லண்டன் சுரங்கப்பாதையில் தூக்கத்தில் இருந்த பெண்ணை சீரழித்த ஒருவர், இன்னொரு பகுதியில் வேறு இருவர் முன்னிலையில் முகம் சுழிக்க வைத்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
சுமார் 3 ஆண்டுகளுக்கு முன்னர்
குறித்த சம்பவம் தொடர்பில் லண்டன் கிரவுன் நீதிமன்றம் 37 வயதான Ryan Johnston என்பவருக்கு தண்டனை வழங்கியுள்ளது. தொடர்புடைய இரு சம்பவங்களும் சுமார் 3 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்துள்ளது என்றே கூறப்படுகிறது.
ஆகஸ்ட் 2ம் திகதி லண்டன் கிரவுன் நீதிமன்றத்தில் வன்கொடுமை, வன்கொடுமை முயற்சி, இரண்டு பிரிவுகளில் வன்கொடுமை மற்றும் பொது கண்ணியத்தை சீர்குலைத்தது உள்ளிட்ட குற்றத்திற்காக நீதிபதி ஒருவரால் Ryan Johnston குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டார்.
தொடர்ந்து அவருக்கு 9 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. 2020 பிப்ரவரி மாதம் அதிகாலை 4.45 மணிக்கு Piccadilly line ரயிலில் இருந்து குடியிருப்புக்கு திரும்பிய பெண்கள் இருவர் முன்னிலையில் Ryan Johnston முகம் சுழிக்க வைக்கும் செயலில் ஈடுபட்டுள்ளார்.
பயத்தில் அலறியபடி ஓட்டமெடுத்த இருவரும் ஒருவழியாக பத்திரமாக வீடு சேர்ந்துள்ளனர். ஆனால் கத்தியபடி ரியான் ஜான்ஸ்டன் துரத்தியதுடன், அவர்கள் குடியிருப்பு வாசலை ஓங்கி அறைந்துள்ளார். பின்னர் அங்கிருந்து வெளியேறியதாக கூறப்படுகிறது.
பிறக்கும் புத்தாண்டில் பல ஆயிரம் கோடிகளுக்கான மீன் பிடி வாய்ப்பை தக்கவைத்த பிரித்தானியா
பிறக்கும் புத்தாண்டில் பல ஆயிரம் கோடிகளுக்கான மீன் பிடி வாய்ப்பை தக்கவைத்த பிரித்தானியா
சுமார் 3 மணி நேரத்திற்கு பின்னர் ஹீத்ரோ டெர்மினல் ஐந்து பகுதியில் இருந்து Piccadilly line ரயிலில் ரியான் ஜான்ஸ்டன் பயணித்துள்ளார். அப்போது தூக்கத்தில் இருந்த ஒரு இளம் பெண் பயணியை அவர் நெருங்கியுள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண்
பின்னர் தொடர்புடைய பெண்ணை வன்கொடுமைக்கு இரையாக்கியுள்ளார். இந்த சம்பவத்தை அதே ரயிலில் பயணம் செய்த ஒரு சுற்றுலாப்பயணியும் அவரது மகனும் நேரில் பார்த்துள்ளனர். அவர்களே நடந்த சம்பவத்தை பொலிசாருக்கு புகாராக தெரிவித்துள்ளனர்.
ஆனால் கண்காணிப்பு கெமராவில் இந்த சம்பவம் பதிவாகாத நிலையில், பாதிக்கப்பட்ட பெண் அல்லது அவர் தொடர்பான எந்த தகவலும் இன்றி விசாரணை அதிகாரிகள் குழம்பிப் போயுள்ளனர்.
இந்த நிலையில் சுமார் 2 ஆண்டுகளுக்கு பின்னர் பிரித்தானிய போக்குவரத்து பொலிசார் முன்னெடுத்த விசாரணையின் முடிவில் ரியான் ஜான்ஸ்டன் அடையாளம் காணப்பட்டார்.
இதனையடுத்து 2022 டிசம்பர் மாதம் அவர் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து பாதிக்கப்பட்டவரையும் அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர். சம்பவம் நடக்கும் போது குறித்த பெண்ணிற்கு 20 வயது என்றே கூறப்படுகிறது.
0 comments:
Post a Comment