பிரித்தானியாவில் சவுத் வேல்ஸ் மருத்துவமனையில் உடல் ஒன்று தவறுதலாக கைமாறிய பிறகு குடும்பம் ஒன்று தவறான உடலை தகனம் செய்துள்ளது.
தவறான உடலை தகனம் செய்த குடும்பம்
பிரித்தானியாவின் தெற்கு வேல்ஸில் Cwmbran பகுதியில் உள்ள கிரேஞ்ச் பல்கலைக்கழக மருத்துவமனையின் சவக்கிடங்கில் இருந்து குடும்பத்துடன் தொடர்பு இல்லாத நபர் ஒருவரிடம் இறந்தவர்களின் உடலை கொடுத்த பின்னர், இறந்தவர்களின் உறவினர்கள் தவறான உடலை தகனம் செய்துள்ளனர்.
மூன்று வாரங்களுக்கு முன்பு தவறான உடலை தகனம் செய்த பிறகு, உறவினரின் உடலுக்கு பதிலாக தவறுதலாக வேறு ஒருவரின் உடல் கொடுக்கப்பட்டது என்பது தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் பின்னர் தெரிய வந்துள்ள நிலையில், சம்பந்தப்பட்ட குடும்பத்தினரிடம் சுகாதார வாரியம் மன்னிப்பு கேட்டுள்ளது.
மேலும் சம்பந்தப்பட்ட குடும்பத்திடம் அன்புக்குரியவரின் உரிய உடலை ஒப்படைத்த பிறகு இரண்டாவது முறையாக குடும்பம் தங்கள் அன்புக்குரியவரின் உடலை தகனம் செய்துள்ளனர்.
மருத்துவமனை விளக்கம்
இந்த சம்பவம் தொடர்பாக மருத்துவமனை தரப்பு வழங்கிய தகவலில், இந்த தவறுக்கு ஆழ்ந்த வருத்தம் தெரிவித்து கொள்கிறோம், மேலும் இது விதிவிலக்கான வழக்கு மற்றும் தனித்துவமான சம்பவம் என்று தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில் குடும்பத்திற்கு தவறான உடலை வழங்கியது தொடர்பாக உள்ளக விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment