நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Friday, December 15, 2023

கனடாவில் 10 டொலருக்கு ஒரு துண்டு காணி | Ontario Town To Sell Off Plots Of Land For Just 10


கனடாவில் 10 டொலருக்கு ஒரு துண்டு காணி!

புதிய வீடுகளை நிர்மானிப்பதற்காக குறைந்த விலையில் காணிகளை விற்பனை செய்யும் திட்டமொன்று கனடாவில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இதன்படி, கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தின் சிறிய நகரமொன்றில் ஒரு துண்டு காணி பத்து டொலர்களுக்கு விற்பனை செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பெருந்தொகைக்கு விற்பனை செய்யப்படக்கூடிய காணிகளே இவ்வாறு சிறு தொகையில் விற்பனை செய்யப்பட உள்ளதாகவும் எதிர்வரும் ஆண்டு இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் கோச்ரானின் மேயர் பீட்டர் பொலிடிஸ் தெரிவித்துள்ளார்.

நகரின் சனத்தொகை

ரொறன்ரோவிலிருந்து சுமார் 7 மணித்தியால பயண தூரத்தில் அமைந்துள்ள கோச்சரான் என்னும் நகரில் இவ்வாறு காணி விற்பனை செய்யப்பட உள்ளது.

நகரின் சனத்தொகையை அதிகரிக்கும் வகையில் இவ்வாறு குறைந்த விலையில் காணிகள் வழங்கப்படும் என மேயர் பீட்டர் பொலிடிஸ் குறிப்பிட்டுள்ளார். 

0 comments:

Post a Comment