வெளியான தரவுகளின் அடிப்படையில், ஜூலை மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கு இடையே பிரித்தானிய பொருளாதார சரிவை எதிர்கொண்டுள்ள நிலையில், பிரித்தானியா பொருளாதார மந்தநிலை நோக்கி நகர்வதாக நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மூன்றாம் காலாண்டில் 0.1 சதவீதம்
வளர்ச்சியை அதிகரிக்க இங்கிலாந்து வங்கி வட்டி விகிதங்களைக் குறைக்கலாம் என்று நிதியமைச்சர் ஜெர்மி ஹன்ட், பரிந்துரைக்கும் அரிய நடவடிக்கையை எடுத்த நிலையிலேயே மூன்றாம் காலாண்டில் பிரித்தானிய பொருளாதாரம் வலுவிழந்துள்ளது.
மேலும் மொத்த உள்நாட்டு உற்பத்தி என்பது மூன்றாம் காலாண்டில் 0.1 சதவீதம் சரிவடைந்துள்ளது. முந்தைய காலாண்டில் பதிவான பொருளாதாரம் மூன்றாம் காலாண்டில் மாறாமல் இருக்கும் என்று முன்னர் மதிப்பிட்டிருந்தது.
ஆனால் பொருளாதார நிபுணர்களுக்கு மூன்றாம் காலாண்டின் தரவுகள் அதிர்ச்சியை அளித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். இருப்பினும், நவம்பரில் சில்லறை விற்பனை எதிர்பார்த்ததை விட அதிகமாக உயர்ந்தது என்றும், அக்டோபரில் பதிவானதை விட 1.3 சதவீதம் அதிகரித்துள்ளது என்றும் கூறப்படுகிறது.
லேசான மந்தநிலைக்கான அறிகுறி
மேலும், நவம்பர் வரையில் மூன்று மாதங்களில் விற்பனை வீழ்ச்சியடைந்தது என்றும் கொரோனா தொற்றுநோய்க்கு முந்தைய நிலைகளுக்குக் கீழே இருந்தது என்று புள்ளிவிவர அலுவலகம் தெரிவித்துள்ளது.
டொலருக்கு எதிராக ஸ்டெர்லிங் மதிப்பு அதிக்கரித்துள்ளதுடன், மூன்றாம் காலாண்டின் தரவுகள் வெளியான உடனேயே யூரோ மதிப்பும் உயர்ந்துள்ளது.
இதனிடையே, மூன்றாவது காலாண்டு சரிவு எனப்து, இரண்டு தொடர்ச்சியான காலாண்டு பொருளாதார சரிவால் வரையறுக்கப்பட்ட மந்தநிலையின் தொடக்கமாக நிரூபிக்கப்படுமா என்பதில் பொருளாதார வல்லுநர்கள் இருவேறு கருத்துகளை பதிவு செய்துள்ளனர்.
Ashley Webb என்பவர் தெரிவிக்கையில், வெளியான தரவுகள் லேசான மந்தநிலைக்கான அறிகுறி என குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment