ஜேர்மனி(Germany) நாட்டுக்குள் சட்ட விரோதமாக நுழைந்த ஆப்கானிஸ்தான் நாட்டினைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினரை போலந்துக்கு திருப்பி அனுப்பியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஐந்து பேர் அடங்கிய ஆப்கானிஸ்தான் குடும்பம் ஒன்று, தாங்கள் புகலிடம் கோரியிருந்த போலந்து நாட்டிலிருந்து ஜேர்மன் எல்லையைக் கடந்து ஜேர்மனிக்குள் நுழைந்துள்ளது.
தேவையான ஆவணங்கள்
இதன்போது அவர்களிடம் தேவையான ஆவணங்கள் எதுவும் இல்லாததால், அவர்களை ஜேர்மன் அதிகாரிகள் மீண்டும் போலந்து நாட்டுக்கே திருப்பி அனுப்பிவிட்டதாக ஒரு செய்தி வெளியானது.
Germany Which Sent Back Migrants
இது தொடர்பில் உடனடியாக போலந்து நாடு அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அந்த அறிக்கையில், ஜேர்மன் பொலிஸார் வெளிநாட்டவர்களை போலந்துக்கு திருப்பி அனுப்பியது இருநாடுகளுக்குமிடையிலான ஒத்துழைப்புக் கொள்கைகளையும், இடமாற்ற சட்டத்தையும் மீறும் செயலாகும்.
இப்படி ஜேர்மன் அதிகாரிகள் தன்னிச்சையாக ஒரு முடிவை எடுத்திருக்கக்கூடாது என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, போலந்து பிரதமரான Donald Tusk, தான் இந்த ஏற்றுக்கொள்ள இயலாத சம்பவம் தொடர்பாக ஜேர்மன் சேன்ஸலரான ஓலாஃப் ஷோல்ஸுடன் விவாதிக்க இருப்பதாக கூறியுள்ளார்.
ஜேர்மன் அதிகாரிகள் அந்த ஆப்கானிஸ்தான் குடும்பத்தை போலந்துக்குள் திருப்பி அனுப்புவதன் நோக்கம் குறித்து தங்களுக்குத் தெரிவிக்கவில்லை என போலந்து அதிகாரிகள் புகார் தெரிவித்துள்ளார்கள்.
ஆனால், அந்த குடும்பத்தினரை போலந்து அதிகாரிகளிடம் ஒப்படைப்பதற்காக தாங்கள் போலந்து அதிகாரிகளை தொடர்பு கொள்ள முயன்றும், பல மணி நேரத்திற்கு போலந்து தரப்பிலிருந்து எந்த பதிலும் வராததால், அந்த குடும்பத்தை போலந்து எல்லைக்குள் அனுப்பிவிட்டதாக ஜேர்மன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment