This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

50% OFFICERS 👇👇🔴👇👇

50% OFFICERS 👇👇🔴👇👇
I found this great deal on Daraz! Check it out! Product Name: Classic Turkish Lucky Evil Eye Bracelets for Men Women Blue Evil Eye Palm Butterfly Pendant Beads Bangles Handmade Charm Jewelry Product Price: Rs.640 Discount Price: Rs.320

நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Tuesday, December 31, 2024

புத்தாண்டு 2025: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான புத்தாண்டு பலன்கள்.. முழு விவரம் இதோ !!


மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான புத்தாண்டு பலன்கள்.. புத்தாண்டு பிறக்க இன்னும் சில நாட்களே உள்ளன. வரும் புத்தாண்டு பல்வேறு மாற்றங்களைத் தரும் என்ற நம்பிக்கையில் ஒவ்வொருவரும் இருப்பீர்கள். அந்த வகையில், 12 ராசிக்காரர்கள் எந்தெந்த விஷயங்களைச் செய்தால் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்..​

மேஷ ராசி: மேஷ ராசிக்காரர்களுக்கு 2025 புத்தாண்டில் ஏழரைச் சனி ஆரம்பமாகிறது. எந்த செயல்களைச் செய்தாலும் அதில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். புதிய அனுபங்கள் உண்டாகும். குடும்ப வாழ்க்கையிலும், பணியிடங்களிலும் அனுசரித்துச் செல்வது நன்மை பயக்கும். வலிமையான உறவை அவர்களிடம் வளர்த்துக் கொள்ள வேண்டும். இது உங்களுடைய வளர்ச்சிக்கும், முன்னேற்றத்துக்கும் உதவியாக இருக்கும். புதிய தொழில், புதிய வியாபாரம், புதிய வாய்ப்புகள் ஏற்படும் ஆண்டாக இருக்கும்.

“​ரிஷப ராசி: 2025 ஆம் ஆண்டில் ரிஷப ராசிக்காரர்கள் சரியான திட்டமிடலுடனும், பொறுமையுடனும் இருப்பது அவசியம். கடினமான காலகட்டங்களைச் சமாளிக்கும் வகையில் ஒழுக்கத்துடனும், கட்டுப்பாட்டுடனும், சரியான முடிவை எடுத்தால் வெற்றி வாகை சூடுவீர்கள். கடந்த காலங்களில் செய் தவறுகளில் இருந்து பாடத்தைக் கற்றுக் கொள்வீர்கள். உங்களுக்கென உள்ள தனித் திறமையையும், தனித்துவத்தையும் கடைப்பிடிப்பது அனுகூலத்தை உண்டாக்கும்.

மிதுன ராசி: இந்தப் புத்தாண்டு மிதுன ராசிக்காரர்களுக்கு செழிப்பான ஆண்டாக இருக்கும். இருப்பினும், அனைத்து செயல்களிலும் கவனத்துடன் இருப்பதும் அவசியம். உங்களுடைய இலக்கை அடைய சரியான திட்டமிடலும், விழிப்புணர்வும் மிகவும் அவசியம். பண வரவு உண்டாகும். பணத்தை சரியாக சுப விரயமாக செய்வது நல்லது. தொழில், பணி, கல்வி சார்ந்த புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்வது நல்லது. அறிவுப்பூர்வமான விஷயங்களில் கவனம் செலுத்துவதால் ஆதாயம் உண்டாகும். உங்களுடைய இலக்குகளை அடைய இவை உதவியாக இருக்கும்.

கடக ராசி: புத்தாண்டில் கடக ராசியினருக்கு அஷ்டம சனி விலகவுள்ளதால் புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். உறவுகள் இணக்கமாக நடந்து கொள்வார்கள். எந்தவொரு செயலைச் செய்தாலும் நிதானமாக நடந்து கொள்வதால் மகிழ்ச்சி மற்றும் மனநிறைவு உண்டாகும். இந்தப் புத்தாண்டு மகத்தான ஆண்டாக அமையும்.

சிம்ம ராசி: 2025 புத்தாண்டில் சிம்ம ராசிக்காரர்கள் நேர்மறை எண்ணங்களுடன் செயல்பட்டால் உங்களுடைய வாழ்க்கையில் ஏற்படும் அனைத்து தடைகளையும் சமாளிக்கலாம். நிதானமாகவும், கடின உழைப்புடனும் செயல்பட வேண்டிய து அவசியம். நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்திலும் ஆர்வம் கூடும். படைப்பாற்றல் உங்களுக்கு அதிகரிக்கும்.

கன்னி ராசி: 2025 ஆம் ஆண்டில் கன்னி ராசிக்காரர்கள் செய்யும் செயல்களில் உறுதியுடன் இருப்பது நல்லது. வேலையில் அடுத்தகட்டமாக முன்னேறுவது நல்லது. கடந்த காலங்களில் மிகவும் சோர்ந்து போய் காணப்பட்ட நீங்கள் மிகவும் வலிமையாக உணர்வீர்கள்.

துலாம் ராசி: இந்தாண்டு துலாம் ராசிக்காரர்களின் மீது குருவின் பார்வை விழுவதால் பல்வேறு நற்பலன்களைத் தரும் ஆண்டாக இருக்கும். பல விதத்தில் சாதகமான பலன்கள் தந்தாலும், வாகனங்களில் செல்லும் போது கவனமாக இருக்க வேண்டும். சுய பாதுகாப்பு மற்றும் நினைவாற்றல், மன அமைதி பெறுவதில் கவனம் செலுத்துவது நல்லது. நீங்கள் நினைத்த அனைத்த காரியங்களும் இந்த ஆண்டில் கைகூடி வரும்.

விருச்சிக ராசி: உங்கள் எண்ணங்களில் தோன்றும் நல்ல காரியங்களை செய்வது நல்லது. புதிய அனுபவங்கள் கிடைக்கும். செய்யும் செயல்களில் ஆர்வத்துடன் செயல்பட்டு பல்வேறு பெரிய பெரிய விஷயங்களை சாதிக்கக்கூடிய ஆண்டாக புத்தாண்டு இருக்கும். உங்களுடைய அறிவாற்றல் உங்களுக்கு தக்கசமயத்தில் கைகொடுக்கும்.

தனுசு ராசி: இந்த 2025 ஆம் புத்தாண்டில் இலக்குகளை நிர்ணயித்து அதை நோக்கிச் செயல்படுவது நல்லது. எடுத்த காரியங்களை ஆர்வத்துடனும், செயல்களை செய்து முடிப்பதில் உந்துதலுடனும் இருப்பீர்கள். எந்த விஷயங்ளைச் செய்தாலும் பொறுமையுடன் செயல்படுவது நல்லது.

மகர ராசி: புத்தாண்டில் மகர ராசிக்காரர்களுக்கு ஏழரைச் சனி முடிகிறது. இந்த மாதத்தில் உங்களுடைய பொறுப்புகள் அதிகரிக்கும். கடந்த காலங்களில் செய்த தவறுகள் மற்றும் இழந்தவற்றை நினைவில் வைத்து, செயல்படுவது அனுகூலத்தை உண்டாக்கும். இதனால், எதிர்காலத்தில் உங்களுக்கு ஒளிமயமான வாழ்க்கை கைவசமாகும்.​

கும்ப ராசி: 2025 புத்தாண்சில் கும்ப ராசியினருக்கு பல்வேறு துன்பங்களை கொடுத்து வந்த ஜென்ம சனி முடிகிறது. இதுவரை நிலவி வந்த அனைத்து பிரச்னைகளும் உங்களை விட்டு விலகும் என்றாலும், வேலைகளில் கவனமாக செயல்படுவது நல்லது. புதிய வியாபாரம், தொழில், முதலீடு விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டாம். உங்களுடைய இலக்கை நிர்ணயித்து அதற்கேற்ற வகையில் செல்வது அனுகூலம் தரும்.

​மீன ராசி: 2025 இல் மீன ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி தொடங்கவுள்ளது. உங்களுடைய திறமைகளை அறிந்து அதற்கேற்ப செயல்பட்டால் நீங்கள் நினைத்த காரியங்கள் கைகூடும். யோகா, தியானம் செய்வது நல்லது. மன அமைதி மற்றும் உடல்நலனி் கவனம் செலுத்துவது நல்லது. எந்த வேலைகளைச் செய்தாலும் அதில் கடின உழைப்பைத் தர வேண்டியதிருக்கும்.

சத்தியமூர்த்தி தொடர்பாக அர்ச்சுனா தெரிவித்த கருத்துக்கள் உண்மை!! நீதிமன்றில் அருச்சுனா தரப்பு வாதம்!!


சத்தியமூர்த்தி தொடர்பாக அர்ச்சுனா தெரிவித்த கருத்துக்கள் உண்மை!! நீதிமன்றில் அருச்சுனா தரப்பு வாதம்!!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் அருச்சுனா இராமநாதன் கூறிய விடயங்கள் உண்மையே என அருச்சுனா சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணி , யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் அருச்சுனா இராமநாதனிடம் 100 மில்லியன் ரூபாய் நஷ்ட ஈடு கோரி யாழ் . போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தி யாழ். மாவட்ட நீதிமன்றில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

வழக்காளியான வைத்திய நிபுணர் சத்தியமூர்த்தி தொடர்பில் அவருக்கு அவதூறாக எதிராளி வைத்தியர் இராமநாதன் அசர்ச்சுனாவினால் செல்லப்பட்ட விடயங்கள் மற்றும் கடந்த 09ஆம் திகதி இராமநாதன் அர்ச்சுனா வைத்தியசாலைக்குள் நுழைந்து வைத்திய நிபுணர் சத்தியமூர்த்தியுடன் சில வார்த்தை பிரயோகங்களை மேற்கொண்டு, அவருடன் பிணக்கிற்கு உட்பட்ட விடயங்கள் தொடர்பிலும், அன்றைய தினத்தில் இராமநாதன் அர்ச்சுனா தன்னுடைய முகப்புத்தகத்தில் வெளியிட்ட காணொளி ஊடாக அவதூறு பரப்பப்பட்டதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு இன்றைய தினம் திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது , எதிராளியான நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அருச்சுனா சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணி , தனது கட்சிக்காரர் கூறிய விடயங்கள் அனைத்தும் உண்மை எனவும் , அவற்றை மன்றில் நிரூபிக்க தயாராக இருக்கிறோம் என மன்றில் தெரிவித்தார்.

அந்நிலையில் குறித்த வழக்கு எதிர்வரும் 15ஆம் திகதிக்கு விசாரணைக்காக திகதியிடப்பட்டுள்ளது.

யாழில் ரயிலின் முன் பாய்ந்த பெண்ணால் பரபரப்பு!! படுகாயங்களுடன் மீட்கப்பட்ட பின் நடந்தது என்ன?


யாழில் ரயிலின் முன் பாய்ந்த பெண்ணால் பரபரப்பு!! படுகாயங்களுடன் மீட்கப்பட்ட பின் நடந்தது என்ன?

யாழில் புகையிரதத்தின் முன் பாய்ந்து உயிரை விட முயன்ற பெண்ணொருவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் இன்று (31) காலை யாழ்ப்பாணம் – மிருசுவில் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
யாழ்ப்பாணத்தில் இருந்து அநுராதபுரம் நோக்கிப் பயணித்த புகையிரதத்தின் முன்பாக தென்மராட்சி, மிருசுவில் பகுதியில் பெண்ணொருவர் பாய்ந்து உயிரைவிட முனைந்துள்ளார்.

எனினும் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்ட அவர், கொடிகாமம் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு , அங்கிருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.

Sunday, December 29, 2024

தாயின் மருந்தை குடித்த 2 வயது குழந்தைக்கு நேர்ந்த சோகம்!!


தாயின் மருந்தை குடித்த 2 வயது குழந்தைக்கு நேர்ந்த சோகம்!!

பாதத்தில் ஏற்பட்ட வலிக்காக தாய்க்கு கொண்டு வந்த வலி நிவாரணி மருந்தை சிறு குழந்தையொன்று குடித்து உயிரிழந்துள்ளது.

புத்தளம்-கல்லடி பிரதேசத்தில் வசிக்கும் 2 வயது 7 மாத வயதுடைய மூன்று பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தின் இளைய பிள்ளையான எஸ்.ஏ.வினுக மந்தித் என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

மூன்று பிள்ளைகளையும் உறவினர் வீட்டுக்கு அழைத்துச் செல்ல பெற்றோர்கள் தயார்படுத்திக் கொண்டிருந்த வேளையில், யாருக்கும் தெரியாமல் உயரமான இடத்தில் வைக்கப்பட்டிருந்த தாயின் பாத வலிக்கான திரவ நிவாரணி மருந்தை சிறு குழந்தை எடுத்துச் சென்றுள்ளது.

அதன் பின்னர் மூடியை கழற்றி குழந்தை குடித்துக்கொண்டிருந்ததை அவதானித்த தந்தை, உடனடியாக அதை அங்கிருந்து அகற்றியதாக தெரிவிக்கப்படுகிறது.

பின்னர், பெற்றோர் குழந்தையை பரிசோதித்தபோது, ​​சம்பந்தப்பட்ட வலி நிவாரணி திரவம் குழந்தை குடித்துள்ளதா என்பதை உறுதி செய்ய முடியவில்லை.

எனினும், பெற்றோர் குழந்தையை பாலாவியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அங்கு பரிசோதனை செய்த மருத்துவர், குறித்த வலி நிவாரணி திரவம் குழந்தையை மயக்கமடையச் செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஆனால் குழந்தைக்கு ஒவ்வாமை ஏற்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு சம்பந்தப்பட்ட மருத்துவர் அறிவுறுத்தியுள்ளார்.

எனினும், பெற்றோர்கள் குழந்தையுடன் மாதம்பே நோக்கிச் சென்று கொண்டிருந்த வேளையில், முந்தலம் அருகே குழந்தையின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது, பெற்றோர் குழந்தையை முந்தலம் பிரதேச வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

முந்தலம் வைத்தியசாலையில் குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தையை உடனடியாக அம்பியூலன்ஸ் மூலம் சிலாபம் பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர், சிலாபம் மருத்துவமனையில், குழந்தையின் ஆபத்தான நிலை பரிசோதிக்கப்பட்டு, மருத்துவ ஊழியர்களுடன் அம்பியூலன்ஸ் மூலம் கொழும்பில் உள்ள லேடி றிஜ்வே சிறுவர் மருத்துவமனைக்கு குழந்தையை அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டது.

எனினும், குழந்தை றிஜ்வே சிறுவர் மருத்துவமனையை நெருங்கிய தருணத்தில் அம்பியூலன்ஸில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

குழந்தையின் மரணம் தொடர்பான பிரேத பரிசோதனையை தடயவியல் மருத்துவம் மற்றும் நச்சுயியல் நிறுவகத்தின் உதவி சட்ட வைத்திய அதிகாரி ஜானக பொலொன்வெல மேற்கொண்டுள்ளார்.

இந்த மரணம் மெத்தில் சாலிசிலேட் உட்கொண்டதால் ஏற்பட்டதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிரேத பரிசோதனையின் பின்னர் குழந்தையின் சடலம் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Friday, December 27, 2024

தாயின் கள்ளக்காதலனால்13வயது கௌசல்யா பலி!! நடந்தது என்ன?


தாயின் கள்ளக்காதலனால்13வயது கௌசல்யா பலி!! நடந்தது என்ன?

தாயின் கள்ளத்தொடர்பு காரணமாக 13 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்த சம்பவம் ஒன்று பிலியந்தலை பிரதேசத்தில்  பதிவாகியுள்ளது.

தாய்க்கும் கள்ளக்காதலனுக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் தலையிட்டதில் கத்திக்குத்துக்கு இலக்காகி குறித்த சிறுமி உயிரிழந்துள்ளார்.

நேற்று (26) பிற்பகல் 1 மணியளவில் இடம்பெற்ற இந்த துரதிஷ்டவசமான சம்பவத்தில் பிலியந்தலை போகுந்தர பிரதேசத்தில் இரண்டு மாடி வீடொன்றின் மேல் மாடியில் வசித்து வந்த இரண்டு பெண் பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தில் இளையவரான பி.எம். ஓஷாதி கௌசல்யா என்ற சிறுமியே உயிரிழந்துள்ளார்.

இவர் பிலியந்தலை ஆனந்த சமரக்கோன் கல்லூரியில் 8ஆம் தரத்தில் கல்வி கற்கும் சிறுமியாவார்.

சம்பவ தினம் ஓஷாதி தனது தாய் மற்றும் 15 வயது மூத்த சகோதரியுடன் வீட்டில் இருந்ததாகவும், அப்போது தாயின் கள்ளக்காதலன் வீட்டிற்கு வந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பெண்ணுடன் அதே நிறுவனத்தில் குறித்த நபர் பணிபுரிவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அவ்வாறு வந்த நபர் வீட்டில் இருந்த பெண்ணுக்கு வேறு ஒருவருடன் கள்ளத் தொடர்பு இருப்பதாக குறிப்பிட்டுள்ள நிலையில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

பின்னர் குறித்த நபர் அந்த பெண்ணை கத்தியால் பல தடவைகள் குத்தியுள்ள நிலையில், தாயை காப்பாற்ற குறித்த இரண்டு சிறுமிகளும் குறுக்கிட்டு அதனை தடுத்துள்ளனர்.

இதன்போது சந்தேக நபர் அவர்களையும் கத்தியால் தாக்கியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

பின்னர், சந்தேக நபர் தூக்கிட்டு தற்கொலை செய்ய முயன்றுள்ள போதும், அதற்கு பயன்படுத்தப்பட்ட கயிறு அறுந்தததால் அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது.

பின்னர் கீழே இருந்தவர்களிடம் பொலிசில் சரணடைவதாக கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியேறினார்.

காயமடைந்த தாய் மற்றும் இரண்டு மகள்கள் தாய் பணிபுரிந்த அதே நிறுவனத்தின் ஊழியர் ஒருவரால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இவ்வாறு வெரஹெர இராணுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் ஆபத்தான நிலையில் இருந்த 13 வயதான ஓஷாதி கௌசல்யா உயிரிழந்துள்ளார்.

பொலிஸில் சரணடைவதாகக் கூறிவிட்டு தப்பிச் சென்ற சந்தேக நபர் தற்போது தலைமறைவாகியுள்ள நிலையில், அவரைக் தேடி கல்கிஸ்ஸ குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், குறித்த சந்தேக நபர் சில வருடங்களுக்கு முன்னர் மஹாஓயா பிரதேசத்தில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேகநபராக பெயரிடப்பட்டவர் என தெரியவந்துள்ளது.

சர்வதேச பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட தம்பதியினர் கட்டுநாயக்கவில் கைது | International Warrant Couple Arrested Colombo


சர்வதேச பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட தம்பதியினர் கட்டுநாயக்கவில் கைது
சர்வதேச பொலிஸாரால் சிவப்பு எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்ட  தம்பதியினர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இருவரையும், விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

1.6 பில்லியன் ரூபா நிதி மோசடி குற்றச்சாட்டில் சர்வதேச பொலிஸாரால் சிவப்பு எச்சரிக்கை குறித்த தம்பதியினருக்கு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

நீதிமன்றில் முன்னிலை

இதற்கமைய சந்தேக நபர்களான கணவனும் மனைவியும் வியாழக்கிழமை (26) இந்தியாவிலிருந்து கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த போது குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

சர்வதேச பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட தம்பதியினர் கட்டுநாயக்கவில் கைது | International Warrant Couple Arrested Colombo

சந்தேக நபர்கள் நேற்று கொழும்பு புதுக்கடை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் அவர்களை எதிர்வரும் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

160 கோடி மோசடி 

பிரிவெல்த் குளோபல் எனும் நிதி நிறுவனமொன்றை நடத்தி வந்துள்ள சந்தேக நபர்கள் அதிக இலாபத்தை பெற்றுத்தருவதாக்கூறி 160 கோடி ரூபாவுக்கும் அதிக பணத்தை மோசடி செய்துள்ளனர்.

இது தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப கட்ட விசாரணைகளில் குறித்த நிதி நிறுவனத்தின் பணிப்பாளர் அவரது மனைவி மற்றும் பிள்ளைகள் 2021 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு சட்ட விரோதமான முறையில் கடல் மார்க்கமாக தப்பிச் சென்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Thursday, December 26, 2024

மின் கட்டணத் திருத்தம்: பொதுமக்களுக்கு கிடைத்துள்ள இறுதி வாய்ப்பு | Public Consultation On Electricity Tariff Revision


மின் கட்டணத் திருத்தம்: பொதுமக்களுக்கு கிடைத்துள்ள இறுதி வாய்ப்பு
மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பான பொதுமக்கள் கருத்து கணிப்புகள் இன்று முதல் மாகாண மட்டத்தில் ஆரம்பிக்கப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அதன்படி, மத்திய மாகாணத்தில் இன்றையதினம் கண்டி மாவட்ட செயலக வளாகத்தில் இந்த நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளன.

மேலும், ஊவா மாகாணத்திற்கு எதிர்வரும் 30ஆம் திகதியும், சப்ரகமுவ மாகாணத்திற்கு ஜனவரி 3ஆம் திகதியும் பொதுமக்களின் கருத்துக் கணிப்பு நடத்தப்படவுள்ளது.

இறுதித் தீர்மானம்

மேல்மாகாணத்திற்கான மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பான பொதுமக்கள் கருத்துக்கள் ஜனவரி 10ஆம் திகதி பண்டாரநாயக்க மாநாட்டு மண்டப வளாகத்தில் நடைபெறவுள்ளது.

மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாது என்ற மின்சார சபையின் யோசனைக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு பதில் அளிப்பதாக அறிவித்துள்ளதாகவும், மின்சாரக் கட்டணங்கள் தொடர்பான இறுதித் தீர்மானம் ஜனவரி 17ஆம் திகதி அறிவிக்கப்படும் எனவும் ஆணைக்குழு முன்னர் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

திருகோணமலை கடற்பரப்பில் தோன்றிய ஆளில்லா விமானம்: விசாரணையில் விமானப்படை | Foreign Made Drone Discovered By Fisherman Trinco


திருகோணமலை கடற்பரப்பில் தோன்றிய ஆளில்லா விமானம்: விசாரணையில் விமானப்படை
திருகோணமலை கடற்பரப்பில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஆளில்லா விமானமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆளில்லா விமானம் தொடர்பில்  இலங்கை விமானப்படை மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக விமானப்படை ஊடகப் பேச்சாளர் எரந்த கிகனகே தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஆளில்லா விமானத்தை திருகோணமலை கடற்பரப்பில் கடற்றொழிலாளர் ஒருவர் கண்டுபிடித்துள்ளார்.

மேலதிக விசாரணை

அதனை தொடர்ந்து கரைக்கு கொண்டுவரப்பட்ட ஆளில்லா விமானம் , காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து, மேலதிக விசாரணைக்காக விமானப்படை தளத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இந்த நிலைியல், இது தொடர்பில் தென்னிலங்கை ஊடகமொன்று கருத்து தெரிவித்துள்ள விமானப்படை ஊடகப் பேச்சாளர் எரந்த கிகனகே, “குறித்த ஆளில்லா விமானம் விமானப்படையின் பயிற்சி மற்றும் தாக்குதல் விமானங்களை இலக்காகக் கொண்ட விமானங்களின் பிரதியாக பயன்படுத்தப்படும் ஆளில்லா விமானம்.” என தெரிவித்துள்ளார்.

இதன்படி, கண்டு பிடிக்கப்பட்ட ஆளில்லா விமானம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, சில ஆண்டுகளுக்கு முன்பு, இதேபோன்ற ஆளில்லா விமானம் இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் இருந்து நாட்டிற்கு வந்ததாகவும் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.

கனடாவில் குடியுரிமை பெற விண்ணப்பிக்கும் விதிமுறையில் அதிரடி மாற்றம் | Change In Canada Citizenship Rules


கனடாவில் குடியுரிமை பெற விண்ணப்பிக்கும் விதிமுறையில் அதிரடி மாற்றம்
கனடா(canada) குடியுரிமை விதிமுறையில் மாற்றம் செய்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.

கனடாவில் நிரந்தர குடியுரிமை பெறுவதற்கு எக்ஸ்பிரஸ் என்ட்ரி என்ற நடைமுறை உள்ளது. எக்ஸ்பிரஸ் என்ட்ரி முறையில் கனடா குடியுரிமை பெறுவதற்கு விண்ணப்பிக்கும்போது, ஒவ்வொருவருக்கும் அவர்களது கல்வி, வேலை உள்ளிட்டவற்றின் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்படும்.அதிக மதிப்பெண்கள் பெறுபவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும்.

மதிப்பெண்கள், கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது

கனடாவில் வேலை பார்ப்பதற்கான நிறுவனம் அளிக்கும் நியமன உத்தரவு கடிதத்துக்கு, 50 முதல் 200 புள்ளிகள் வரை கொடுக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் கனடா குடியுரிமை விதிமுறையில் மாற்றம் செய்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி நியமன கடிதத்துக்கான மதிப்பெண்கள், இனி கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது ஏற்கனவே விண்ணப்பித்துள்ளோர் மற்றும் காத்திருப்போருக்கு பொருந்தாது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

போலி உத்தரவு கடி தங்கள் மூலம் பலர் விண்ணப்பிப்பதால், மோசடிகளை தடுக்க, பணி உத்தரவு கடிதங்களுக்கான மதிப்பெண்களை கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை என்று முடிவு செய்துள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Wednesday, December 25, 2024

கிளிநொச்சியில் நடந்த விபத்தில் 2 வயது சிறுமி உயிரிழப்பு.. தாய், தந்தை, மகன் படுகாயம்..


கிளிநொச்சியில் நடந்த விபத்தில் 2 வயது சிறுமி உயிரிழப்பு.. தாய், தந்தை, மகன் படுகாயம்..

கடவுளே..🙏😥 கிளிநொச்சி விபத்தில் சிக்கிய குடும்பம்..!

மது போதையில் விபத்தை ஏற்படுத்தி அவ்விடத்தில் இருந்து கிட்டத்தட்ட 200m அப்பால் பாதையை விட்டு வெளியே நிற்கும் டிப்பர் வாகனம்.

அம்மா, அப்பா 02 குழந்தைகள் என்று அறியப்படுகிறது, தந்தை ஆசிரியர் என அறியப்படுகிறது

கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் 2 வயது குழந்தை உயிரிழந்ததுடன் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் படுகாயமடைந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விபத்து சம்பவம் இன்றிரவு (25-12-2024) 7.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

கிளிநொச்சியில் பரிதாபமாக உயிரிழந்த குழந்தை... மூவர் தீவிர சிகிச்சைப் பிரிவில்! | Accident In Kilinochchi Child Die 3 Admitted Icu

விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

A9 வீதியால் பயணித்த ரிப்பர் வாகனம் குறித்த மோட்டார் சைக்கிளை மோதி விபத்தினை ஏற்படுத்தியதுடன், விபத்து இடம்பெற்ற பகுதியில் இருந்து சுமார் 100 மீட்டர் பாதையை விட்டு விலகி யுள்ளது.0

விபத்தில் சிக்கிய மோட்டார் சைக்கிளையும் ரிப்பர் வாகனம் குறிப்பிட்ட அளவு தூரம் இழுத்து சென்றுள்ளதுடன், தொழிற்பயிற்சி நிறுவனத்தின் விளம்பர பலகை மற்றும் தொலைத்தொடர்பு கம்பம் உள்ளிட்டவற்றையும் சேதப்படுத்தியுள்ளது.

சம்பவத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்த 2 வயது குழந்தை உயிரிழந்ததுடன் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை மற்றும் 6 வயதுடைய சிறுவன் படுகாயமடைந்த நிலையில், கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலும், ரிப்பர் வாகனத்தை செலுத்திய சாரதி மதுபோதையில் இருந்ததாக சம்பவ இடத்தில் நின்ற மக்கள் குறிப்பிடுகின்றனர்.

விபத்து தொடர்பில் ரிப்பர் வாகன சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பூர்வாங்க விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Tuesday, December 24, 2024

யாழில் தையல்கடைக்காரியை படுக்கைக்கு கூப்பிட்ட பொலிஸ்காரன் நையப்புடைப்பு!!


யாழில் தையல்கடைக்காரியை படுக்கைக்கு கூப்பிட்ட பொலிஸ்காரன் நையப்புடைப்பு!!

காங்கேசன்துறை பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பெண்ணொருவரை மதுபோதையில் பாலியல் உறவுக்கு அழைத்தமையினால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து அப்பகுதியிலுள்ள இளைஞர்களால் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் நையப்புடைக்கப்பட்டு காங்கேசன்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது, காங்கேசன்துறை பொலிஸ் நிலைய உத்தியோகத்தர் ஒருவர் இன்று காலை மாவிட்டபுரம் தையலகத்தில் தைப்பதற்கு கொடுத்த சீருடையை எடுப்பதற்கு மது போதையில் சென்று தையலகத்தில் பணிபுரியும் பெண்களுடன் தன்னுடன் பாலியல் உறவுக்கு வருமாறு வற்புறுத்தியுள்ளார்.

தொடர்ந்து குறித்த கடைக்கு வந்த இரு யுவதிகளிடமும் தன்னுடன் பாலியல் உறவுக்கு வருமாறு கொச்சைத் தமிழில் கேட்டுள்ளார்.

அதனால் ஆத்திரமடைந்த குறித்த பெண் தனது கணவருக்கு தொலைபேசியில் தெரிவித்த நிலையில், மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில் பொலிஸ் உத்தியோகத்தர் நையப்புடைக்கபட்டு பொதுமக்களால் முச்சக்கரவண்டி மூலம் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளார்.

இந்நிலையில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி குறித்த பெண்ணை விசாரிக்க முற்பட்ட போது தன்னிடம் கார் உள்ளதாகவும் நீங்கள் அழகாக உள்ளீர்கள் என்னுடன் பாலியல் இச்சைக்கு வருகிறாயா ? என கேட்டு மதுபோதையில் கலகம் செய்ததாக அப்பெண் கூறினார். இதேவேளை பெண்ணின் உறவினர் தன்னிடம் காணொளியும் உள்ளதாக தெரிவித்தார். உடனே குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் குறித்த பெண்ணின் கணவன் மீது பொலிஸ் நிலையத்தில் வைத்து தாக்குதல் நடாத்தினார்.

உடனடியாக பொலிஸார் குறித்த உத்தியோகத்தரை தடுத்து நிறுத்திய நிலையில் பொறுப்பதிகாரி தனது அறையினுள் பாதிக்கப்பட்டவர்களை அழைத்து சமரசம் செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். அதனை அடுத்து குறித்த விடயம் மனித உரிமை ஆணைக்குழுவிற்கு அறிவிக்கப்பட்டு பாரபட்சமற்ற விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு யாழ். பிராந்திய மனித உரிமை ஆணைக்குழுவின் த.கனகராஜ் அறிவுறுத்தியுள்ளார்.

தற்போது இது குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
யாழ் செய்திகள்.

யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் சாரதி, நடத்துனருக்கு கத்திக்குத்து!


யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் சாரதி, நடத்துனருக்கு கத்திக்குத்து!

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் சாரதிக்கும், நடத்துனருக்கும் கத்திக் குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இன்று (24) இரவு இந்த சம்பவம் நடந்தது.

மத்திய பேருந்து நிலையத்துக்கு அருகில் உள்ள சிற்றுண்டிச்சாலைக்குள் இந்த சம்பவம் நடந்தது.

யாழ்ப்பாணம், காரைநகர் சாலைகளை சேர்ந்த சாரதியும், நடத்துனருமே தாக்குதலுக்கு இலக்காகினர்.

ஹெல்மெட் அணிந்து முகத்தை மூடிக்கொண்டு வந்த 3 பேர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

Monday, December 23, 2024

யாழில் இரண்டு பிள்ளைகளின் இளம் தந்தை விபரீத முடிவால் உயிரிழப்பு !


யாழில் இரண்டு பிள்ளைகளின் இளம் தந்தை விபரீத முடிவால் உயிரிழப்பு !  

இரண்டு பிள்ளைகளின் இளம் தந்தை ஒருவர் இன்று  இரவு விபரீத முடிவால் உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோண்டாவில் பகுதியில்   இன்று திங்கட்கிழமை  இரவு 11:00 மணியளவில்  இரண்டு பிள்ளைகளின் தந்தையான பூலோவர்  ரமேஷ் வயது 42 என்ற இளம் குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்

 சடலம் யாழ் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது  மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் இச் சம்பவம் அப்பகுதியில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது

யாழில் பைக்கில் ஜி.பி.எஸ் பொருத்தி லண்டன் அங்கிளுடன் சேர்த்து மனைவியைப் பிடித்த ஐயர்!!


யாழில் பைக்கில் ஜி.பி.எஸ் பொருத்தி லண்டன் அங்கிளுடன் சேர்த்து மனைவியைப் பிடித்த ஐயர்!!

யாழ் வலிகாமம் பகுதியில் கோவில் ஒன்றின் குருக்கள் தனது மனைவியை லண்டனிலிருந்து வந்த அங்கிள் ஒருவருடன் வீடு ஒன்றில் வைத்து கையும் மெய்யுமாக பிடித்துள்ளார். வலிகாமம் பகுதியில் உள்ள கோவில் ஒன்றின் சொந்தக்காரரான குறித்த ஐயரின் மனைவி அரச ஊழியராக பணியாற்றி வருகின்றார். ஐயரின் கோவில் திருவிழா ஒன்றின் உபயகாரரான லண்டனில் வசிக்கும் தமிழ் குடும்பஸ்தர் ஒருவர் குறித்த கோவிலுக்காக நண்கொடைகளை வழங்கி வந்துள்ளார். அத்துடன் ஐயரின் மனைவியின் ஒத்துழைப்புடன் அறக்கொடை நிதியம் ஒன்றையும் ஆரம்பித்துள்ளார். அத்துடன் புலம்பெயர் தேசங்களில் இருப்பவர்களிடம் நிதி வசூலித்து அறக்கொடை ஊடாக அப்பகுதியைச் சேர்ந்த ஏழைகளின் பிள்ளைகளுக்கு கல்வி வசதிக்காக சில உதவிகளையும் குறித்த லண்டன் குடும்பஸ்தர் செய்து வந்துள்ளாராம். இந்த உதவிகளை கோவில் ஐயரின் மனைவி ஊடாகவே குறித்த குடும்பஸ்தர் செய்து வந்துள்ளார்.

லண்டன் குடும்பஸ்தருடன் இரவில் தொடர்ச்சியாக வட்சப்பில் தனது மனைவி கதைப்பது தொடர்பாக கோவில் ஐயருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே தனது மனைவி மீது ஐயருக்கு சந்தேகம் இருந்ததாக தெரியவருகின்றது. கோவில் திருவிழாவுக்கு உதவிகள் செய்யவரும் இளைஞன் ஒருவனுடன் தனது மனைவி தொடர்ச்சியாக நட்பில் இருப்பதாக தெரிவித்து குறித்த இளைஞனுடன் முரண்பட்டு கோவிலுக்கு இளைஞனை வர தடையும் விதித்திருந்தார் ஐயர். இதன் பின்னர் ஐயர் தனது மனைவியைக் கண்காணிக்கத் தொடங்கியதாக தெரியவருகின்றது. மனைவியின் மோட்டார் சைக்கிளுக்குள் இரகசியமாக ஜி.பி.எஸ் கருவியை ஐயர் பொருத்தி மனைவியின் நடமாட்டத்தை அவதானித்து வந்துள்ளார். மனைவி வங்கிக்கு வேலைக்காக செல்வது தொடங்கி வீடு வந்து சேரும் வரையான மனைவியின் போக்குவரத்து நடவடிக்கைகளை ஐயர் வீட்டிலிருந்தே அவதானித்து வந்துள்ளார்.

இவ்வாறான நிலையில் லண்டன் குடும்பஸ்தருடன் மனைவி வட்சப்பில் தொடர்பு கொண்டு கதைப்பதையும் சந்தேகக் கண்ணுடன் அவதானித்து வந்துள்ளார் ஐயர். கடந்த வாரம் லண்டன் குடும்பஸ்தர் யாழ்ப்பாணம் வந்துள்ளார். இதன் பின்னர் ஐயர் மும்முரமாக மனைவியை அவதானிக்கத் தொடங்கியதாக தெரியவருகின்றது. கடந்த வியாழக்கிழமை மனைவி அலுவலகம் செல்வதாக கூறிச் சென்றுள்ளார். நண்பகலின் பின் மனைவியின் இருப்பிடம் அலுவலகத்திற்கு அப்பால் வேறு ஒரு பகுதியைக் காட்டிக் கொண்டிருந்ததை ஐயர் அவதானித்துள்ளார். அதன் பின் அலேட்டான ஐயர் குறித்த ஜி.பி.எஸ் கருவி காட்டிய அடையாளத்தை வைத்து மனைவி தங்கி நின்ற வீட்டை கண்டு பிடித்து அவளது மோட்டார் சைக்கிளை அவதானித்து தன்னுடன் வந்த இன்னொரு உறவுக்காரரான ஐயருடன் வீட்டுக்குள் புகுந்ததாக தெரியவருகின்றது.

குறித்த வீடு லண்டனிலிருந்து வந்த குடும்பஸ்தரால் நாள் வாடகைக்கு எடுக்கப்பட்ட வீடு என தெரியவருகின்றது. இந் நிலையிலேயே ஐயரும் உறவுக்காரனும் அங்கு புகுந்து மனைவியை லண்டன் குடும்பஸ்தருடன் பிடித்துள்ளார்கள். அங்கு கை கலப்பு உருவாகியுள்ளது. லண்டன் குடும்பஸ்தரும் ஐயரின் மனைவியும் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார்கள். குறித்த வீட்டில் சச்சரவுகள் இடம்பெற்றதால் அயலவர்கள் அங்கு திரண்டனர். அதன் பின்னர் அங்கு நடந்தவற்றை அறிந்து அவர்கள் சண்டையில் தலையிடாமல் விலகிச் சென்றுள்ளார்கள். தாக்குதலுக்கு உள்ளாகிய மனைவியை ஐயர் மோட்டார் சைக்கிளில் ஏற்றி சென்றுள்ளார். அதன் பின்னர் தாக்குதலுக்கு உள்ளான குறித்த வீட்டுக்கு பொலிசார் வந்து விசாரணைகளை மேற்கொண்டதாகத் தெரியவருகின்றது.

நேற்று முன்தினம் லண்டன் குடும்பஸ்தரை தாக்கிய குற்றச்சாட்டில் பொலிசார் ஐயரையும் மனவைியையும் விசாரித்துள்ளார்கள். லண்டன் குடும்பஸ்தரின் அறக்கொடை நிதியக் கணக்கு வழக்குகளை தெரிவிக்கவே தான் குறித்த குடும்பஸ்தர் வீட்டுக்கு சென்றதாகவும் அதனை தனது கணவன் தவறாக எடுத்து தாக்கியதாகவும் மனைவி முறைப்பாடு கொடுத்ததுடன் லண்டன் குடும்பஸ்தர் கணவன் மீது போட்ட முறைப்பாட்டை மீளப் பெறுமாறு கேட்டு முறைப்பாட்டை மீளப்பெற்றுள்ளார். பொலிசாரின் விசாரணையின் போதே ஐயர் தனது மனைவியின் மோட்டார் சைக்கிளில் ஜி.பி.எஸ் கருவியைப் பொருத்திய விடயம் தெரியவந்ததாக பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொலிசாரின் விசாரணைகளின் போது ஐயருக்கு 49 வயது எனவும் ஐயரின் மனைவிக்கு 33 வயது எனவும் இருவரும் 11 வருடங்களு்ககு முன் திருமணம் ஆகி 2 குழந்தைகளும் உள்ளது எனவும் தெரியவருகின்றது. திருமணம் முடித்த பின்னரே ஐயரின் மனைவி பட்டதாரியாக பட்டம் பெற்றார் எனவும் தெரியவருகின்றது. லண்டன் குடும்பஸ்தரும் ஐயரின் வயதானவர் என பொலிசார் தெரிவிக்கின்றனர்.

நோயாளர்களுக்கு நடக்கும் கொடுமைகள்!! அருச்சுனாவைத் தொடர்ந்து வைத்திய நிபுணர் ஒருவரும் பைத்தியதிகாரிகள் சங்கத்திற்கு எதிராக களத்தில் குதித்தார்!!


நோயாளர்களுக்கு நடக்கும் கொடுமைகள்!! அருச்சுனாவைத் தொடர்ந்து வைத்திய நிபுணர் ஒருவரும் பைத்தியதிகாரிகள் சங்கத்திற்கு எதிராக களத்தில் குதித்தார்!!

தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையின் மகப்பேற்று நிபுணரான யோகராசா சிவாகரனின் பேஸ்புக் பக்கத்தில் இருந்த பதிவினை அப்படியே நாம் இங்கு தந்துள்ளோம்…

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை மற்றும் ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலை அவற்றின் தரத்திற்கு ஏற்ற சேவையை வழங்குவதில்லை என்று யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் தனது பேட்டி ஒன்றில் குறிப்பிட்டிருந்தார்.

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு நான்கு வைத்திய நிபுணர்களுக்கான வெற்றிடங்கள் காணப்படும் போதிலும் அவை வருடார்ந்த வைத்திய நிபுணர்களுக்கான இடமாற்றம் பட்டியலில் காட்டப்படாதது ஏன்?

அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உறுப்பினர்களின் உறவுகளை தமது வீட்டு அருகாமையில் உள்ள வைத்தியசாலையில் பணிபுரிய வைப்பதற்காக, சாவச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு நியமனம் பெற்று வரும் வைத்திய நிபுணர்கள் சில நாட்களில் முறையற்ற ரீதியில் சட்டவிரோதமாக தூர இடங்களுக்கு VOP அடிக்கப்படும் என்று பயமுறுத்தப்பட்டு உளவியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டு இடமாற்றம் செய்யப்படுவது சரியா?

மேற்குறிப்பிட்ட ஆதார வைத்தியசாலைகளை தரங்களை ஒத்த கிழக்கிலும் தெற்கிலும் உள்ள வைத்தியசாலைகளில் போதியளவு வைத்திய நிபுணர்கள் நியமிக்கப்படும்போது வடக்கில் உள்ள ஆதார வைத்திய சாலைகளில் வைத்திய நிபுணர்களுக்கான பதவி வெற்றிடங்களும் ஆளணிகளும் உருவாக்கப்படாதது ஏன்? நியமிக்கப்படாதது ஏன்?

இவை அனைத்துக்கும் வட மாகாணத்தையும் யாழ்ப்பாணத்தையும் நிர்வகிக்கின்ற மருத்துவ நிர்வாகிகளின் இயலாமையும் வினைத்திறனின்மையும் அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் அடாவடித்தனமான நடவடிக்கைகளும் தான் காரணம்!

கடைசியில் என்னவோ பாதிக்கப்படுவது அப்பாவி பொதுமக்களே தான்!

வைத்திய நிபுணர்களுக்கான இடமாற்றங்கள் வெற்றிடம் பற்றிய சரியான அறிவு அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உறுப்பினர்களை விட எமக்கு அதிகமாக உள்ளது. எல்லோரையும் முட்டாளாக்க முயற்சி செய்ய வேண்டாம்.

வடக்கு தவிர்ந்த அனைத்து மாகாணங்களிலும் பி தர ஆதார வைத்திய சாலைகளில் வைத்திய நிபுணர்கள் வெற்றிடங்கள் காட்டப்பட்டு நியமிக்கப்படும்போது ஏன் வடக்கில் உள்ள ஆதார வைத்தியசாலைகளில் மட்டும் இந்த வெற்றிடங்கள் காட்டப்படுவது இல்லை?

