சமீபகாலமாக, பிரபலங்கள் முதல் சாமானியர்கள் வரை, சமூக வலைதளங்களில் உருவ கேலி (Body Shaming) மற்றும் Trolling பெரும் பிரச்சனையாகி வருகிறது.
இந்நிலையில், கனேடிய தொலைகாட்சி தொகுப்பாளினி ஒருவர் தனது உடையை விமர்சித்து உருவ கேலி செய்து அனுப்பிய மின்னஞ்சலுக்கு நேரலையில் அளித்த பதில் வைரலானது.
உருவ கேலி செய்பவர்கள் அதிக எடை கொண்டவர்களை அவமானப்படுத்துவதை சமூக வலைதளங்களில் பார்த்து வருகிறோம். உருவ கேலி செய்பவர்கள் மற்றவர்களின் நம்பிக்கையை இழக்கச் செய்கிறார்கள். சாமானியர்கள் முதல் பிரபலங்கள் வரை இது ஒரு பிரச்சனையாக மாறியுள்ளது. இந்த போக்கு சமூக ஊடகங்களில் அதிகமாகிவிட்டது.
சமீபத்தில் கனடாவைச் சேர்ந்த தொகுப்பாளினி Leslie Horton (59) உருவ கேலி செய்பவரால் ஒரு சிக்கலை எதிர்கொண்டார். தனது உடையை விமர்சித்து அவமதிக்கும் வகையில் மின்னஞ்சல் அனுப்பிய அந்த நபருக்கு நேரலையில் பதிலளித்துள்ளார்.
அவர் வேலை செய்யும் கனேடிய செய்தி நிறுவனமான Global Calgary, ட்விட்டரில் இந்த வீடியோவைப் பகிர்ந்துள்ளது.
ஹார்டனுக்கு ஒரு நபரிடமிருந்து மின்னஞ்சல் வந்தது, அதில் "கர்ப்பத்திற்கு வாழ்த்துக்கள்... நீ இதுபோல் பழைய பஸ் டிரைவர் பேன்ட் அணிந்து வந்தால், இப்படியான மின்னஞ்சல்கல் தொடர்ந்து வரும்" என்று அந்த நமர் எழுதியிருந்தார்.
அதற்கு ஹார்டன் நேரலையில் பதிலளித்தார். 'நன்றி.. உண்மையில் நான் கர்ப்பமாக இல்லை.. கடந்த ஆண்டு புற்றுநோயால் எனது கருப்பையை இழந்தேன். மேலும் என் வயது பெண்களின் உடல்வாகு இப்படித்தான் இருக்கும்.. அது உங்களை புண்படுத்துவதாக இருந்தால், துரதிர்ஷ்டவசமாக அதற்கு நான் ஒன்றும் செய்யமுடியாது' என்று பதிலளித்தார்.
ஹார்டனுக்கு தபால் அனுப்பியவர் 4 வருடங்களாக அனுப்பி வருகிறார். குறிப்பாக இந்த மின்னஞ்சல் தன்னை காயப்படுத்தியதாக ஹார்டன் கனடிய செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
இப்படி அனுப்புவது சரியான முறையல்ல என்று தான் பதில் சொன்னதாக வெளிப்படுத்தினாள். இந்த வீடியோ இரண்டு நாட்களுக்கு முன் வைரலானது. அவரது செயலுக்கு நெட்டிசன்கள் பாராட்டிவருகின்றனர்.
0 comments:
Post a Comment