ஜேர்மனி, ஜேர்மன் குடியுரிமை பெறுவதையும், இரட்டைக் குடியுரிமையை அனுமதிப்பதையும் எளிதாக்கும் வகையிலான சட்டம் ஒன்றைக் கொண்டுவர உள்ளது.
இப்படிப்பட்ட ஒரு சூழலில், குடியுரிமைக்கு இப்போது விண்ணப்பிப்பதா அல்லது குடியுரிமைச் சட்டம் நிறைவேற்றப்பட்டபின் விண்ணப்பிப்பதா என ஜேர்மன் குடியுரிமை பெற காத்திருப்பவர்களுக்கு ஒரு கேள்வி எழுந்துள்ளது.
குடியுரிமைக்கு இப்போது விண்ணப்பிக்கலாமா அல்லது குடியுரிமைச் சட்டம் நிறைவேற்றப்பட்டபின் விண்ணப்பிக்கலாமா?
ஜேர்மன் குடியுரிமை பெற காத்திருக்கும் வெளிநாட்டவர்கள் இப்போது குடியுரிமைக்கு விண்ணப்பிக்கவேண்டுமானால், பெரும்பாலானவர்கள் எட்டு ஆண்டுகள் ஜேர்மனியில் வாழ்ந்திருக்கவேண்டும், ஜேர்மன் மொழித்திறனில் B1 மட்டத்தில் தகுதிபெற்றவர்களாக இருக்கவேண்டும்.
ஜேர்மனியில் ஆறு ஆண்டுகள் வாழ்ந்திருந்தால், ஜேர்மன் மொழித்திறனில் B2 மட்டம் அல்லது அதைவிட அதிக தகுதிபெற்றவர்களாக இருக்கவேண்டும்.
Message For German Citizenship
ஐரோப்பிய ஒன்றியத்தாரல்லாதவர்களுக்கு இவை தவிர்த்து இன்னும் ஒரு பெரிய கேள்வி, சொந்த நாட்டின் குடியுரிமையை இழப்பதா அல்லது தக்கவைத்துக்கொள்வதா என்பதுதான் அது.
ஆனால், அடுத்த ஆண்டு ஏப்ரலில் அமுலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படும் புதிய சட்டம் அனைத்து வெளிநாட்டவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை அளிக்க உள்ளது. ஐந்து ஆண்டுகள் ஜேர்மனியில் வாழ்ந்திருந்தாலே, அவர்கள் B1 மட்டத்தில் மொழித்திறன் கொண்டிருந்தால் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம். C1 மட்டத்தில் மொழித்திறன் கொண்டிருந்தால் மூன்று ஆண்டுகளிலேயே குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம்.
ஆகவே, வெளிநாட்டவர்கள் பெரும்பாலானோர் மனதில் ஒரு கேள்வி எழுந்துள்ளது. குடியுரிமைக்கு இப்போது விண்ணப்பிக்கலாமா அல்லது குடியுரிமைச் சட்டம் நிறைவேற்றப்பட்டபின் விண்ணப்பிக்கலாமா என்பதுதான் அது.
அந்தக் கேள்விக்கு மூன்று Optionகள் உள்ளன.
Option 1: சட்டம் நிறைவேறும் வரை காத்திருக்கலாம்.
ஏனென்றால், அடுத்த ஏப்ரலில் எப்படியாவது சட்டத்தை நிறைவேற்றுவது என ஜேர்மன் அரசு திட்டமிட்டுவருகிறது.
Option 2: குடியுரிமை ஆலோசனைக்கு முன்பதிவு செய்யுங்கள், ஆனால், விண்ணப்பிப்பதற்கு காத்திருங்கள்
குடியுரிமை பெறுவதற்கான வேலையைத் துவங்கலாம். ஆனால், சட்டம் நிறைவேறும் வரை, ஆவணங்களை தயாராக வைத்துகொண்டு காத்திருக்கலாம்.
Option 3: முடிந்தவரை விரைவாக விண்ணப்பத்தை அனுப்பலாம்
இன்னொரு ஐந்து மாதங்கள் நீங்கள் காத்திருக்க விரும்பவில்லையென்றால், உங்கள் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படும் முன் சட்டம் நிறைவேறிவிடலாம் என்ற நம்பிக்கையுடன் விண்ணப்பிக்கலாம்.
ஆக, ஆரம்ப கட்ட ஆலோசனைக்கு முன்பதிவு செய்துவிட்டு, நீங்கள் என்னென்ன ஆவணங்களை கொடுக்கவேண்டியிருக்குமோ, அவற்றையெல்லாம் தயாராக வைத்துக்கொண்டு, தேவையானால், மொழித்திறனை வளர்த்துக்கொள்ள தயாராகலாம். சட்டம் நிறைவேறியதும், குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம்
0 comments:
Post a Comment