யாழ் போதனாவைத்தியசாலை விடுதி ஒன்றில் பணியாற்றி வந்த பெண் ஊழியர் ஒருவரை அங்கு கடமையிலிருந்து வைத்தியர் தகாத முறையில் ஏசியதாக விடுதியில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுவரும் நோயாளர் ஒருவர் தனது முகப்புத்தகத்தில் பதிவு செய்து பின்னர் அந்தப் பதிவினை அகற்றியுள்ளார். குறித்த பெண் ஊழியர், அர்ச்சுனா தனது பேஸ்புக்கில் வெளியிட்ட வீடியோக்களை விடுதியில் வைத்து பார்த்துக் கொண்டிருந்த போது அங்கு திடீரென வந்த வைத்தியர் குறித்த பெண் ஊழியரை கடுமையான வார்த்தைகளால் ஏசியதாகத் தெரியவருகின்றது. ”அவன் ஒரு பேஸ்புக் பைத்தியம். லைக் வருவதற்காக இப்படி செய்கின்றான். அவன் ஒரு சைக்கோ… அவனை வேலையிலிருந்து நிறுத்தப் போகின்றார்கள்.
அவ்வாறான ஒருவனின் வீடியோக்களை நீ பார்த்துக் கொண்டா இருக்கிறாய். இங்க இருக்காமல் அவனோட போய்ப் படு” என மிகவும் தரக்குறைவான வார்த்தைகளால் குறித்த வைத்தியர் தாதியை ஏசியதாக முகப்புத்தகத்தில் குறித்த நபர் வெளியிட்டு தாதியை வைத்தியர் ஏசும் ஒரு சில விநாடிகள் அடங்கிய வீடியோவையும் வெளியிட்டிருந்தார். நண்பர்களுக்கிடையே குறித்த வீடியோவை அவர் பதிவு செய்திருந்ததால் அதை தரவிறக்கம் செய்ய முடியவில்லை ஆனால் ஏராளமானவர்கள் அவரது வீடியோவை பகிா்ந்து கொண்டிருந்த போது அந்த பதிவு உடனடியாக அகற்றப்பட்டதாக தெரியவருகின்றது. இதே நேரம் அந்த நோயாளரின் முகப்புத்தகமும் மற்றவர்கள் பார்க்கமுடியாதவாறு காணப்படுவது குறிப்பிடத்தக்கது.
சாவகச்சேரி ஆதாரவைத்தியசாலை பொறுப்பதிகாரியான அர்ச்சுனா தற்போது யாழ்ப்பாண மக்களின் கதாநாயகன் ஆக குறிப்பாக பெண்கள் மத்தியில் மிகவும் விருப்பத்துக்குரிய கதாநாயகனாக மாறிவிட்டார். ஏராளமான யுவதிகள் அர்ச்சுனாவின் புகைப்படத்தை தமது வட்சப், பேஸ்புக் புறபைல்களில் வைக்கும் அளவுக்கு போய்விட்டது நிலமை. அவரை எதிரியாக கருதிய அரசவைத்திய அதிகாரி சங்கத்தைச் சேர்ந்த சிலரே அவரை அவ்வாறு கதாநாயகன் ஆக்கியுள்ளார்கள். வைத்தியர்கள் கூறுவது போல் அர்ச்சுனா பேஸ்புக் பைத்தியமாக இருந்தாலும், அவரை அறியாது அவரது கவர்ச்சியான பேச்சுக்களில் மயங்கி அவருக்கு ஆதரவு கொடுப்பவர்கள் இருந்தால், ஆதரவாக நிற்கும் வைத்தியத்துறை சார்ந்தவர்களை, வைத்தியர்கள் அடக்கி ஒடுக்குவது வைத்தியர்களுக்கே ஆபத்தாக அமையும்.
அர்ச்சுனா தனது உயரதிகாரிகள் தொடர்பாக கூறிய ஊழல்கள் தொடர்புடைய குற்றச்சாட்டுக்கள் பொய்யாக இருக்கலாம். அவரது செயற்பாடுகள் தன்னை பிரபலமாக்குதற்காக இருக்கலாம். ஆனால் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தைச் சேர்ந்த ஒரு சிலர் அவருக்கு எதிராக எடுத்த நடவடிக்கைகள் யாழ்ப்பாண மக்களை கடும் கோபத்துக்கு உள்ளாகியுள்ளது உண்மை. உயரதிககாரிகள் மற்றும் ஏனைய மருத்துவர்கள் தொடர்பாக அர்ச்சுனா கூறும் குற்றச்சாட்டுக்கள் இனிவரும் காலம் நடக்கப் போகும் விசாரணைகளில் இருந்து உறுதியாகினால் அர்ச்சுனா உண்மையில் கதாநாயகனே…இல்லாவிட்டால் அவரும் பத்துடன் பதினொன்றாக கருதப்படவேண்டிய ஒரு பேஸ்புக் பைத்தியமே…..
0 comments:
Post a Comment