பிரித்தானியாவில் மிகவும் ஆபத்தான இருமல் வேகமாக பரவி வருவதால் 100 நாட்கள் வரையில் அந்த தொற்றுநோய் நீடிக்கும் என சுகாதாரத்துறை நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சளி போன்ற அறிகுறிகளுடன் ஆரம்பித்துள்ள இந்த தொற்றுநோய் அதிகமாக பரவி வருவதுடன் தொற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள் 250 சதவீதத்திற்கும் அதிகமானோர் என , சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றது.
மேலும், இந்த தொற்று நோயானது, கடந்த ஆண்டை விட 3 மடங்கு அதிகரித்துள்ளதுடன் கடந்த 7 மாதங்களில் மட்டும் 716 பேர்கள் தொற்றுநோயிற்கு உள்ளாகியுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடுமையான பிரச்சனைகள்
தொற்று நோய் அதிகரித்து வருவதால், கர்ப்பிணிப் பெண்கள் தங்கள் குழந்தையைப் பாதுகாக்கும் பொருட்டு தடுப்பூசி போடுவதை உறுதி செய்யுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Fast Spreading 100 Day Whooping Cough In Britain
கர்ப்ப காலத்தில் தாய்மார்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வதால், குழந்தைகளை பாதுகாக்கலாம் என கூறப்படுகிறது.
இந்த நோயானது, எளிதில் பரவகூடியதாக உள்ளதுடன் நுரையீரல் மற்றும் தொண்டையை பாதித்து கடுமையான பிரச்சனைகளை ஏற்படுத்தும் என சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை
குறித்த வகை தொற்றுநோயின் மூலம் வரும் இருமலினால் 2015ல் உலகம் முழுவதும் 58,700 பேர் பலியாகியுள்ளதோடு 1990ல் 138,000 மக்கள் மரணமடைந்துள்ளனர் என ஆய்வுகள் தெரிவிக்கின்றது.
நோய் தொற்றின் முதல் அறிகுறி தென்படுவதற்கே 7 தொடக்கம் 10 நாட்கள் ஆகும் எனவும் முதலில் லேசான இருமல் இருக்கும், அதன் பின்னர் மிக மோசமான பாதிப்பினை ஏற்படுத்தும் என சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
0 comments:
Post a Comment