பிரித்தானிய அரசு அறிமுகம் செய்ய திட்டமிட்டுவரும் புதிய புலம்பெயர்தல் விதிகள் சர்ச்சையை உருவாக்கிவருகின்றன. விதிகளை அறிமுகம் செய்யும் அமைச்சர்கள், அவற்றை தாங்களே பின்பற்றுவார்களா என மக்களுடன், ஊடகங்களும் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றன.
புதிய புலம்பெயர்தல் விதிகள்
பிரித்தானியா அறிமுகம் செய்யவிருக்கும் விதிகளில் ஒன்று, ஆண்டொன்றிற்கு 38,700 பவுண்டுகள் வருவாய் உள்ளவர்கள் மட்டுமே, பிரித்தானியர்கள் அல்லாத தங்கள் குடும்பத்தினரை, அதாவது, கணவன் அல்லது மனைவி மற்றும் பிள்ளைகளைக் கூட, தங்களுடன் பிரித்தானியாவில் வைத்துக்கொள்ளமுடியும் என்கிறது.
இந்த செய்தி தங்களுக்கு கடும் ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கிறார்கள், பிரித்தானியர்களல்லாத தங்கள் குடும்பத்தினருடன் பிரித்தானியாவில் வாழ்பவர்கள். அப்படியானால், அவர்கள் பிரித்தானியரல்லாத தங்கள் குடும்பத்தினரை அவர்களுடைய நாட்டுக்கு திருப்பி அனுப்பிவிடவேண்டுமா என அவர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.
அமைச்சர்களுக்கு சில கேள்விகள்
புலம்பெயர்தல் பின்னணிகொண்டவராக இருந்துகொண்டே, புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்தப்போவதாக கூறிக்கொண்டிருக்கும் ரிஷியைப் பார்த்து கடுப்பாகிப்போன மக்கள், சமூக ஊடகம் ஒன்றில், நீங்கள் எப்படி பிரித்தானியாவுக்கு வந்தீர்கள் என கேள்வி எழுப்பியுள்ளார்கள்.
உள்துறைச் செயலர் தன் தாயை அவரது நாட்டுக்கே திருப்பி அனுப்புவாரா?
அதைத்தொடர்ந்து, பிரபல பிரித்தானிய ஊடகங்கள், உள்துறைச் செயலர் முன் ஒரு கேள்வியை முன்வைத்துள்ளன. அதாவது, புதிய உள்துறைச் செயலரான ஜேம்ஸ் கிளெவர்லியும் புலம்பெயர்தல் பின்னணி கொண்டவர்தான்.
அவரது தாயாகிய ஈவ்லின் (Evelyn), மேற்கு ஆப்பிரிக்க நாடான Sierra Leone என்னும் நாட்டைச் சேர்ந்தவர். 1960களில் லண்டனுக்கு புலம்பெயர்ந்த அவர், ஜேம்ஸின் தந்தையாகிய பிலிப்பை (Philip) சந்தித்து, இருவரும் திருமணம் செய்துகொண்டுள்ளார்கள். 1969இல் ஜேம்ஸ் பிறந்துள்ளார்.
ஜேம்ஸின் தந்தையான பிலிப் ஒரு சர்வேயர். தற்போதைய சூழலில் ஒரு சர்வேயரின் ஆண்டு வருவாய், 25,000 பவுண்டுகள்.
அத்துடன், ஜேம்ஸின் தாய், மாணவர் விசாவில் பிரித்தானியாவுக்கு வந்தவர். பின்னர் அவர் திறன்மிகுப் பணியாளர் விசாவுக்கு மாறிக்கொண்டார்.
இதே நிலைமையில்தான் இன்று பல வெளிநாட்டவர்கள் பிரித்தானியாவில் வாழ்கிறார்கள். ஜேம்ஸ் கிளெவர்லியின் பெற்றோரைப்போலவே 25,000 பவுண்டுகள் சம்பளம் வாங்குகிறவர்கள் ஏராளம்.
ஜேம்ஸ் அறிமுகம் செய்யும் விதியின்படி, 38,700 பவுண்டுகள் ஆண்டு வருவாய் பெறுவோர் மட்டுமே, தங்கள் குடும்பத்தினரை பிரித்தானியாவில் வைத்துக்கொள்ளமுடியும்.
ஆக, இதே சூழலில் பிரித்தானியாவுக்கு வந்த தனது பெற்றோரை ஜேம்ஸ் அவர்களுடைய சொந்த நாட்டுக்கே திருப்பி அனுப்பிவிடுவாரா என பிரபல பிரித்தானிய ஊடகங்கள் கேள்வி எழுப்பியுள்ளன.
0 comments:
Post a Comment