வடக்கு மாகாணம் தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் உள்ள பல B தர ஆதார வைத்தியசாலைகளில் ஒரு துறையில் ஒன்றுக்கு மேற்பட்ட வைத்திய நிபுணர்கள் பணியாற்றும் போது வடக்கில் உள்ள ஆதார வைத்திய சாலைகளில் வைத்திய நிபுணர்களின் வெற்றிடம் மாற்றப்பட்டியல்களில் காட்டப்படுவது கூட இல்லை. ஏன்?

எந்த ஒரு தொழிற்சங்கமும் இடம் மாற்ற சபையில் இடம்பெறாத போது அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் இடம் மாற்ற சபையில் இருப்பதால் நடக்கும் அநீதிகளும் லஞ்ச ஊழல்களும் பிரசித்தமானவை. அதற்கான விசாரணைகளும் நடைபெற்றன. நடைபெற்று வருகின்றன.

அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் விசேடமாக யாழ்ப்பாண கிளை தமது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப வைத்தியர்களின் இடம் மாற்றத்தில் தலையீடு செய்வது இங்குள்ள சுகாதார நிலைமையை மேலும் மோசமடையவே செய்யும்.

இதே வேளை இவ் வைத்திய நிபுணருக்கு எதிராக பழஞ்சீலை சிவாகரன் என்ற பெயரில் பேக் ஐடி ஒன்று உருவாக்கி  பைத்திய அதிகாரிகள் சங்கத்தைச் சேர்ந்த சிலர் கருத்துத் தெரிவித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது

Sunday, December 22, 2024

யாழ்ப்பாணத்தை உலுக்கும் எலிக் காய்ச்சல்!!


யாழ்ப்பாணத்தை உலுக்கும் எலிக் காய்ச்சல்!!

யாழ்ப்பாணத்தில் கடந்த இரு வார கால பகுதியாக எலிக் காய்ச்சலால் உயிரிழப்புக்கள் ஏற்பட்டு வருவதால் , மக்கள் மத்தியில் ஒரு வித பய உணர்வு ஏற்பட்டுள்ளதுடன், சுகாதார பிரிவினர்கள் அவற்றினை தடுப்பதிலும் சவால்களை எதிர்கொண்டுள்ளனர்.

அண்மைய சில நாட்களில் காய்ச்சல் காரணமாக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு , மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டவர்களில் இது வரையிலான தரவுகளின் அடிப்படையில் 08 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். 121 பேர் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்

உயிரிழந்தவர்களில்  ஒருவர் முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்தவர். ஏனைய ஏழு பேரும் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள்.

 நோய் தொற்றுக்கான காரணம் 

எலிக்காய்ச்சல் என கூறப்படும் லெப்டோஸ்பைரோசிஸ் என்பது ஒரு பாக்டீரியாவினால் ஏற்படும் நோயாகும், இது சூறாவளி அல்லது வெள்ளத்திற்குப் பிறகு மக்கள் அசுத்தமான நீரில் நடந்து அலையும் போது அல்லது அதை குடிக்க அல்லது குளிக்க பயன்படுத்தும் போது பரவும் நோயாகும்.

யாழ்ப்பாணத்தில் கடந்த நவம்பர் மாதம் இறுதி வாரத்தில் பெய்த கடும் மழை காரணமாக வெள்ள அனர்த்தங்கள் ஏற்பட்டிருந்தன. அதனை தொடர்ந்து இந்நோய் பரவல் அதிகரித்துள்ளது.

லெப்டோஸ்பைரோசிஸ் பாக்டீரியாவினால் பாதிக்கப்பட்ட விலங்குகளான எலிகள். நாய்கள், கால்நடைகளான ஆடுகள்,மாடுகள் , பன்றிகள் போன்றவரின் எச்சங்கள் , கழிவுகள் வெள்ள நீருடன் கலந்து , கிணறுகள் , நன்னீர் தேக்கங்கள் , குளங்கள் போன்ற நீர் நிலைகளில் கலந்து விடுவதனால் , அந்த நீரினை பயன்படுத்துபவர்கள் நோய் தாக்கத்திற்கு உள்ளாகின்றனர்.

அந்த நீரை பருகுவதால் மாத்திரமின்றி , கால்கள் , கைகளில் காயங்கள் உள்ளவர்கள் அந்த நீரினால் கை கால்களை கழுவும் போது , அவர்களையும் நோய் தாக்க கூடும். அது மாத்திரமின்றி  கண்கள், மூக்கு போன்ற மென்சவ்வினூடாக  கூட நோய் தொற்று ஏற்பட கூடிய சாத்திய கூறுகள் உண்டு.

நோய் அறிகுறிகள் 

அதிக காய்ச்சல், நடுக்கம் மற்றும் தலைவலி ஆகியவை லெப்டோஸ்பைரோசிஸின் அறிகுறிகளாகும். சரியான நேரத்தில் சிகிச்சையளிக்கப்படாவிட்டால், இது சிறுநீரக பாதிப்பு, கல்லீரல் செயலிழப்பு, மூளைக்காய்ச்சல், சுவாசக் கோளாறு ஆகியவற்றிற்கு வழிவகுத்து உயிரிழப்புக்களை ஏற்படுத்தும்.

அதனால் இதனை ஆரம்பத்திலேயே கண்டறிந்து அதற்குரிய சிகிச்சைகளை வழங்கும் சந்தர்ப்பத்தில் நோயினை பூரணமாக குணமாக்க முடியும். எனவே காய்ச்சல் தொடர்பில் அசமந்தமாக இருக்காது வைத்தியர்களை நாடி சிகிசிச்சை பெறுமாறு சுகாதார பிரிவினர் அறிவுறுத்தியுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் பாதிப்பு அதிகமான இடங்கள். 

யாழ்ப்பாணத்தில் நான்கு சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவிலையே நோயாளர்கள் இனம் காணப்பட்டுள்ளனர்.

பருத்தித்துறை,  கரவெட்டி, மருதங்கேணி மற்றும்  சாவகச்சேரி ஆகிய நான்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலையுமே அதிகளவான பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

குறித்த நான்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் யாருக்காவது காய்ச்சல் ஏற்படின் ஒரு நாள் காய்ச்சலாக இருந்தாலும் உடனடியாக அருகிலுள்ள அரச மருத்துவமனையை நாடும் படி பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தடுப்பு நடவடிக்கைகள் 

 இந்நோய் பரவக் கூடிய ஆபத்து இலக்கினரான விவசாயிகளுக்கு விவசாய திணைக்களத்தின் உதவியுடன் கிராம மட்ட விவசாய குழுக்கள் மூலம் தடுப்பு மருந்து வழங்கும் பணிகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.

அத்துடன் கடல்நீர் ஏரிகளில் , குளங்கள் போன்ற நீர்த்தேக்கங்களில், மீன்பிடித் தொழிலில் ஈடுபடுபவர்களுக்கும் உள்ளூராட்சி மன்றங்களின் கீழ் துப்பரவு பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கும் தடுப்பு மருந்து வழங்கப்பட்டு வருகிறது.

இத் தடுப்பு மருந்தை வாரத்திற்கு ஒரு தடவை உட்கொள்ள வேண்டும் என அறிவுத்தப்பட்டுள்ளது.

