சென்னையில் நடக்கவிருந்த யாழ்ப்பாணத்தவர்களின் திருமணம் ஒன்று குளறுபடியில் முடிந்துள்ளது. தென்மராட்சிப் பகுதியைச் சேர்ந்த 36 வயதான செல்வராசா ஜெகன் என்பவருக்கும் வடமராட்சி கிழக்குப் பகுதியைச் சேர்ந்த செல்வி (பெயர் மாற்றம்) எனும் 27 வயது யுவதிக்கும் தமிழ்நாடு சென்னையில் கடந்த 2ம் திகதி திருமணம் நடக்க ஆயத்தமானது. இந் நிலையில் ஒரு வாரத்துக்கு முன்னரே மாப்பிளை, பெண்வீட்டைச் சேர்ந்த இருதரப்பும் அங்கு சென்று தங்கிருந்துள்ளனர். மாப்பிளையான ஜெகனுக்கு பெற்றோர் இல்லை. ஒரே ஒரு சகோதரியே உள்ளார். அவரும் பிரான்சில் வசித்து வந்துள்ளார். ஜெகனின் சகோதரி குடும்பமும் ஜெகனின் தாய் மாமன் குடும்பமுமாக 10 பேர் அடங்கிய உறுப்பினர்கள் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளார்கள். அதே போல் பெண்ணின் பெற்றோர் மற்றும் சகோதரங்கள் உட்பட்ட உறவுகள் 14 பேர் இன்னொரு வீட்டில் தங்கியிருந்துள்ளார்கள். ஜெகன் கடந்த மாதம் 26ம் திகதியே பிரான்சில் இருந்து சென்னை வந்துள்ளார். அதன் பின்னரே அவரது உறவுகள் சென்னை வந்துள்ளார்கள்.
ஆனால் பெண் மற்றும் அவர்களது உறவுகள் அங்கு ஏற்கனவே வந்து தங்கியிருந்துள்ளார்கள். விமான நிலையத்தில் இறங்கிய ஜெகனை வரவேற்க மணப்பெண்ணும் சென்றுள்ளார். பெண்ணைக் நேரில் சந்தித்த ஜெகன் தான் தங்கப் போகும் ஹோட்டல் அறைக்கு தனியே வருமாறு அழைத்துள்ளார். ஆனால் பெண்ணுடன் வந்த உறவுகள் அதற்கு சம்மதிக்காது ஹோட்டல் வரவேற்பு ஹோலில் மட்டும் சந்திக்க வைத்த பின்னர் பெண்ணை மீண்டும் தம்முடன் கூட்டிச் சென்றனர்.
அடுத்த நாள் காலையிலிருந்து ஜெகன் மணமகளுக்கு தன்னை சந்திக்கி அறைக்கு வருமாறு தொடர்ச்சியான அழுத்தத்தை கொடுக்க தொடங்கினார். இது தொடர்பாக ஜெகனின் உறவுகளுக்கு பெண்ணின் உறவுகள் கூறி திருமணத்தின் பின்னரே தனிய சந்திப்பது அழகு என கூறியதாக தெரியவருகின்றது. ஜெகனின் உறவுகளும் ஜெகனுக்கு அதை கூறியும் ஜெகன் கேட்கவில்லை. பெண்ணுடன் முக்கிய விடயம் கதைக்க வேண்டும் என கூறி பெண்ணை தனியே அறையில் சந்திக்க விடாப்பிடியாக இருந்ததாகத் தெரியவருகின்றது. இதனால் சங்கடமான பெண்ணின் உறவுகள் வேறு வழியில்லாது பெண்ணி்ன தாய் மற்றும் இளைய சகோதரியுடன் பெண்ணை ஜெகன் இருந்த ஹோட்டலுக்கு கடந்த மாதம் 29ம் திகதி காலை 8 மணியளவில் அனுப்பியுள்ளனர். ஹோட்டல் வரவேற்பு ஹோலில் தாய் மற்றும் சகோதரியை இருக்கச் சொல்லிவிட்டு பெண்ணை மட்டும் ஜெகன் தனியே தனது அறைக்கு அழைத்துச் சென்றதாகத் தெரியவருகின்றது.
ஜெகன் தங்கியிருந்த ஹோட்டல் அறையில் அசாதாரணமாக பெண்ணின் குக்குரல் கேட்கவே அருகில் இருந்த அறையில் இருந்தவர்கள் இது தொடர்பாக ஹோட்டல் நிர்வாகத்துக்கு அறிவித்துள்ளனர். உடனடியாக அந்த அறைக்கு சென்ற ஹோட்டல் ஊழியர்கள் அரைகுறையான ஆடையுடன் நின்ற பெண்ணை மீட்டுள்ளனர். இதன் பின்னர் அங்கு கலோபரம் நடந்தது. பொலிசாருக்கு ஹோட்டல் நிர்வாகத்தினர் அறிவிக்க முற்பட்ட போது பெண்ணின் தாய் அதற்கு மறுப்பு தெரிவித்து பெண்ணை அழைத்துச் சென்றுள்ளார்.
அதன் பின்னர் பெண்ணின் உறவுகள் பெண்ணிடம் நடாத்திய விசாரணையில் பெண்ணை அறைக்குள் அழைத்துச் சென்ற ஜெகன் பெண்ணின் கற்பை பரிசோதிக்க முற்பட்டதாக பெண் தெரிவித்தார். தான் திருமணத்துக்கு முதல் யாருடனும் உறவு கொள்ளவில்லை என்றும் அதே போல் நீயும் இருக்கிறாயா என தான் அறிய வேண்டும் என்றும் கலியாணம் கட்டப் போகின்றோம்தானே… என்னை பரிசோதிக்க விடு என ஜெகன் கட்டாயப்படுத்தியதாக பெண் கூறியுள்ளார். இதற்கு பெண் மறுப்பு தெரிவித்த போது ஜெகன் தன்னை தகாத வார்த்தைகளால் ஏசியதுடன் கட்டாயப்படுத்தி தன்னை கட்டிலில் தள்ளி ஆடைகளைக் களையத் தொடங்கியதாக பெண் தெரிவித்துள்ளார்.
இதன் பின்னர் 2ம் திகதி நடைபெறவிருந்த திருமண ஏற்பாடுகளில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இருதரப்பைச் சேர்ந்தவர்களும் மாறி மாறி குற்றச்சாட்டுக்களை சுமத்திக் கொண்டு அங்கு நிற்பதாக தெரியவருகின்றத. ஜெகனின் சகோதரி ஜெகனுக்கு சார்பாக நடந்து கொண்டிருப்பதாகவும் திருமணம் நடக்க வேண்டும் என்றால் குறித்த பெண் தனக்கு கன்னித்தன்மை உள்ளது என உறுதிப்படுத்த வேண்டும் என ஜெகன் கூறிக் கொண்டு இருப்பதாகவும் தெரியவருகின்றது. தமது பிள்ளையின் எதிர்காலம் வெளிநாட்டு மாப்பிளையால் சீர்குலைந்துள்ளதாக பெண்ணின் பெற்றோர் அழுவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
0 comments:
Post a Comment