பிரித்தானிய பொதுத்தேர்தலில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தும் விதமாக, Brexit Champion என்று அழைக்கப்படும் Nigel Farage போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளார்.
இவரது அறிவிப்பு, ஆளும் ரிஷி சுனக்கின் பழமைவாதிகளுக்கு பெரும் குழப்பத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.
பிரித்தானியாவில் மிகவும் திறமையான சொற்பொழிவாளர் மற்றும் ஆர்வலர்களில் ஒருவராகக் கருதப்படும் நைஜல் ஃபரேஜ், ஜூலை 4-ம் திகதி பிரித்தானிய பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ளார்.
பிரெக்சிட்டின் "கட்டமைப்பாளரும்" மற்றும் பிரித்தானிய அரசியலில் நிரந்தர சீர்குலைக்கும் சக்தியுமான நைஜல் ஃபரேஜ், தென்கிழக்கு இங்கிலாந்தில் உள்ள கிளாக்டனில் உள்ள யூரோஸ்கெப்டிக் தொகுதியில் Reform UK கட்சியின் வேட்பாளராக நிற்கும் தனது விருப்பத்தை அறிவித்துள்ளார் .
இதற்கு முன் ஏழு முறை போட்டியிட்டு, ஒருமுறைகூட நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்றாலும், இந்த தேர்தலில் மிகப் பாரிய மாற்றத்தை உண்டாக்கலாம் என கூறப்படுகிறது.
அவரது சீர்திருத்தப் பிரச்சாரத்தின்மூலம் மக்களிடையே புதிய ஆற்றலைப் புகுத்தலாம் என்றும், இதனால் ஆளும் கன்சர்வேடிவ் கட்சி அதன் நீண்ட கால வாக்காளர்களை இழக்க நேரிடும் என்றும் கூறப்படுகிறது.
இது, கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவரும் பிரதம மந்திரியான ரிஷி சுனக்கிற்கு ஒரு பயத்தையும், புதிதாக ஒரு தலைவலியை உண்டாக்கலாம் என நம்பப்படுகிறது.
Brexit Champion Nigel Farage, UK Elections, Risi Sunak, Conservative Party UK, Reform UK Party, UK July 4 general election, UK general election
0 comments:
Post a Comment