சுவிட்சர்லாந்தில் புகலிடக்கோரிக்கை மையம் ஒன்றில் தங்கியிருந்த புலம்பெயர்ந்தோர் ஒருவர், தன் பிள்ளைகள் கண்முன்னே மனைவியை கொடூரமாக குத்திக் கொலை செய்த வழக்கில் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மனைவியை 165 முறை கத்தியால் குத்திய புலம்பெயர்ந்தோர்
ஆப்கன் நாட்டவர் ஒருவர் தன் மனைவி மற்றும் ஐந்து பிள்ளைகளுடன் சுவிட்சர்லாந்தின் Bern மாகாணத்திலுள்ள Büren நகரில் அமைந்துள்ள புகலிடக்கோரிக்கை மையம் ஒன்றில் தங்கியிருந்துள்ளார்.
கடந்த ஆண்டு, அதாவது, 2022ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம், 38 வயதான அவரது மனைவி அவரிடம் விவாரத்து கோரவே, ஆத்திரமடைந்த அவர் தனது பிள்ளைகள் கண்முன்னே மனைவியை கத்தியால் குத்தியுள்ளார்.
165 முறை அவர் மனைவியைக் கத்தியால் குத்த, பிள்ளைகள் வேண்டாம் அப்பா என அலறித் துடித்தும், அந்த கத்தி அவரது கையையே காயப்படுத்தி, இனி குத்தமுடியாது என்னும் நிலை வரும் வரை அவர் தன் மனைவியைக் குத்தியுள்ளார்.
அந்தப் பெண் பரிதாபமாக பலியாக, நீதிமன்றத்தில் தான் தன் மனைவியைக் கொலை செய்யவில்லை என மறுத்துள்ளார் அவர்.
ஆனால், நடந்ததைக் கண்ணால் பார்த்த அவரது பிள்ளைகள் அப்பாவுக்கெதிராக சாட்சியமளிக்க, பிள்ளைகள் அலறித் துடித்ததைக் கண்ட மற்றொருவர் சாட்சியமளிக்க, அந்த சாட்சியை மேலும் இருவர் உறுதி செய்ய, குற்றவாளி கைது செய்யப்பட்டார்.
தண்டனை அறிவிப்பு
திங்கட்கிழமை முதல் Biel நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடந்துவந்த நிலையில், தற்போது, இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மனைவியை கொடூரமாக கொலை செய்த ஆப்கன் நாட்டவரான அந்த நபருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், தண்டனைக்காலம் முடிந்ததும், அவர் தன் சொந்த நாட்டுக்கு நாடுகடத்தப்பட உள்ளார்.
0 comments:
Post a Comment