எரிபொருள் விலை தொடர்பில் வெளியான புதிய தகவல்!
பெறுமதிசேர் வரி திருத்தங்களின் கீழ் பெட்ரோல் விலை 10% அதிகரிக்கும் என அதிபர் அலுவலகத்தின் அரச வருவாய் பிரிவின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
அதிபர் செயலகத்தில் இன்று(23) இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
ஜனவரி மாதம் முதல் பெட்ரோலுக்கு விதிக்கப்பட்ட 7.5% வரியை நீக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
விலை அதிகரிப்பு
இதன்படி, VAT பதினெட்டு வீதத்தால் அதிகரிக்கப்பட்டாலும், பெட்ரோல் விலை 10.5% மட்டுமே அதிகரிக்கும் என பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, பண்டிகைக் காலத்தில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாதவாறு அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களும் உறுதி செய்ய வேண்டுமென மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment