நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Thursday, December 14, 2023

பிரித்தானியாவில் திடீர் தீ விபத்து:கண்டெடுக்கப்பட்ட மனித உடல்! | Uk South Wales Treforest Fire Accident Body Found


பிரித்தானியாவில் திடீர் தீ விபத்து:கண்டெடுக்கப்பட்ட மனித உடல்!
பிரித்தானியாவில் தீ விபத்து நடந்த ட்ரெஃபாரெஸ்டில்(Treforest) பகுதியில் ஒரு உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தெற்கு வேல்ஸில் உள்ள ட்ரெஃபாரெஸ்டில் உள்ள ஒரு தொழிற்பேட்டையில் கடந்த (13) புதன்கிழமை இரவு 7 மணிக்கு பிறகு திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் தீ கட்டுக்குள் கொண்டு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணை

அதனை தொடர்ந்து தேடுதலை தொடர்ந்த காவல்துறையினர் இந்த தீ விபத்தில் சிக்கிய மனிதர் ஒருவரின் சடலத்தை கண்டுப்பிடித்துள்ளனர்.

எனினும் சடலம் முறையாக அடையாளம் காணப்படாமல் உள்ளது.

காணாமல் போனோரின் குடும்பத்தினருக்கு அதிகாரிகள் ஆதரவு தெரிவித்துக்கொள்கின்றோம் என தெரிவித்துள்ளனர்.

விபத்து ஏற்பட்ட பகுதியை சுற்றிய சில இடங்களில் சாலைகள் மீண்டும் திறக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தீவிபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை தெற்கு வேல்ஸ் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

0 comments:

Post a Comment