பிரித்தானியாவில் நபர் ஒருவர் ஓன்லைனில் ஆர்டர் செய்த மளிகைப்பொருட்களுடன் மனித மலம் கலந்து வந்த சம்பவத்தால் பேரதிர்ச்சி அடைந்துள்ளார்.
பிரித்தானியாவின் Lancashireவை சேர்ந்த நபர் பில் ஸ்மித்(வயது 59), ஒரு மாதத்திற்கும் மேலாக ஊருக்கு வெளியே இருந்துள்ளார்.
இதனால் ஒரு மாதத்திற்கு தேவையான மளிகைப் பொருட்களை வாங்க முடிவு செய்து ஓன்லைன் மூலம் இந்திய ரூபாய் மதிப்பின்படி ரூ.15,000க்கு ஓர்டர் செய்துள்ளார்.
ஓர்டர் கைக்கு பெறப்பட்டதும், அதை எடுத்து வைப்பதற்காக வீட்டின் சமையலறைக்கு சென்றுள்ளார், அப்போது கை தவறி பார்சல் கீழே விழ அதை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்ததாக விவரிக்கிறார்.
அதில் மனித கழிவு இருந்ததாம், அதைப்பற்றி சொல்ல அருவருப்பாக இருக்கிறது, அதை பார்த்ததும் முற்றிலும் அதிர்ச்சி அடைந்தேன், மற்றொரு பையிலும் அதுதான் இருந்தது, என்ன மாதிரியான உலகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்? என தனக்குள் மனவேதனை அடைந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
உடனடியாக குறித்த சூப்பர் மார்க்கெட்டை தொடர்பு கொண்டு, மளிகைப்பொருட்களை எடுத்து செல்லுங்கள் என கூறியதாகவும், அவர்கள் தாங்கள் செய்ததை ஒப்புக்கொண்டே ஆக வேண்டும் என விரும்பியதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் தனக்கு எந்தவொரு இழப்பீடு தேவையில்லை எனவும் குறிப்பிட்டதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து எந்த விளக்கத்தையும் அளிக்காத சூப்பர் மார்க்கெட் நிர்வாகம், விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளது.
0 comments:
Post a Comment