி எந்த சம்பவங்களும் இனிமேல் நடக்கக்கூடாது. எனது தங்கச்சிக்கு நீதி வேண்டும் என்றார்.
Sunday, December 24, 2023
வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் உண்டியலை உடைத்து திருட முற்பட்டவரை பாம்பு தீண்டியுள்ளது.
முல்லைத்தீவு, வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் திருட வந்தவர்களை பாம்பு தீண்டியதால், அவர்கள் திருட்டு முயற்சியை கைவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு இந்த சம்பவம் நடந்தது.
திருடர்கள் 3 பேர் கதவை உடைத்துக் கொண்டு ஆலயத்துக்குள் நுழைந்துள்ளனர்.
அவர்கள் கூரியஆயுதங்களையும் எடுத்து வந்திருந்தனர். ஆலயத்திலிருந்து பாதுகாப்பு கமரா இணைப்புக்களை துண்டித்து விட்டு, திருட திட்டமிட்டு, பாதுகாப்பு கமரா இணைப்பு பெட்டியினுள் ஒரு திருடன் கைவைத்துள்ளான். அதற்குள்ளிருந்த பாம்பு, திருடனை தீண்டியது.
இதையடுத்து, பாம்பு தீண்டிய திருடனை தூக்கிக் கொண்டு, மற்றைய இரண்டு திருடர்களும் அங்கிருந்து சென்றுள்ளனர்.
இந்த சம்பவங்கள் அனைத்தும் அங்கிருந்த பாதுகாப்பு கமராவில் பதிவாகியுள்ளது.
இதனடிப்படையில், ஆலய நிர்வாகத்தினால் முள்ளியவளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள வற்றாப்பளை அம்மன் ஆலயம், அதிசயங்கள் நிகழும் ஆலயமென பக்தர்கள் மத்தியில் நம்பிக்கையுள்ளது. அங்கு வருடாந்தம் உப்புநீரில் விளக்கேற்றும் சடங்கு நிகழும். வருடாந்தம் பங்குனி விசாகப்பொங்கலுக்கு இலங்கை முழுவதிலுமிருந்து இலட்சக்கணக்கான பக்தர்கள் ஆலயத்தில் குழுமுவதுண்டு. இந்த திருட்டு விவகாரத்திலும், அம்மன் அதிசயம் காண்பித்துள்ளதாக பக்தர்கள் ஆலயத்தில் மெய்சிலிர்த்ததை காண முடிந்தது.
யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவி குணரத்தினம் சுபீனா உயிரிழந்தது ஏன்?
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவி ஒருவர் திடீர் காய்ச்சல் காரணமாக நேற்றைய தினம் சனிக்கிழமை உயிரிழந்துள்ளார்.யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடத்தில் இறுதியாண்டில் கல்வி கற்கும் குணரத்தினம் சுபீனா என்ற மாணவியே உயிரிழந்துள்ளார்.
குறித்த மாணவி காய்ச்சல் காரணமாக தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
இந்நிலையில் குறித்த மாணவி நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார். உடற்கூறு பரிசோதனைக்கு பின்னர் உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
Saturday, December 23, 2023
யாழில் ஒரே நேரத்தில் பலருடன் உறவு கொள்வதற்கு அடிமையான யுவதியின் கதை!!
மகளீர் தொடர்பான வலைத்தளம் ஒன்றில் வந்த பதிவினை அப்படியே இங்கு தந்துள்ளோம்…..
யாழ்ப்பாணத்தில் குடும்ப வறுமை, தோல்வியடைந்த திருமண வாழ்க்கை காரணமாக வழிதவறிய யுவதியொருவர் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
மகளீர் அமைப்பொன்றின் கவனத்தயைீர்த்த இந்த விவகாரத்தையடுத்து, அந்தப் பெண் தொடர்பான தகவல்கள் திரட்டப்பட்டு, அவருக்கு ஆலோசனை மற்றும் மறுவாழ்வு திட்ட முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன.
மாணவிகளும், இளம் பெண்களும் வாழ்க்கையில் துரிதகதியில் எடுக்கும் முடிவுகள் எப்படியான அபாயங்களை ஏற்படுத்தலாம் என்ற எச்சரிக்கைக்காக அந்த யுவுதியின் கதையை நாம் இங்கு குறிப்பிடுகின்றோம்.
சுமார் 5 வருடங்களின் முன்னர், வலி.வடக்கிலுள்ள பிரபல பாடசாலையொன்றில் தரம் 10 இல் கல்வி பயின்று வந்த மாணவி அவர். அவரை இனி இந்த பகுதியில் மாதவியென்று குறிப்பிடுகின்றோம். 15 வயதான அவருக்கு ஊரில் உள்ள இளைஞர் ஒருவர் மீது ஒரு தலை காதல் ஏற்பட்டது.
ஆனால் அந்த இளைஞனுடன் அவரால் பேச முடியவில்லை. ஓரிரு மாதங்களின் பின்னர்தான் அறிந்தார். தனது வகுப்பில் பயிலும் சகமாணவியொருவரும், அந்த இளைஞனும் காதலிக்க ஆரம்பித்துள்ளனர் என்பதை.
அந்த மாணவியை தனிமையில் சந்தித்த மாதவி, அந்த இளைஞனுடனான காதல் உறவை கைவிடும்படியும், தான் அவரை காதலிப்பதாகவும் கூறியுள்ளார். ஆனால், அந்த மாணவி அதை ஏற்கவில்லை. தாங்கள் இருவரும் காதலிக்க ஆரம்பித்துள்ளதாகவும், ஒரு தலை காதலுக்காக எல்லாம்தான் பிரிந்து செல்ல முடியாது என கறாராக கூறிவிட்டார்.
இந்த சம்பவம் நடந்து, ஓரிரு வாரங்களில் சுழிபுரத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர், வீதியில் மாதவியைப் பார்த்து சிரித்தார். தொடர்ந்தும் அந்த இளைஞர் தன்னை கவரும் முயற்சியில் ஈடுபட்டதை அவதானித்த மாதவிக்கும், அந்த இளைஞனின் மீது ஈர்ப்பு ஏற்பட்டது. ஏற்கெனவே, தான் காதலித்த இளைஞன் கிடைக்காத கோபத்தில் இருந்த மாதவி, ஓரிரு நாளிலேயே சுழிபுரம் இளைஞனின் காதலில் விழுந்தார்,
ஓரிரு வார காதல் அது.
தனது 15 வயது வயதில் மாதவி காதலனின் பேச்சை நம்பி, அவனுடன் ஓடிச் சென்றார்,
காதலனுக்கு 21 வயது. நிரந்தர தொழில்ல இல்லை. வறுமையான குடும்பப் பின்னணி. கிளிநொச்சியில் உள்ள தனது ஒறவினர் ஒருவரது வீட்டுக்கு மாதவியை அழைத்துச் சென்றார். அவர்கள் அங்கேயே தங்கிவிட்டனர். காதலன் கூலி, கட்டுமான வேலைகளுக்கு சென்றான்.
காதலனுடன் ஓடிச் சென்ற 10வது மாதத்தில் மாதவி குழந்தை பிரசவிக்க தயாரானார். அவரை கிளிநொச்சி வைத்தியசாலைக்கு காதலன் அழைத்துச் சென்றான்.
மாதவியை பிரசவ விடுதியில் அனுமதித்துவிட்டு, வெளியே வந்த காதலன், அங்கு துப்பரவு பணியில் ஈடுபட்ட யுவதியொருவரின் அழகில் மயங்கினான். அவரிடம் பேச்சு கொடுத்தான். இருவரும் அங்கு பேசிக் கொண்டிரு்தனர். அதன் பின்னர், அவன் மாதவியைப் பார்க்க வரவேயில்லை.
பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்ட மாதவி, கணவன் வருவான் என காத்திருந்தார். அவன் வரவேயில்லை. வைத்தியசாலைக்குள் நிர்க்கதியாகிய மாதவி, ஆண் குழநதையை பிரசவித்தார்.
போக்கிடம் இல்லாமலும்,குழந்தை பிரசவத்தாலும் பராமரிப்ப நிலையமொன்றில் சிறிது காலம் குழந்தையுடன் மாதவி தங்கியிருந்தாள்.
பின்னர், மாதவியின் பெற்றோர் அங்கு சென்று, மகளையும், குழந்தையையும் பொறுப்பேற்றனர். அவர்கள் விவசாயத்தை நம்பியிருக்கும் ஏழைப் பெற்றோர். மாதவிக்கு இரண்டு தங்கைகள் உள்ளனர். குடிசை வீடொன்றிலேயே வசிக்கிறார்கள். மாதவியின் கடைசி தங்கைக்கும், மாதவியின் மகளுக்குமிடையில் 7 வயது வித்தியாசம்.
ஓரிரு வருடங்களின் பின்னர், மற்றொரு இளைஞனுடன் மாதவிக்கு அறிமுகம் ஏற்பட்டு, காதலாகியது. அதுவும் சில வார காதல்தான். மாதவிக்கு சிறிய குழந்தையொான்றுள்ளதை அறிந்தும், அவளைக் காதலிப்பதாக அவன் கூறினான். மாதவி அதை நம்பினாள்.
மாதவியை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு, யாழ்ப்பாணத்தை அண்மித்த பகுதியொன்றில் உள்ள விடுதிக்கு சென்றான். அங்கு மதுபானம் அருந்தி, மாதவியையும் அருந்த வைத்து பாலியல் உறவு கொண்டான். தனது இரண்டு நண்பர்களுக்கும் மாதவியை விருந்தாக்கினான்.
மாதவிக்கு இது அடுத்த பேரதிர்ச்சி.
அந்த காதலனும் தொடர்பை துண்டித்தான்.
வாழ்க்கையின் கருப்பு பங்கங்களை மட்டுமே சந்தித்த மாதவி, வாழ்க்கையை ஒரு கருப்பு அத்தியாயமாக உணர்ந்தாரோா என்னவோ…. புதியதொரு வழக்கத்திற்கு அடிமையானார்.
ஆம்… அவர் பல ஆண்களுடன் உறவு கொள்ள ஆரம்பித்தார், அவர் விப ச்சாரத்தில் ஈடுபடுகிறார் என ஒரு பகுதியினர் குறிப்பிட்டனர். தனது உடல் தோவைக்காக உறவு கொள்கிறார் என சிலர் குறிப்பிட்டனர்.
மிகச்சில காலத்தில், அவர் குழு பாலு றவை விரும்பும் பெண்ணாகவும் மாறி விட்டார்.
உள்ளூரில் சிலர், இது பற்றி பெற்றோரையும் எச்சரித்தனர். அவர்களும் அரசல்புரசலாக தகவலறிந்திருந்தாலும், மாதவியை கட்டுப்படுத்த முடியாமலிருந்தார்கள். வாழ்கையின் கருப்பு பக்கங்களையே பார்த்த விரக்தியினாலும் அவர் அப்படி செயற்பட்டிருக்கலாம்.
ஏனெனில் அவர் பற்றிய தகவலறிந்த மகளீர் வலையமைப்பொன்று அவரை அணுகிய போது, அவர் சாதகமான மனநிலையில் அவர்களுடன் தொடர்பு கொண்டு, புதிய வாழ்ககையொன்றுக்காக ஆர்வமாயிருந்தார்.
தற்போது, ஒரு பாதுகாப்பான வலையமைப்பின் பொறுப்பில் உள்ள மாதவி, இந்த காலத்தை பற்றி பேச விரும்பவில்லை. பேசாமல் கடந்து செல்ல விரும்பினார். தற்போது உளவள ஆலோசனையும் பெறும் மாதவி, தொழில் வாய்ப்பொன்றிற்காக காத்திருக்கிறார்,
மாணவிகள் கல்வி சுற்று முடிந்து, வாழ்க்கையின் சூட்சுமங்களை அறிந்த கொள்வதற்கு முன்னதாக, திருமண உறவை ஆரம்பிப்பதில் உள்ள அபாயங்களை மனம் கொள்வது அவசியம் என்ற உண்மையை உணர்த்துகின்தல்லவா மாதவியின் கதை!!
அம்பாறையில் நபர் ஒருவர் கொடூரமாக கொலை: விசாரணையில் வெளியான பகீர் தகவல்(படங்கள்) | An Unknown Person Hacked To Death
அம்பாறை மாவட்டம் இறக்காமம் காவல்துறை பிரிவுக்குட்பட்ட வாங்காமம் பகுதியில் உள்ள வயல் காணி ஒன்றில் இருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
இனம் தெரியாத நபர் ஒருவர் நேற்று (23) வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக இறக்காமம் காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றினையடுத்து பொதுமக்களின் ஒத்துழைப்புடன் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
இதன் போது அக்கரைப்பற்று பகுதியைச் சேர்ந்த 63 வயது மதிக்கத்தக்க முஹம்மது சித்தீக் ஹாஜியார் என்பவரே இவ்வாறு வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
கொலைக்கான காரணம்
இச்சம்பவம் தொடர்பில் இரு இளைஞர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை இறக்காமம் காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.
மேலும், வேலை ஒன்றினை முடித்த பின்னர் அதற்கான கூலி கொடுப்பதில் ஏற்பட்ட குளறுபடியே இக்கொலைக்கு காரணமாக அமைந்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இச் சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்றுள்ளதுடன், அருகில் இருந்த வீடு ஒன்றில் சடலம் மறைக்கப்பட்டு சனிக்கிழமை அதிகாலை வேளையில் அருகிலுள்ள கரும்பு காணிக்குள் வீசப்பட்டிருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது .
எரிபொருள் விலை தொடர்பில் வெளியான புதிய தகவல் | Sri Lanka Fuel Price From January
எரிபொருள் விலை தொடர்பில் வெளியான புதிய தகவல்!
பெறுமதிசேர் வரி திருத்தங்களின் கீழ் பெட்ரோல் விலை 10% அதிகரிக்கும் என அதிபர் அலுவலகத்தின் அரச வருவாய் பிரிவின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
அதிபர் செயலகத்தில் இன்று(23) இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
ஜனவரி மாதம் முதல் பெட்ரோலுக்கு விதிக்கப்பட்ட 7.5% வரியை நீக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
விலை அதிகரிப்பு
இதன்படி, VAT பதினெட்டு வீதத்தால் அதிகரிக்கப்பட்டாலும், பெட்ரோல் விலை 10.5% மட்டுமே அதிகரிக்கும் என பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, பண்டிகைக் காலத்தில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாதவாறு அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களும் உறுதி செய்ய வேண்டுமென மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Friday, December 22, 2023
இந்திய போலிப் பூசாரிகள் செய்வினை நீக்குவதாக கூறி கல்முனையில் கணவன், மனைவிக்கு செய்த அலங்கோலம்!!
உணவக உரிமையாளர் ஒருவரின் மனைவியிடம் பரிகாரம் பூஜை செய்வதாக கூறி 8 பவுணுக்கும் அதிகமான நகைகளை அபகரித்து தலைமறைவாகியுள்ள இரு இந்தியர்கள் குறித்து கல்முனை தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உணவகம் ஒன்றில் கடந்த புதன்கிழமை (20) இரவு சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் நேற்று (21) பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சம்பவ தினமான அன்று இரு இந்தியர்கள் பரிகார பூஜை தொடர்பாக இருவேறு சந்தர்ப்பங்களில் உணவக உரிமையாளரது மனைவியிடம் உரையாடியுள்ளனர்.
இதற்கமைய குறித்த பரிகார பூஜை தொடர்பில் சம்பவ தினமன்று இரவு குறித்த உணவகத்திற்கு வருகை தந்த இரு இந்தியர்களும் தனிமையில் இருந்த பெண்ணை அணுகி பரிகார பூஜை தொடர்பில் குறிப்பிட்டுள்ளனர்.
இதன் போது குறித்த பூஜைக்கு இணங்கிய அப்பெண் தன்னிடம் இருந்த தங்க மாலை உள்ளடங்கலாக ஏனைய நகைகளை இரு இந்தியர்களும் குறிப்பிட்டபடி மண்சட்டியில் போட்டு மூடி பூஜைக்கு கொடுத்துள்ளார்.
இதன்போது பூஜை இடை நடுவில் பூஜைக்காக கொள்வனவு செய்யப்பட்ட தேசிக்காய் ஒன்றினை வீட்டின் உள்ளே வைக்குமாறு அப்பெண்ணை கேட்டுள்ளனர்.
உடனடியாக அந்த தேசிக்காயை பெற்ற அப்பெண் வீட்டின் உள்ளே சென்று பரிகாரம் நிறைவேற அதை வைத்துவிட்டு வந்துள்ளார்.அச்சமயம் உடனடியாக செயற்பட்ட இரு இந்தியர்களும் ஏற்கனவே தயார் செய்து கொண்டு வந்த பிறிதொரு மூடப்பட்ட மண்சட்டியை அவ்விடத்தில் மாற்றியதுடன் பூஜையை நிறுத்தி பின்னர் தங்க நகை அடங்கிய மண்சட்டியை தம்வசம் எடுத்து கொண்டு உணவக உரிமையாளரது மனைவியிடம் 3 நாட்களில் பின்னர் மண்சட்டியை திறந்து பார்க்குமாறு கூறிவிட்டு சென்றுள்ளனர்.
பின்னர் குறித்த உணவகத்திற்கு வந்த உணவக உரிமையாளர் தனது மனைவியிடம் கழுத்தில் கிடந்த நகை எங்கே என்று கேட்டுள்ளார்.இதன்போது நடந்த அனைத்து விடயங்களை அவர் கூறியுள்ளார். உடனடியாக செயற்பட்ட உணவக உரிமையாளர் 2 இந்தியர்களால் தனது மனைவியிடம் 3 நாட்களின் பின்னர் திறக்க கூறிய மண்சட்டியை திறந்து பார்த்த அதில் ஒன்றும் இருக்கவில்லை.
அங்கு அவர்களுக்கு அதிர்ச்சியே மிஞ்சியது.உடனடியாக 2 இந்தியர்கள் குறித்து தேடுதல் மேற்கொண்ட பாதிக்கப்பட்டவர்கள் ஏமாற்றத்துடன் கல்முனை பொலிஸ் நிலையத்தில் இறுதியாக முறைப்பாடு மேற்கொண்டுள்ளனர்.
வேண்டாம் முத்தம்... பிரித்தானியர்களுக்கு ஒரு எச்சரிக்கை
கிறிஸ்துமஸ் பண்டிகைக் காலங்களில் கட்டியணைத்துக்கொள்ளவோ, முத்தமிட்டுக்கொள்ளவோ வேண்டாம் என பிரித்தானியர்களை மருத்துவர்கள் எச்சரித்துள்ளார்கள்.
என்ன காரணம்?
பண்டிகைக்காலங்களில் நண்பர்களையும், உறவினர்களையும் கட்டியணைத்துக்கொள்வது சகஜமான ஒரு விடயம். ஆனால், இந்த பாழாய்ப்போன நூறு நாள் இருமல் அதற்கு பெரும் தொந்தரவாக அமைந்துவிட்டது.
பிரித்தானியாவில் pertussis மற்றும் whooping cough என்று அழைக்கப்படும் இந்த நூறு நாள் இருமல் பரவி வரும் நிலையில், மாஸ்க் அணிந்துகொள்ளுமாறும், ஒருவரையொருவர் கட்டியணைத்துக்கொள்ளவேண்டாம் என்றும் எச்சரித்துள்ளார் வைரஸ் துறை நிபுணரான பேராசிரியர் Richard Tedder.
கிறிஸ்துமஸ் காலத்தில் வழக்கத்தை விட அதிக அளவில் மக்கள் மற்றவர்களை சந்திக்கும் நிலையில், இந்த நூறு நாள் இருமல் மேலும் அதிகரிக்கலாம் என்று கூறியுள்ள அவர், மக்கள் தடுப்பூசி பெற்றுக்கொண்டுள்ளதை உறுதி செய்துகொள்ளுமாறும், இருமல் பரவுவதைத் தவிர்க்க, மாஸ்க் அணிந்துகொள்ளுமாறும் அறிவுறுத்தியுள்ளார்.
கிறிஸ்துமஸ் பண்டிகைக் காலத்தில், ஒருவரையொருவர் கட்டியணைத்துக்கொள்வதற்கும், முத்தமிடுவதற்கும், ’NO’ சொல்லும் விதியைப் பின்பற்றுமாறும், கோவிட் காலகட்டத்தில் செய்தது போல, முழங்கைகளைப் பயன்படுத்தி மற்றவர்களை வாழ்த்தலாம் என்றும் அவர் ஆலோசனை கூறியுள்ளார்.
காசாவிலிருக்கும் கனேடியர்களின் உறவினர்களுக்கு விசா: புலம்பெயர்தல் அமைச்சர் தகவல்
காசாவிலிருக்கும் கனேடியர்களின் உறவினர்களுக்கு கனடா தற்காலிக விசா வழங்க இருப்பதாக, கனேடிய புலம்பெயர்தல் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
காசாவிலிருக்கும் கனேடியர்களின் உறவினர்களுக்கு விசா
காசாவிலிருக்கும் சுமார் 660 கனேடியர்கள், நிரந்தர குடியிருப்பு அனுமதி பெற்றவர்கள் மற்றும் அவர்களுடைய கணவன் அல்லது மனைவி பிள்ளைகளை காசாவிலிருந்து வெளியே கொண்டுவர கனடா இலக்கு வைத்துள்ளதாக கனடா புலம்பெயர்தல் துறை அமைச்சரான மார்க் மில்லர் (Marc Miller) தெரிவித்துள்ளார்.
கனேடியர்களின் பெற்றோர், தாத்தா பாட்டி, சகோதர சகோதரிகள் மற்றும் பேரன் பேத்திகள் உட்பட குடும்ப உறவுடைய தூரத்து உறவினர்கள் முதலானவர்களின் விண்ணப்பங்களை கனடா அரசு பெறத் துவங்க இருப்பதாக தெரிவித்துள்ள மார்க் மில்லர், தகுதி பெற்றவர்களுக்கு மூன்று ஆண்டு விசாக்கள் வழங்கப்படும் என்றார்.
இருந்தாலும், கனேடியர்களை காசாவிலிருந்து வெளியே கொண்டுவருவது கடினமானதாகவே இருந்துள்ளது என்று கூறியுள்ள அவர், ஆகவே, காசாவிலிருப்பவர்களை பாதுகாப்பாக அங்கிருந்து வெளியே கொண்டுவருவதற்கு பெடரல் அரசு உறுதியளிக்கமுடியாது என்றும் கூறியுள்ளார்.
இளம் வயதினரிடையே அதிகரிக்கும் புற்றுநோய்: எச்சரிக்கும் சுவிஸ் மருத்துவர்
முன்பெல்லாம், 50 வயதுக்குக் கீழுள்ளவர்களுக்கு புற்றுநோய் ஏற்படுவது அபூர்வமாக இருந்துவந்தது. ஆனால், அது இப்போது அதிகரித்துள்ளது என்கிறார் சுவிஸ் மருத்துவத்துறை நிபுணர் ஒருவர்.
இளம் வயதினரிடையே அதிகரிக்கும் புற்றுநோய்
65 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு புற்றுநோய் அதிகரித்துவருகிறது, அதிகமாகிவரும் வயதானவர்கள் எண்ணிக்கை அதற்குக் காரணம் என்று கூறும் லாசேன் பல்கலை மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவத்துறை நிபுணரான Solange Peters, ஆனால், பொதுவாக 50 வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு புற்றுநோய் தாக்குவது அபூர்வம் என்கிறார்.
அந்த நிலை இப்போது மாறிவருகிறது என்று கூறும் Solange Peters, வயதானவர்களை ஒப்பிடும்போது இந்த எண்ணிக்கை குறைவுதான், என்றாலும், பொதுவாக 50 வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு புற்றுநோய் தாக்கும் எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்துள்ளது என்கிறார்.
இது எச்சரிக்கைக்கான ஒரு அறிகுறி என்று கூறும் Solange Peters, அதுவும், குறிப்பாக மார்பக புற்றுநோய், குடல் புற்றுநோய், கணையப் புற்றுநோய், கல்லீரல், புராஸ்ட்ரேட், சிறுநீரகம் மற்றும் கர்ப்பப்பை புற்றுநோய் ஆகியவை அதிகரித்துவருவது கவலையை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது என்கிறார்.
என்ன காரணம்?
செயற்கை இனிப்பூட்டிகள் மற்றும் உணவுப்பொருட்கள் நீண்ட நாட்களுக்கு கெட்டுப்போகாமல் இருப்பதற்காக அவற்றுடன் சேர்க்கப்படும் ரசாயனங்கள், ஆகிய விடயங்கள் அபாயக் காரணிகளாக இருக்கலாம்.
கூடவே, உடல் பருமன், அதிகம் ஓடியாடி வேலை செய்யாமல் உட்கார்ந்த இடத்திலேயே வேலை செய்தல், புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்துதல் ஆகியவையும் புற்றுநோய் ஏற்படுவதற்கான காரணிகளாக அமைகின்றன என்கிறார் Solange Peters.
ஆரோக்கியமான வாழ்க்கைமுறை புற்றுநோயைத் தடுப்பதற்கான அடிப்படை விடயமாகும் என்று கூறும் Solange Peters, அதே நேரத்தில் மரபியல் மற்றும் தொற்று ஆகிய காரணங்களையும் மறுப்பதற்கில்லை என்கிறார். என்றாலும், ஆரம்ப கட்டத்திலேயே பரிசோதனை செய்து நோயைக் கண்டறிதல் விரைவான சிகிச்சைக்கு உதவக்கூடும் என்கிறார் அவர்.
லண்டன் ஊடகவியலாளர்கள் இருவரை படுகொலை செய்ய திட்டமிட்ட ஈரான்: அதிரவைக்கும் பின்னணி
லண்டனில் இருந்து செயல்படும் ஈரானிய செய்தி ஊடகம் ஒன்றில் பணியாற்றும் இரு ஊடகவியலாளர்களை படுகொலை செய்ய திட்டமிடப்பட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
திருமணம் என ரகசிய குறியீடு
சிரியா ஆதரவு ஈரானிய உளவாளிகள் இந்த விவகாரம் தொடர்பில் ஒருவருக்கு 200,000 டொலர் வரையில் அளிக்கவும் முன்வந்துள்ளனர் என கூறப்படுகிறது. அந்த இரு ஊடகவியலாளர்களுக்கும் தாங்கள் குறிவைக்கப்பட்டுள்ளோம் என்பது தெரிந்திருக்கவில்லை என்றே கூறப்படுகிறது.
திருமணம் என ரகசிய குறியீடு அளிக்கப்பட்டு ஈரானிய ஊடகவியலாளர்களான Farhad Farahzad மற்றும் Sima Sabet ஆகிய இருவரையும் படுகொலை செய்ய திட்டமிட்டுள்ளனர்.
ஈரானின் IRGC எனப்படும் புரட்சிகர காவலர் படையின் மூத்த அதிகாரியான Muhammed Abd al-Razek Kanafani என்பவரே, படுகொலைக்கு உத்தரவிட்டுள்ளார். இவர் சிரியா ஜனாதிபதி அல்-அசாத்துக்கு நெருக்கமானவர் என்றே கூறப்படுகிறது.
வேலையை சரிவர செய்து வருகிறேன்
ஆனால் கடந்த இலையுதிர்காலத்தில் இந்த விவகாரத்தில் தொடர்புடைய நபர் ஐடிவி செய்தி நிறுவனத்திற்கு திட்டங்களை வெளிப்படுத்த பணம் வழங்கிய நிலையில் இந்த திகிலூட்டும் சதி அம்பலமானது.
ஈரானிய செய்தி ஊடக நிறுவனத்திற்கு வெளியே கார் வெடிகுண்டு பதுக்கி வைக்க வேண்டும் என்று அந்த நபரிடம் ஈரானிய உளவாளிகள் இருவர் கூறியதாகவும், ஆனால், அந்த திட்டத்தை மாற்றிவிட்டு, அவர்களின் குடியிருப்புக்கே சென்று கத்தியால் தாக்கும்படி கூறியுள்ளனர்.
இந்த நிலையில், படுகொலை திட்டம் அம்பலமானதை அடுத்து, Sima Sabet தெரிவிக்கையில், நான் எனது வேலையை சரிவர செய்து வருகிறேன் என்பதற்கு இதுவே சான்று என்றார்.
வெளிநாட்டவர்களுக்கு ஒரு ஆறுதலான செய்தி: உள்துறை அலுவலகம் அடித்தது அந்தர் பல்டி
பிரித்தானியா அறிமுகம் செய்யவிருக்கும் புதிய புலம்பெயர்தல் விதிகள் வெளிநாட்டவர்கள் பலருக்கு அச்சத்தையும் சந்தேகத்தையும் உருவாக்கிய நிலையில், தற்போது அந்த விடயம் தொடர்பாக உள்துறை அலுவலகம் புதிய தகவலொன்றை வெளியிட்டுள்ளது.
புதிய புலம்பெயர்தல் விதிகள்
பிரித்தானியா புதிய புலம்பெயர்தல் விதிகள் சிலவற்றை அறிமுகம் செய்ய உள்ள நிலையில், அவற்றில் ஒன்று, ஆண்டொன்றிற்கு 38,700 பவுண்டுகள் வருவாய் உள்ளவர்கள் மட்டுமே, பிரித்தானியர்கள் அல்லாத தங்கள் குடும்பத்தினரை, அதாவது, கணவன் அல்லது மனைவி மற்றும் பிள்ளைகளைக் கூட, தங்களுடன் பிரித்தானியாவில் வைத்துக்கொள்ளமுடியும் என்று கூறியது.
பிரித்தானியர்களல்லாத தங்கள் குடும்பத்தினருடன் பிரித்தானியாவில் வாழ்பவர்கள், இந்த செய்தி தங்களுக்கு கடும் ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்திருந்த நிலையில், பிரித்தானியரல்லாத தங்கள் குடும்பத்தினரை அவர்களுடைய நாட்டுக்கு திருப்பி அனுப்பிவிடவேண்டுமா என்னும் கேள்வியும் எழுந்தது.
அதாவது, பிரித்தானியாவில் புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கை எக்கச்சக்கமாக அதிகரித்துள்ளதாக கூறி, புலம்பெயர்தலைக் கடுப்படுத்துவதற்காகவே உள்துறைச் செயலர் இந்த விதிகளை அறிமுகம் செய்ய இருந்தார்.
குறிப்பாகச் சொல்லவேண்டும் என்றால், வெளிநாட்டு மாணவர்களும், முதியவர்களைக் கவனித்துக்கொள்ளும் பணியாளர்களும், தங்கள் குடும்பத்தினரை பிரித்தானியாவுக்கு அழைத்து வருவதைத் தடுப்பதற்காக, அவர்களைக் குறிவைத்தே இந்த விதியைக் கொண்டு வர திட்டமிடப்பட்டதாக கூறப்படுகிறது.
உள்துறை அலுவலகம் அடித்த அந்தர் பல்டி
அதாவது, முன்னர் அறிவிக்கப்பட்டது போல, ஆண்டொன்றிற்கு 38,700 பவுண்டுகள் வருவாய் உள்ளவர்கள் மட்டுமே, பிரித்தானியர்கள் அல்லாத தங்கள் குடும்பத்தினரை தங்களுடன் பிரித்தானியாவில் வைத்துக்கொள்ளமுடியும் என்னும் விதியில், 38,700 பவுண்டுகள் என்னும் தொகை, ஆண்டுக்கு 29,000 பவுண்டுகள் என மாற்றப்பட்டுள்ளது.
உள்துறை அலுவலக அமைச்சரான Lord Sharpe of Epsom, இப்போதைக்கு, ஆண்டுக்கு 29,000 பவுண்டுகள் வருவாய் உள்ள பிரித்தானியர்கள், பிரித்தானியர்களல்லாத தங்கள் குடும்பத்தினரை தங்களுடன் பிரித்தானியாவில் வைத்துக்கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.
என்றாலும், இது இப்போதைக்குத்தான் என்றும், பின்னர் இந்த தொகை உயர்த்தப்படலாம் என்று கூறப்படுகிறது. ஆனால், எப்போது அந்த மாற்றங்கள்செய்யப்படும் என்பது குறித்து சரியான அறிவிப்பு எதுவும் வெளியிடப்படாததால், மாற்றி மாற்றி அறிவிப்புகளை வெளியிடும் உள்துறை அலுவலகம், குழப்பம் உண்டாக்கிக்கொண்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மூன்றாம் காலாண்டிலும் சரிவு... பொருளாதார மந்தநிலை நோக்கி நகரும் பிரித்தானியா
வெளியான தரவுகளின் அடிப்படையில், ஜூலை மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கு இடையே பிரித்தானிய பொருளாதார சரிவை எதிர்கொண்டுள்ள நிலையில், பிரித்தானியா பொருளாதார மந்தநிலை நோக்கி நகர்வதாக நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மூன்றாம் காலாண்டில் 0.1 சதவீதம்
வளர்ச்சியை அதிகரிக்க இங்கிலாந்து வங்கி வட்டி விகிதங்களைக் குறைக்கலாம் என்று நிதியமைச்சர் ஜெர்மி ஹன்ட், பரிந்துரைக்கும் அரிய நடவடிக்கையை எடுத்த நிலையிலேயே மூன்றாம் காலாண்டில் பிரித்தானிய பொருளாதாரம் வலுவிழந்துள்ளது.
மேலும் மொத்த உள்நாட்டு உற்பத்தி என்பது மூன்றாம் காலாண்டில் 0.1 சதவீதம் சரிவடைந்துள்ளது. முந்தைய காலாண்டில் பதிவான பொருளாதாரம் மூன்றாம் காலாண்டில் மாறாமல் இருக்கும் என்று முன்னர் மதிப்பிட்டிருந்தது.
ஆனால் பொருளாதார நிபுணர்களுக்கு மூன்றாம் காலாண்டின் தரவுகள் அதிர்ச்சியை அளித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். இருப்பினும், நவம்பரில் சில்லறை விற்பனை எதிர்பார்த்ததை விட அதிகமாக உயர்ந்தது என்றும், அக்டோபரில் பதிவானதை விட 1.3 சதவீதம் அதிகரித்துள்ளது என்றும் கூறப்படுகிறது.
லேசான மந்தநிலைக்கான அறிகுறி
மேலும், நவம்பர் வரையில் மூன்று மாதங்களில் விற்பனை வீழ்ச்சியடைந்தது என்றும் கொரோனா தொற்றுநோய்க்கு முந்தைய நிலைகளுக்குக் கீழே இருந்தது என்று புள்ளிவிவர அலுவலகம் தெரிவித்துள்ளது.
டொலருக்கு எதிராக ஸ்டெர்லிங் மதிப்பு அதிக்கரித்துள்ளதுடன், மூன்றாம் காலாண்டின் தரவுகள் வெளியான உடனேயே யூரோ மதிப்பும் உயர்ந்துள்ளது.
இதனிடையே, மூன்றாவது காலாண்டு சரிவு எனப்து, இரண்டு தொடர்ச்சியான காலாண்டு பொருளாதார சரிவால் வரையறுக்கப்பட்ட மந்தநிலையின் தொடக்கமாக நிரூபிக்கப்படுமா என்பதில் பொருளாதார வல்லுநர்கள் இருவேறு கருத்துகளை பதிவு செய்துள்ளனர்.
Ashley Webb என்பவர் தெரிவிக்கையில், வெளியான தரவுகள் லேசான மந்தநிலைக்கான அறிகுறி என குறிப்பிட்டுள்ளார்.
பிரித்தானியாவில் 4 வயது சிறுவன் கொலை: தாய் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு
பிரித்தானியாவில் 4 வயது மகன் குத்திக் கொல்லப்பட்ட சம்பவத்தில் தாய் மீது கொலை குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
4 வயது மகன் கொலை
பிரித்தானியாவில் 4 வயது மகன் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்த சம்பவத்தில் சிறுவனின் தாய் மீது கொலை குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
4 வயது மகன் கோபி டூலி-மச்சாரியா(Kobi Dooley-Macharia) கத்துக்குத்து காயங்களுடன் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 41 வயதான தாய் கெசியா மச்சாரியா(Keziah Macharia) தேம்ஸ் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று ஆஜர் படுத்தப்பட உள்ளார்.
புதன்கிழமை இரவு 10.50 மணியளவில் ஹாக்னி (Hackney) மாண்டேக் சாலையில் (Montague Road) உள்ள முகவரிக்கு அழைக்கப்பட்டதை அடுத்து பொலிஸார் விசாரணையை தொடங்கினர்.
சொத்து மதிப்பில் அம்பானி, அதானியை பின்னுக்கு தள்ளிய இந்திய பெண்மணி: யார் இந்த சாவித்ரி ஜிண்டால்?
சொத்து மதிப்பில் அம்பானி, அதானியை பின்னுக்கு தள்ளிய இந்திய பெண்மணி: யார் இந்த சாவித்ரி ஜிண்டால்?
அப்போது சிறுவன் கோபி கத்தி குத்து காயங்களுடன் கண்டுபிடிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டான். ஆனால் சிறுவன் சிகிச்சை பலனின்றி பின்னர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டான்.
இதற்கிடையில் சிறப்பு உடற்கூறு பரிசோதனை வியாழக்கிழமை டிசம்பர் 28ம் திகதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Thursday, December 21, 2023
வீட்டுக்குள் புகுந்த பொலிசார் எனது ஆடையை கழற்றச் சொன்னார்கள்! யாழில் இளம் குடும்பப் பெண் கூறுவது என்ன?!!
கிளிநொச்சி மாவட்ட பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இத்தாவில் பகுதியில் இன்று (20) நபர் ஒருவரின் வீட்டிற்குள் திடீரென உள்நுழைந்த பளை பொலிசார் வீட்டில் ஜஸ் போதை பொருள் இருப்பதாக கூறி வீட்டினை சுற்றி வளைத்துள்ளனர். வீட்டில் ஐஸ் போதைப்பொருள் இருப்பதாக வீட்டில் இருந்த பொருட்களை களைத்து, வீட்டில் சமைத்து வைத்த உணவை கையால் கிளறி, வீட்டில் இருந்த குடும்ப பெண்ணிடம் உங்கள் ஆடைகளை கழற்றி பையினுள் போட்டு தாருங்கள் எனவும் கூறியுள்ளனர்.உதவிக்கு பெண்பொலிசார் எவரும் இல்லாத நிலையில் வீட்டில் இருந்த பெண்களை பரிசோதனை செய்யப்போவதாகவும் கேட்டுள்ளனர்.
பின் வீட்டில் இருந்த குடும்ப தலைவரை எந்தவொரு தடயப்பொருட்களும் இல்லாமல் கைது செய்து சென்றுள்ளனர்.கைது செய்யப்பட்டவர் எந்தவொரு போதைபொருளுடனும் கைது செய்யப்படவில்லை எனவும் பொய் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் குடும்பத்தினர் கவலை தெரிவித்துள்ளனர். இதே போன்று பல தடவைகள் பளை பொலிசார் இவ்வாறு அநாகரீகமாக நடந்து கொள்கிறார்கள் எனவும் தொடர்ச்சியாக தம் மீது இவ்வாறான அநீதிகள் இடம்பெற்று வருவதாகவும் மிகுந்த கவலை விடுத்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர் கடந்த காலங்களில் போதைப்பொருள்களுடன் கைது செய்யப்பட்டு சிறை தண்டனை அனுபவித்து வெளியில் வந்து திருந்தி வாழும் சமயத்தில் தொடர்ச்சியாக தம்மீது போலி குற்றச்சாட்டுக்கள் அவர் மீது போடப்பட்டு வருவதாகவும் குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.
இதே வேளை போதைப்பொருட்களை விற்பனை செய்பவர்கள் தற்போது பெண்களையே முன்னிலைப்படுத்தி வருகின்றார்கள். ஏனெனில் பெண்களை ஆண் பொலிசார் உடல் ரீதியாக பரிசோதனை செய்ய முடியாது என்ற காரணத்தால். பெண்கள் தங்களது அந்தரங்க உறுப்பு மற்றும் மார்புப் பகுதிகளில் வைத்தே போதைப் பொருட்களை கடத்தி விற்பனை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
வாழைப்பழம் விற்ற பெண்ணை கட்டியணைத்தவர் கைது!
வாழைப்பழம் விற்பனைக்காக தென் பகுதியில் இருந்து கல்முனை பகுதிக்கு வந்த சிங்கள பெண்மணியிடம் அத்துமீறி கட்டியணைத்த சந்தேக நபரை கல்முனை தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அம்பாறை மாவட்டம் கல்முனை பொதுச்சந்தை பகுதியில் 55 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரே குறித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவராவார்.
சம்பவ தினமான இன்று முற்பகல் வியாபார நடவடிக்கையில் குறித்த பெண் ஈடுபட்டு கொண்டிருந்த சமயம் 49 வயது மதிக்கத்தக்க மொனராகலை பகுதியை சேர்ந்த சந்தேக நபர் இச்செயலில் ஈடுபட்டுள்ளார்.
