யாழில் உள்ள முக்கிய அலுவலகம் ஒன்றின் அபிவிருத்து உத்தியோகத்தர் கடுமையாகத் தாக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். மோட்டார் சைக்கிளில் தவறி வீழ்ந்ததாக கூறியே இவர் சிகிச்சை பெற்று வருகின்ற போதும் இவர் தனது நண்பர்களால் நையப்புடைக்கப்பட்டதாகத் தெரியவருகின்றது. கடந்த ஞாயிற்றுக் கிழமை ஆண்டிறுதி கொண்டாட்டங்களுக்காக வடமராட்சி கிழக்குப் பகுதிக்கு குறிப்பிட்ட அலுவக நண்பர்கள் சகிதம் வான் ஒன்றில் சென்ற போதே இவர் நண்பர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார். மதுபாணங்கள் மற்றும் பளைப் பகுதியில் வாங்கப்பட்ட ஆட்டுப் பங்கு போன்றவற்றுடன் வடமராட்சி கிழக்குக்கு சுற்றுலா சென்றுள்ளார்கள் யாழ் அலுவலகம் ஒன்றின் உத்தியோகத்தர்கள். இவர்களில் இருவர் சமையல் வேலையில் ஈடுபட்டிருந்த போது ஏனையவர்கள் கடலில் குளித்தும் மணலில் உருண்டு பிரண்டு கொண்டிருந்ததாகவும் தெரியவருகின்றது.
ஆட்டிறைச்சிக் கறியை சமைக்கும் வேலையில் ஈடுபட்ட இருவரில் ஒருவரும் கடலில் குளிக்க சென்ற பின்னர் அங்கு தனியே நின்றிருந்த அலுவலர் ஆட்டிறைச்சி மற்றும் பியர்களுடன் தனித் தவில் வாசிக்கத் தொடங்கியுள்ளார். கடலில் குளிக்கச் சென்றவர்கள் ஏற்கனவே தாம் கொண்டு சென்ற மதுபாணப் போத்தல்கள் மற்றும் சாப்பாட்டு பொருட்களை கடற்கரையில் வைத்து பகிர்ந்து உண்டு கொண்டிருந்துள்ளார்கள். குளித்து விட்டு வந்த பின்னர் ஆட்டிறைச்சியை சுவைக்கவே அவர்கள் நினைத்திருந்தார்கள். இந் நிலையிலேயே ஆட்டிறைச்சியை சமைத்துக் கொண்டிருந்த நண்பன் இறைச்சியில் குறிப்பிடத்தக்க அளவை மதுவுடன் சாப்பிட்டு முடித்துள்ளார்.
அதன் பின்னர் நிறை வெறியில் கடற்கரையில் நின்றவர்களிடம் சென்றுள்ளார். அங்கு அவர்களுடன் சேர்ந்து மீண்டும் இறைச்சி சமைத்த இடத்திற்கு வந்த போது இறைச்சிக்கறி குறைந்த அளவே சட்டிக்குள் காணப்பட்டுள்ளது. இதன் பின்னர் ஏற்பட்ட வாய்த் தர்க்கம் கைகலப்பாக மாறியுள்ளது. இறைச்சியைத் தின்று தீர்த்ததாக கூறி நண்பன் மணலுக்குள் உருட்டி எடுக்கபட்டுள்ளான். அவனது வாய்க்குள் நிறை வெறியில் நின்ற ஏனைய நண்பர்களால் மணல் மண் அள்ளி திணிக்கப்பட்டதாக தெரியவருகின்றது. அதன் பின்னர் மூச்சுத்திணறல் ஏற்படவே குறித்த நண்பனை ஏனையவர்கள் சேர்த்து தென்மராட்சியில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் அனுமதித்து பின்னர் அவன் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரியவருகின்றது. நண்பனின் நுரையீரலுக்குள் மணல் சென்றுள்ளதாக தெரிவித்தே தற்போது சிகிச்சை பெற்று வருகின்றார். இச் சம்பவம் தொடர்பாக தற்போது அலுவலக ரீதியாக விசாரணைகள் நடைபெற்று வருவதாக தெரியவருகி்றது.
0 comments:
Post a Comment