பிறக்கும் 2024ல் சுமார் 970 மில்லியன் பவுண்டுகள் தொகைக்கான மீன் பிடி வாய்ப்புகளை பிரித்தானியா பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
750,000 டன் அளவுக்கு மீன்
குறித்த தகவலை பிரித்தானியாவின் Defra எனப்படும் சுற்றுச்சூழல், உணவு மற்றும் ஊரக விவகாரங்களுக்கான துறை தெரிவித்துள்ளது. இது 2023ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் சுமார் 70 மில்லியன் பவுண்டுகள் அதிகம் என்றே கூறப்படுகிறது.
வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரித்தானியாவின் மீன் பிடிக்கும் படகுகள் 2024ல் 750,000 டன் அளவுக்கு மீன்களை பிடிக்க வாய்ப்பாக அமையும் என்றும், இது 2023ம் ஆண்டை ஒப்பிடுகையில் சுமார் 80,000 டன் அதிகம் என்றும் கூறப்படுகிறது.
மேலும், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நார்வே உடனான ஒப்பந்தங்கள் ஊடாக 420,000 டன்களுக்கு மீன்பிடி வாய்ப்புகள் கிடைப்பதாகவும், இதன் மதிப்பு 700 மில்லியன் பவுண்டுகள் என்றும் கூறப்படுகிறது.
வெளியிட்டுள்ள அறிக்கை
அத்துடன் மேலும் 270 மில்லியன் பவுண்டுகளுக்கான மீன் பிடி வாய்ப்பும் ஒப்பந்தங்கள் ஊடாக தக்கவைக்கப்பட்டுள்ளது. மேலும் Defra வெளியிட்டுள்ள அறிக்கையில்,
2024க்கான பேச்சுவார்த்தைகளில் இருந்து 120,000 டன்கள் வரை கூடுதல் ஒதுக்கீட்டை ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடாக பிரித்தானியா பெற்றிருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து 2020ல் பிரித்தானியா வெளியேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment