நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Monday, December 4, 2023

யாழில் வாள்வெட்டு கும்பல் அட்டகாசம்: பொலிஸார் துப்பாக்கிப்பிரயோகம்



யாழ்ப்பாணம் - தெல்லிப்பழை பகுதியில் ஹயஸ் ரக வானில் வந்த அடையாளம் தெரியாத குழுவொன்று மோட்டார் சைக்கிள் வந்த இளைஞர் மீது சரமாரியாக வாள்வெட்டு தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகமும் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் இந்த சம்பவம் இன்று ( 04.12.2023) திங்கட்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.



பொலிஸார் துப்பாக்கிப்பிரயோகம்
மோட்டார் சைக்கிளில் இளைஞர்கள் சிலர் தெல்லிப்பழை பகுதியில் பயணித்த போது ஹயஸ் ரக வானில் வந்த வாள்வெட்டு குழுவினர் இளைஞர் ஒருவர் மீது சரமாரியாக வாள்வெட்டு தாக்குதலை நடாத்திவிட்டு மருதனார்மடம் நோக்கி தப்பிச்சென்றுள்ளதாக தெரியவருகின்றது.

பொலிஸ் நிலையம் முன்பாக கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் மோட்டார் சைக்கிளில் வந்த வாள்வெட்டு குழுவினரை துரத்திச்சென்ற போதும் அவர்கள் தப்பிச்சென்றுள்ளதாக கூறப்படுகின்றது.



இதன்போது வானை நோக்கி பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகமும் நடத்தியுள்ளதாகவும் தெரியவருகின்றது.

சம்பவத்தில் காயமடைந்த இளைஞர் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் தெல்லிப்பழை பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 comments:

Post a Comment