இதன் போது பாதிக்கப்பட்ட குறித்த பெண் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் வழங்கிய முறைப்பாட்டிற்கமைய சிறுவர் பெண்கள் பிரிவு பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டு சந்தேக நபரை கைது செய்துள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபரை கல்முனை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
பாவற்குளத்தில் வீழ்ந்து இளம்பெண் பலி!! அடையாளம் காண உதவுமாறு கோரிக்கை!
வவுனியா பாவற்குளத்தில் இருந்து இளம்பெண்னின் சடலம் ஒன்றை பொலிசார் மீட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்….
இன்று மாலை பாவற்குளம் பகுதிக்கு சென்ற இளம்பெண் ஒருவர் குளத்தினுள் வீழ்ந்துள்ளார். இதனை அவதானித்த சிலர் உடனடியாக விரைந்து செயற்ப்பட்டு பெண்ணை மீட்டதுடன் வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைத்தனர்.
எனினும் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லும் முன்னரே குறித்த பெண் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தில் 18-20 வயது மதிக்கத்தக்க இளம்பெண்ணே சடலமாக மீட்கப்பட்டதுடன் அவர் இது வரை அடையாளம் காணப்படவில்லை.
குறித்த சம்பவம் தற்கொலையா அல்லது தவறுதலாக இடம்பெற்றதா என்பது தொடர்பாக உலுக்குளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.
உக்ரைனுக்கு நிதி உதவியை அதிகரித்துள்ள சுவிட்சர்லாந்து
உக்ரைனில் வாழும் மக்கள் குளிர்காலத்தை எதிர்கொள்வதற்கு வசதியாக, உக்ரைனுக்கு வழங்கும் நிதி உதவியை சுவிட்சர்லாந்து அதிகரித்துள்ளது.
மீண்டும் 12 மில்லியன் சுவிஸ் ஃப்ராங்குகள் உதவி
சுவிட்சர்லாந்து, ஏற்கனவே உக்ரைனுக்கு 13 மில்லியன் சுவிஸ் ஃப்ராங்குகளை வழங்குவதாக உறுதியளித்துள்ளது. இந்நிலையில், மேலும் 12 மில்லியன் சுவிஸ் ஃப்ராங்குகளை உக்ரைனுக்கு வழங்குவது என சுவிட்சர்லாந்து முடிவு செய்துள்ளது.
ஏற்கனவே சுவிட்சர்லாந்து வழங்கிய நிதி, 1,000 குடியிருப்புகளை பழுதுபார்க்க உதவியுள்ள நிலையில், மக்கள் குளிர்காலத்தை எதிர்கொள்ள வசதியாக, 1,300 வீடுகளுக்கு ஹீற்றர்களை வழங்க உள்ளது சுவிட்சர்லாந்து அரசு.
இதுபோக, சுவிஸ் மனிதநேய உதவி பிரிவும், குடிநீர் வழங்கும் அமைப்புகளை சரிசெய்துவருவதும் குறிப்பிடத்தக்கது.
ஜேர்மனியில் பொலிசார் ரெய்டு... பெண்கள் அமைப்பொன்றைச் சேர்ந்தவர்கள் கைது
ஜேர்மனியில் பொலிசார் நடத்திய ரெய்டு ஒன்றைத் தொடர்ந்து, பெண்ணியவாத அமைப்பொன்றைச் சேர்ந்த பெண்கள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
ஜேர்மனியில் பொலிசார் நடத்திய ரெய்டு
ஜேர்மன் தலைநகர் ஜேர்மனியில், நேற்று பொலிசார் பாலஸ்தீன ஆதரவு இடதுசாரி பெண்ணியவாத அமைப்பொன்றைக் குறிவைத்து ரெய்டு ஒன்றை நடத்தினார்கள்.
The Zora group என அழைக்கப்படும் அந்த பெண்ணியவாத அமைப்பு, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்காவால் பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டுள்ள பாலஸ்தீன அமைப்பான Popular Front for the Liberation of Palestine என்னும் அமைப்பை ஆதரிக்கும் அமைப்பாகும்.
ஆறு பேர் கைது
பொலிசார் நடத்திய ரெய்டைத் தொடர்ந்து, சந்தேகத்துக்குரிய ஆறு பேரை பொலிசார் கைது செய்துள்ளார்கள். அவர்களில் ஐந்துபேர் Zora அமைப்பைச் சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது.
அந்த அமைப்பு, சமூக ஊடகம் ஒன்றில் வெளியிட்ட அறிக்கை ஒன்றைத் தொடர்ந்தே இந்த ரெய்டு நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
Zora அமைப்பினர் வெளியிட்ட அந்த அறிக்கையில், பாலஸ்தீனத்துக்கு விடுதலை கிடைக்கவில்லையென்றால், பெண்களுக்கும் விடுதலை கிடைக்காது என்ற தலைப்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாம்.
அசாதாரண விபத்தொன்றில் கனடாவில் வாழ்ந்துவந்த இந்திய இளைஞர் பலி: ஆறு பேர் மருத்துவமனையில் அனுமதி
கனடாவுக்கு சமீபத்தில் வந்த இந்திய இளைஞர் ஒருவர், அசாதாரண விபத்தொன்றில் உயிரிழந்த சம்பவம், அப்பகுதியில் வாழும் மக்களிடையே அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
அசாதாரண விபத்து
கனடாவின் ஒன்ராறியோவிலுள்ள Kitchener என்னுமிடத்தில் அமைந்துள்ள வீடுகளில், சர்வதேச மாணவர்கள் பலர் தங்கியுள்ளார்கள். அவர்களில் இந்திய மாணவர்களும் அடங்குவர்.
கடந்த செவ்வாயன்று அதிகாலை 7.35 மணிக்கு அவசர உதவிக்குழுவினர் அந்த பகுதியிலுள்ள வீடு ஒன்றிற்கு அழைக்கப்பட்டுள்ளார்கள்.
எரிவாயுக் கசிவு என்று நினைத்து அவசர உதவிக்குழுவினர் அங்கு விரைந்த நிலையில், அங்கு கார்பன் மோனாக்சைடு வாயுவால் அந்த வீட்டில் வசித்துவந்த ஏழு பேர் பாதிக்கப்பட்டுள்ளதைக் கண்டு அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.
ஆனால், அவர்களில் 25 வயதான இந்திய இளைஞர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார். மற்ற ஆறு பேரும் சிகிச்சைக்குப் பிறகு ஒவ்வொருவராக வீடு திரும்பி விட்டதாக கூறப்படுகிறது.
புதிதாக கனடாவுக்கு வந்தவர்கள்
அந்த பகுதியில் வசிப்பவர்கள் பெரும்பாலும் சமீபத்தில் கனடாவுக்கு படிக்கவும், பணி செய்யவும் வந்தவர்கள் ஆவர். அவர்களில் பலருக்கு கார்பன் மோனாக்சைடு விஷம் குறித்து தெரியவில்லை.
சம்பவம் நடந்த வீட்டிலோ, கார்பன் மோனாக்சைடு வாயுக் கசிவைக் காட்டும் அலாரம் இல்லையாம். அந்த வீட்டிலுள்ள கார் நிறுத்தும் கேரேஜில், கார் ஒன்றின் எஞ்சின் இயங்கியவண்ணம் இருந்துள்ளது.
அந்த காரிலிருந்து வெளியான கார்பன் மோனாக்சைடே அந்த இளைஞரின் உயிரைப் பறித்துள்ளது. இந்நிலையில், புதிதாக கனடாவுக்கு வருபவர்களுக்கு இந்த கார்பன் மோனாக்சைடு அலாரம் போன்ற விடயங்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும் என அப்பகுதியில் வாழும் சர்வதேச மாணவர்கள் வலியுறுத்தியுள்ளார்கள்.
உயிரிழந்த மாணவரின் பெயர், புகைப்படம் போன்ற எந்த விவரங்களும் இதுவரை வெளியாகவில்லை.
பிரித்தானியாவிற்கு புயல் எச்சரிக்கை: பள்ளிகள் மூடல், பயணங்களை தவிர்க்குமாறு எச்சரிக்கை
பிரித்தானியாவில் பல்வேறு பகுதிகளில் பியா புயல் காரணமாக மஞ்சள் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
புயல் எச்சரிக்கை
பிரித்தானியாவில் முழுவதும் பியா புயல் காரணமாக மஞ்சள் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மஞ்சள் புயல் எச்சரிக்கையானது நள்ளிரவு முதல் வியாழக்கிழமை இரவு 9 மணி வரை அறிவிக்கப்பட்டுள்ளது.
பியா புயல் காரணமாக ஸ்காட்லாந்தின் வடக்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளில் 70 முதல் 80 mph வேகத்தில் காற்று வீசக்கூடும்.
மற்ற உயரமான எச்சரிக்கை விடப்பட்ட வடக்கு பகுதிகளில் 65 முதல் 70 mph வேகத்தில் காற்று வீசக்கூடும்.
பிற இடங்களில் 45 முதல் 55 mph வேகத்தில் காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பியா புயல் எச்சரிக்கையானது, பெல்ஃபாஸ்ட்,( Belfast) நியூகேஸில் அபான் டைன்(Newcastle upon Tyne) மற்றும் மான்செஸ்டர்(Manchester) ஆகிய இடங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
மேலும் பயணங்களை தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது, தவிர்க்க முடியாத பயணங்களாக இருப்பின், மெதுவாக வாகனங்களில் பயணிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் புயலின் போது மின்வெட்டு ஏற்பட்டால் அதை சீர்ப்படுத்த ஊழியர்கள் தயார் நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Wednesday, December 20, 2023
தலைதெறிக்கும் போதைப்பழக்கம்… அரைக்காற்சட்டையில் உள்ளதா யாழ் பல்கலைக்கழக கலாச்சாரம்?
கடந்த ஒரு வாரத்தில் யாழ்ப்பாண பல்கலைகழகத்தின் விஞ்ஞான பீடத்தை சேர்ந்த 2 மாணவர்கள் போதைப்பொருளுடன் பொலிசாரால் கைது செய்யப்பட்டிருந்தனர். இருவரும் போதைப்பொருள் விற்பனையிலும் ஈடுபட்டவர்கள்.
கடந்த ஒரு வருடத்தில் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட யாழ்ப்பாண பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவர்களின் எண்ணிக்கை கணிசமானது. ஏனைய பீடங்களின் மணவர்களும் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாண பல்கலைகழக்கழக பீடமொன்றில் கல்வி பயிலும் மாணவர் குழுவொன்று தாம் தங்கியிருந்த விடுதியில் போதைப்பொருள் பாவித்த போது பொலிசாரால் கும்பலாக வளைத்து பிடிக்கப்பட்டனர். அவர்கள் மருத்துவ பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட போது, பேதைப்பாவனையாளர்கள் என்பது தெரிய வந்தது.
என்றாலும், அவர்கள் அடுத்த சில நாட்களில் பரீட்சையொன்றை முகம் கொடுக்கவுள்ளதாக, பல்கலைக்கழக பீடாதிபதியொருவரே உயரதிகாரிகளுடன் பேசி, அவர்களை தளர்வான சட்டநடவடிக்கையை எதிர்கொள்ள வைத்தார்.
போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்படும் மாணவர்களை பல்கலைக்கழக மட்டத்தில் ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உட்படுத்துவதில்லை, அவர்கள் பொலிசாரின் சட்ட நடவடிக்கையை மட்டுமே எதிர்கொள்வார்கள் என பல்கலைக்கழகம் தற்போது முடிவு செய்துள்ளது. யாழ் பல்கலைகழக்கத்தின் இந்த முடிவும், மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை அதிகரிப்புக்கு முக்கிய காரணமென ஒரு தரப்பினர் குற்றம்சாட்டுகின்றனர்.
போதைப்பொருள் பாவனை போன்ற முக்கிய விவகாரத்தில் யாழ்ப்பாண பல்கலைக்கழகம் போதிய நடவடிக்கையெடுக்கவில்லையென்ற விமர்சனம் வலுத்து வருகிறது.
இந்த பின்னணியில், யாழ்ப்பாண பல்கலைகழக்கழத்தில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவிற்கு சென்ற குழுவில் ஒருவர் அரைக்காற்சட்டை அணிந்து வந்தார் என பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் தடுத்து நிறுத்தும் வீடியோ வைரலாகி வருகிறது. அரைக்காற்சட்டையுடன் உள்நுழைவதற்கு என்ன தடையென பெண்ணொருவர் வினவுவதும், பாதுகாவலர்கள் முரட்டுத்தமாக பதிலளிப்பதும், கலாச்சாரம் காப்பாற்றப்பட்டதாக சமூக ஊடகவாசிகள் புளகாங்கிதப்பட்டு அதை பகிர்ந்ததையும் அவதானிக்க முடிந்தது.
இதேவேளை,
யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் பேராசிரியர் ஒருவரால் பாலியல் சீண்டலுக்கு உள்ளானதாக மாணவிகள் குற்றம்சுமத்தியதன் அடிப்படையில், இந்த வழக்கு நீதிமன்றம் வரை சென்றுள்ளது. பல வருடங்களாக இந்த விவகாரம் நீடித்து வருகிறது. அந்த பேராசிரியர் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கற்பித்தலில் ஈடுபடாமலேயே வருடக்கணக்காக மாதாந்தம் இலட்சக்கணக்கான சம்பளம் பெற்று வருகிறார். இந்த விவகாரம் சில காலத்தின் முன் மீண்டும் தூசுதட்டி எடுக்கப்பட்டு விசாரணை நடந்தது.
கலாச்சாரம் தொடர்பில் கவனம் கொள்ள வேண்டிய- குரல் கொடுக்க வேண்டிய வேறு விடயங்கள் இருக்கின்ற போது, சமூக ஊடகவாசிகளும் மேலோட்டமான- கும்பல் மனநிலை பார்வையில் இருப்பது தமிழ் சமூகத்தின் பலவீனமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு இறுதி கால அவகாசம் | Last Date For Students Appearing In Al Examination
Ministry of Education Department of Examinations Sri Lanka G.C.E.(A/L) Examination
கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான அனுமதி அட்டைகளில் திருத்தம் செய்வதற்கான கால அவகாசம் டிசெம்பர் 22 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
பரீட்சைகள் ஆணையாளர் அமித் ஜயசுந்தர இதனை தெரிவித்துள்ளார்.
தவறுகள் இருந்தால்
பெயர், விண்ணப்பித்த பாடங்கள், மொழி மூலம், பிறந்த திகதி உள்ளிட்டவற்றில் தவறுகள் இருந்தால் இதன்போது திருத்திக்கொள்ள முடியும்.
https://onlineexams.gov.lk/ onlineapps/ என்ற இணையதளம் ஊடாக திருத்தங்களைச் செய்து கொள்ள முடியும் என ஆணையாளர் கூறியுள்ளார்.
உயர்தர பரீட்சை எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடத்தப்பட்ட பிரித்தானிய கோடீஸ்வர தொழிலதிபர் கண்டுபிடிப்பு United Kingdom Ecuador
கடத்தப்பட்டதாக கூறப்படும் பிரித்தானிய கோடீஸ்வர தொழிலதிபரை ஈக்வடோர் காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
கொலின் ஆம்ஸ்ட்ரோங் என்ற 78 வயதான தொழிலதிபரே கடத்தப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டவராவர்.
இவர் முன்னாள் இராஜதந்திரி என தெரிவிக்கப்படுகிறது.
ஈக்வடோரில் அவருக்கு சொந்தமான பண்ணையில் இருந்த போதே
ஈக்வடோரில் அவருக்கு சொந்தமான பண்ணையில் இருந்த போதே இந்த கடத்தல் நடந்துள்ளது.
காவல்துறை உடையணிந்த 15 பேர் கொண்ட குழுவினால் இந்த கடத்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் தொடர்பில் 09 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காதலியிடம் காவல்துறையினர் விசாரணை
இதற்கிடையில், கடத்தலுக்கு திட்டமிட்டதாக சந்தேகிக்கப்படும் அவரது காதலியிடம் காவல்துறையினர் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், கடத்தல் சம்பவம் பதிவாகியதையடுத்து, அவரது காதலி தோட்டத்தில் வெடிகுண்டுகள் அணிந்திருந்த நிலையில் காணப்பட்டார்.
அப்போது, வெடிகுண்டு செயலிழக்கும் பிரிவு அவரது வெடிகுண்டு அங்கியை அகற்றும் காணொளியையும் வெளிநாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.
Tuesday, December 19, 2023
12 வயது சிறுமியுடன் பல தடவைகள் உறவு!! கூகுள் வழங்கிய தகவல்!! கொழும்பில் இளைஞன் கைது
2 வருடங்களாக 12 வயது சிறுமியை பாலி யல் வன்பு ணர்வு செய்த குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.சிறுவர் ஆபா சப் படங்களை பார்க்கும் மற்றும் பகிரும் நபர்களை இலகுவாக அடையாளம் காண கூகுள் நிறுவனம் இலங்கை பொலிஸாருக்கு புதிய முறையொன்றை அறிமுக்கப்படுத்தி உள்ளது.
இந்த புதிய முறையின் பிரகாரம் கொழும்பில் வசிக்கும் 18 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.குறித்த இளைஞன் உறவு முறையான சிறுமியை பாலி யல் வன்கொ டுமை செய்து அதை வீடியோ எடுத்து கூகுள் டிரைவில் பதிவேற்றியுள்ளார்.கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கொழும்பு நீதவான் நீதிமன்றில் நேற்று ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் நாளை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.கூகுள் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட முதல் கைது இதுவாகும் என தெரிவிக்கப்படுகின்றது.
Monday, December 18, 2023
கண்டியில் மாணவிகள், உயர் கல்வி படிக்கும் பெண்களுடன் உறவு கொண்டு இணையத்தில் பதிவேற்றிய இரு மாணவர்கள்!! நடந்தது என்ன?
அண்மையில் பாடசாலை மாணவிகள் மற்றும் உயர்கல்வி படிக்கும் இளம் பெண்களை பாலி யல் துஷ்பி ரயோகம் செய்து, அதனை ஆபா சமான திரைப்படங்களாக படம்பிடித்து இணையத்தில் பதிவேற்றிய சம்பவம் இடம்பெற்றிருந்தது.இச்சம்பவம் தொடர்பாக இரண்டு பாடசாலை மாணவர்களை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி, கண்டியை சேர்ந்த இரண்டு பாடசாலை மாணவர்களே இவ்வாறு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, 15 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவரும் அவரது தாயும் கண்டி பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்திற்கு செய்த முறைப்பாட்டின் படி, சந்தேகத்தின் பேரில் இரு மாணவர்களும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட மாணவர்களிடம் நடத்திய விசாரணையில் குறித்த பாடசாலை மாணவி இருவரில் ஒருவருடன் காதல் தொடர்பு வைத்திருந்தமை தெரியவந்துள்ளது.
காதல் உறவின் போது குறித்த மாணவியின் வீட்டில் வைத்து மாணவி பல தடவைகள் துஷ்பி ரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
சிறிது காலத்தின் பின்னர் அந்த காதல் உறவு முறிந்துள்ள நிலையில் மற்றைய மாணவன் இந்த மாணவிக்கு குறுஞ்செய்தி அனுப்பியதையடுத்து அந்த மாணவியும் அவருடன் காதல் தொடர்பினை ஆரம்பித்துள்ளார்.
கண்டியில் உள்ள ஒரு விடுதிக்கு அழைத்துச் செல்லப்பட்ட மாணவி, தனக்கு குடிக்க ஏதாவது கொடுத்ததாகவும், அதன்பிறகு நடந்த எதுவும் தனக்கு நினைவில் இல்லை என்றும் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.
சந்தேகநபரான மாணவன், மாணவியை நிர்வா ணமாக்கி, ஆபா ச காட்சிகளை படம்பிடித்து, பலமுறை அதனை காட்டி மிரட்டி, மாணவியை விடுதிக்கு அழைத்துச் சென்று துஷ்பி ரயோகம் செய்ததும் தெரியவந்துள்ளது.
இவ்வாறு படமாக்கப்பட்ட காட்சிகளை சந்தேகநபரான மாணவன் இணையத்தளம் மற்றும் அவரது நண்பர்களுக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அதற்கு மாணவியின் முதல் காதலனும் உதவியுள்ளதாக விசாரணைகளின் போது மேலும் தெரியவந்துள்ளது.சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார்,
மாணவர்களை கைது செய்ததுடன் மேலதிக விசாரணைகளின் போது மேலும் பல மாணவிகள் மற்றும் யுவதிகளின் இதே போன்ற பல ஆபா ச வீடியோக்களை மாணவன் ஒருவரின் கைத்தொலைபேசியில் இருந்து பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
மாணவி துஷ்பிர யோகத்திற்கு உள்ளானதாக சந்தேகிக்கப்படும் விடுதியின் உரிமையாளரையும் அதன் முகாமையாளரையும் கைது செய்த பொலிஸார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர், எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இரண்டு பாடசாலை மாணவர்களும் கண்டி நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் ஜனவரி முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கண்டி பொலிஸ் பிரிவின் சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் காணாமல் போன தக்காளி பழங்கள் கண்டுபிடிப்பு.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் (International Space Station) இருந்து காணாமல் போன இரண்டு தக்காளிகள் ஓராண்டுக்குப் பிறகு மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.
சர்வதேச விண்வெளி நிலையம் பூமியின் சுற்றுப்பாதையில் இருந்து 400 மீற்றர் உயரத்தில் உள்ளதுடன் அங்கு விண்வெளி வீரர்கள் இங்கு தங்கி, நிலையத்தில் பல்வேறு ஆராய்ச்சி மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்கின்றனர்.
இந்நிலையில் 2022 ஆம் ஆண்டில், நாசா விண்வெளி வீரர் ரூபியோ 371 நாட்கள் விண்வெளி நிலையத்தில் மண் பயன்படுத்தாது தக்காளியை வளர்த்துக்கொண்டிருந்தார் .
ரூபியோவின் தக்காளி தோட்டம் விண்வெளியில் முதல் தக்காளி தோட்டமாக கருதப்பட்டதுடன் தக்காளி பழம் கிடைத்தபோது அது விண்வெளியில் விளைந்த முதல் தக்காளி என்ற பெருமையையும் பெற்றது.
ரூபியோ அன்று இரண்டு பழுத்த தக்காளிகளைப் பறித்து, அவற்றை ஒரு பிளாஸ்டிக் பையில் வைத்து சீல் வைத்து, வேறு வேலையில் இருந்து திரும்பியபோது, ஆய்வகத்தில் இருந்து தக்காளி காணாமல் போனது.
எனினும் அங்கு பூஜ்ஜிய ஈர்ப்பு விசையின் காரணமாக அவை மிதந்து சென்று ஆய்வகத்தில் உள்ள பொருள்களின் குவியல்களுக்கு இடையில் மறைத்து இருக்கலாம் என்று நினைத்து, ரூபியோ அவர்களைத் தேடி நாட்களைக் கழித்தார். ஆனால் சந்திக்கவில்லை.
இருப்பினும், ரூபியோ இரண்டு தக்காளிகளை சாப்பிட்டுவிட்டதாக குற்றம் சாட்டப்பட்டார். ரூபியோ அதை கடுமையாக மறுத்தார். இதனையடுத்து மனமுடைந்து விண்வெளி நிலையத்திலிருந்து ரூபியோ மீண்டும் பூமிக்கு வந்தார்,
எனினும் தற்போது பொலித்தீன் பையில் இருந்த இரண்டு காய்ந்த தக்காளிகள் ஓராண்டுக்குப் பிறகு தற்போது விண்வெளி நிலையத்தில் தங்கியிருக்கும் விண்வெளி ஆராய்ச்சி வீரர்களால் கண்டுபிடிக்கப்பட்டதாக அறிவித்துள்ளனர்.
பொலித்தீன் பையில் நீரிழப்பு மற்றும் சிறிது நசுக்கப்பட்டுள்ளதுடன். சில நிறமாற்றங்களைத் தவிர, அது புலப்படும் நுண்ணுயிர் அல்லது பூஞ்சை வளர்ச்சியைக் கொண்டிருக்கவில்லை.
பழங்கள் கண்டுபிடிக்கப்பட்டமையால் ரூபியோ குற்றமற்றவர் என்பதை நிரூபிப்பதாக நாசா தெரிவித்துள்ளது. (nasa)
online jobs in sri lanka ,
jobs in sri lanka ,
vacancies in kandy ,
tob jobs ,
online jobs in sri lanka ,
new job vacancy ,
lakbima jobs ,
jobs in colombo ,
sri lanka government job