சர்வதேச மாணவர்களுக்கான விசா கட்டணத்தை அவுஸ்திரேலியா கணிசமாக உயர்த்தியுள்ளது.
710 டொலராக இருந்த கட்டணம், இன்று (ஜூலை 1) முதல் 1,600 டொலராக, அதாவது 125 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்தவே அவுஸ்திரேலிய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
மேலும், பார்வையாளர் விசா (visitor visa) வைத்திருப்பவர்கள் மற்றும் தற்காலிக பட்டதாரி விசாவில் (temporary graduate visas) உள்ள மாணவர்கள் மாணவர் விசாக்களுக்கு (Student Visa) விண்ணப்பிப்பதும் தடைசெய்யப்பட்டுள்ளது.
Australia foreign student visa fee hikes, Australia migration, Studies in Australia, Australia student visa
மார்ச் மாதம் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி, செப்டம்பர் 30, 2023 வரையிலான ஆண்டில் அவுஸ்திரேலியாவின் மொத்த குடியேற்றம் 548,800-ஆக (60%) உயர்ந்துள்ளது.
மாணவர் விசாக்களுக்கு அமெரிக்கா சுமார் 185 டொலர் வசூலிக்கிறது, கனடா 110 டொலர் வசூலிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கட்டண உயர்வுக்கு கூடுதலாக, வெளிநாட்டு மாணவர்களை அவுஸ்திரேலியாவில் தங்க அனுமதிக்கும் ஓட்டைகளையும் அரசாங்கம் மூடுகிறது.
அவுஸ்திரேலியாவில், 2022-23ல், இரண்டாவது அல்லது அடுத்தடுத்த மாணவர் விசாவை வைத்திருக்கும் மாணவர்களின் எண்ணிக்கை 30 சதவீதம் அதிகரித்துள்ளது.
கோவிட்-க்கு பிந்தைய கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதன் மூலம், வருடாந்திர இடம்பெயர்வுகளில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
இதைத் தடுக்கும் வகையில் கடந்த ஆண்டு இறுதியில் இருந்து மாணவர் விசா விதிகள் கடுமையாக்கப்பட்டன. மார்ச் மாதத்தில், விசாக்களுக்கான ஆங்கில மொழித் தேவைகள் மேலும் கடுமையாக்கப்பட்டன.
மே மாதத்தில், மாணவர் விசாவைப் பெறுவதற்குத் தேவையான வங்கி இருப்பு ஆஸ்திரேலிய $24,505ல் இருந்து A$29,710 ஆக உயர்த்தப்பட்டது.
0 comments:
Post a Comment