நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Tuesday, September 3, 2024

மதுரங்குளி காதலர்களுக்கிடையே ஏற்பட்ட ஊடல்!! இருவரும் தமது வீடுகளில் தற்கொலை!!


மதுரங்குளி காதலர்களுக்கிடையே ஏற்பட்ட ஊடல்!! இருவரும் தமது வீடுகளில் தற்கொலை!!

காதலர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறை தொடர்ந்து இருவரும் தத்தமது வீடுகளில் தற்கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

புத்தளம், மதுரங்குளி, முக்குதொடுவாய் பகுதியைச் சேர்ந்த நில்ஷானி சுமோதிகா என்ற 19 வயதுடைய யுவதியும், காதலனுமே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

உடப்பு, சின்னப்பாடு பிரதேசத்தில் வசிக்கும் 20 வயதுடைய லசிது லிவேரா என்ற இளைஞன் தற்கொலை செய்து கொண்ட யுவதியுடன் நெருங்கி பழகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இருவரும் பாடசாலைக்காலம் முதல் காதல் உறவில் இருந்துள்ளனர்.

லசிது கடந்த 27ஆம் திகதி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக உடப்பு பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த இளைஞனின் மரணத்தால் அதிர்ச்சியடைந்த 19 வயதுடைய நில்ஷானி சில நாட்களுக்குப் பிறகு அதாவது கடந்த 30ஆம் திகதி காதலன் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதைப் போன்று தற்கொலை செய்துகொண்டதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

இருவரும் சில காலமாக உறவில் இருந்துள்ளனர், அந்த உறவின் போது இருவரிடையே ஏற்பட்ட பிரிவினையால் பல சந்தர்ப்பங்களில் காதல் முறிந்தது. தகராறுகளின் தொடர்ச்சியாக காதலன் தற்கொலை செய்தார். அதை தொடர்ந்து காதலியும் தற்கொலை செய்துள்ளார்.

0 comments:

Post a Comment