அதேவேளை எலிக்காய்ச்சல் நோய்க்கு சிகிச்சை அளிப்பதற்கும் தடுப்பு மருந்துகளை வழங்குவதற்காகவும் கொழும்பிலிருந்து எடுத்து வரப்பட்ட மருந்துகள் யாழ் மாவட்டத்திலுள்ள சகல சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைகளுக்கும், இந்நோய் தீவிரமாக பரவி வரும் பிரதேசங்களிலுள்ள வைத்திசாலைகளுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

 இவ்விடயம் சம்பந்தமாக சுகாதார வைத்திய அதிகாரிகளால் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படுகின்றது. மேலும் பிரதேச செயலாளர்களின் உதவியுடன் கிராமமட்ட உத்தியோகத்தர்கள் மூலமாக பொதுமக்களுக்கு இவ்விடயம் சம்பந்தமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகின்றது.

கொழும்பில் இருந்து வந்த விசேட குழு. 

மத்திய சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவிலிருந்து விசேட வைத்திய நிபுணர் குழு இந் நோய் பரம்பலை ஆய்வு செய்வதற்காக யாழ் மாவட்டத்திற்கு வருகை தந்தது. அக்குழுவினர் யாழ்ப்பாணத்தில் இரண்டு நாட்கள் தங்கி ஆய்வுகளை மேற்கொண்டனர்

யாழ் போதனா வைத்தியசாலைக்கும், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கும் , பருத்தித்துறை, மற்றும் கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைகளுக்கும் சென்று ஆய்வு செய்ததுடன் சில பிரதேசங்களுக்கு கள விஜயமும் மேற்கொண்டிருந்தனர்.

நோயில் இருந்து எம்மை பாதுகாத்து கொள்ள

அசுத்தமான தண்ணீருடன் தொடர்பு ஏற்படுவதை தடுக்க வேண்டும். சுகாதார முறைகளை பேணுதல் மூலம்  நோய்த் தொற்றில் இருந்து எம்மை பாதுகாத்து கொள்ள முடியும்.

குறிப்பாக தொற்றுக்குள்ளான தண்ணீருடன் நேரடியாக தொடர்பு ஏற்படுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும். ஏனெனில், வெள்ள நீர், சேறு மற்றும் தேங்கி நிற்கும் நீர் என்பன விலங்குகளின் சிறுநீற்றால் தொற்றாக்கப்பட்டிருக்கலாம். அதனால் அந்நீரினை பயன்படுத்துவதை தவிர்த்து கொள்ள வேண்டும்.

அதாவது, சுத்தமான கொதித்து ஆறிய நீரை பருகுதல், குளம் குட்டைகள், வெள்ளத்தால் மூழ்கிய கிணறுகள் என்பவற்றில் குளிப்பதையோ , நீந்துவதையோ தவிர்த்துக்கொள்ளல். அந்த நீரை அருந்தவோ, வாய் கொப்பளிக்கவோ கூட பயன்படுத்த வேண்டாம்.

கால்களில் செருப்பு அல்லது சப்பாத்து இல்லாமல் வெள்ள நீர் தேங்கி நிற்கும் இடங்கள் , சேற்று நிலங்களில் இறங்க வேண்டாம். விவசாயிகள் கூட வயல் நிலங்களில் இறங்கும் போது , சுகாதார முறைமைகளை பின்பற்ற வேண்டும்.

சரியான சுகாதார நடைமுறைகளை கட்டாயமாக பின்பற்ற வேண்டும். வெளியே சென்று வந்த பின்னரும், விலங்குகளை கையாண்ட பின்னரும் சவர்க்காரம் மற்றும் நல்ல நீர் கொண்டு கை கால்களை நன்றாக கழுவிக் கொள்ள வேண்டும்

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும்.

எலிக்காய்ச்சல் தொடர்பில் விழிப்புடன் இருந்தால் மாத்திரமே  எம்மையும் எம்மை சூழவுள்ளவர்களையும் பாதுகாத்து கொள்ள முடியும்.

கிளிநொச்சி வைத்தியசாலையில் அழகான யுவதிகளை வளைக்கும் செக்குறுட்டிக்காட்டுகள்!! ஏனையவர்கள் துரத்தப்படுகின்றார்கள்…


கிளிநொச்சி வைத்தியசாலையில் அழகான யுவதிகளை வளைக்கும் செக்குறுட்டிக்காட்டுகள்!! ஏனையவர்கள் துரத்தப்படுகின்றார்கள்…

தனபாலசுந்தரம் தமிழழகன் என்பவரது சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே இங்கு தந்துள்ளோம்….

நடவடிக்கைகள் வன்மையாக கண்டிக்கத்தக்கது.

நேரம் பிந்தி மகளுக்கு உணவும் மருந்தும் கொடுக்க சென்ற தாய்க்கு அனுமதியில்லை, அப்பிளும் சோடாவும் கொண்டு போன இளம் பெண்களுக்கு கைத்தொலை பேசி இலக்கம் வாங்கிய பின் அனுமதி.

நியாயம் கேட்டால் நாங்கள் அப்படித்தான் என திமிரான பதில், எங்கட பக்க நியாயம் கேட்காமல் வெளியில் கலைக்கும் பொலிஸ் என்ன நியாயம்?

முறைப்பாடு செய்ய குறைந்த பட்சம் பெயராவது வேண்டும் ஏன் இப்பொழுது சீருடையில் பெயர் குத்துவதில்லை? பிறகு நாங்கள் video எடுக்க வெளிக்கிட பிரச்சனை வேற லெவலுக்கு போகும்.

வாக்குகளுக்காக அரசியல் மயப்படுத்தப் பட்டுள்ள நோயாளர் நலன்புரிச் சங்கம் உறக்கம்.

வவுனியாவில் காசு வாங்கி ஆண்களுடன் உறவு கொண்ட 3 பெண்கள் கைது!!


வவுனியாவில் காசு வாங்கி ஆண்களுடன் உறவு கொண்ட 3 பெண்கள் கைது!!

வவுனியாவில் விபச்சாரத்தில் ஈடுபட்ட 3 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட மது ஒழிப்பு பிரிவு பொலிசார் இன்று (22) தெரிவித்துள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா மாவட்ட மது ஒழிப்பு பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மாவட்ட மது ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி கஜேந்திரன் தலைமையில் பொலிசார் மேற்கொண்ட திடீர் சோதனையின் போது தேக்கவத்தை பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் விபச்சாரத்தில் ஈடுபட்ட 3 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 20 – 30 வயதுக்கு உட்பட்டவர்களாவர்.

அவர்கள் சுந்தரபுரம், குழுமாட்டு சந்தி, கல்மடு ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர். மேலதிக விசாரணைகளின் பின் அவர்களை நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

Saturday, December 21, 2024

இன்றைய இராசிபலன்கள் (22.12.2024)


இன்றைய இராசிபலன்கள் (22.12.2024)

மேஷம்

இன்று அரசியல் துறையினருக்கு எடுக்கக் கூடிய ஒப்பந்தகளை நன்றாக ஆராய்ந்து முடிவுக்கு வரவேண்டும். வெளிநாட்டு ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். லாபம் பெருகும். மேலிடத்தின் கனிவான பார்வை கிடைக்கப் பெறுவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9

ரிஷபம்

இன்று நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். தேவைகளைப் பூர்த்திசெய்யும் வகையில் வருவாய் உண்டு. சோதனைகள் வெற்றியாக மாறும். உங்கள் செயல்பாடுகள் மற்றவர்களைக் கவரும். உல்லாசப் பயணங்களில் நாட்டம் செல்லும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

மிதுனம்

இன்று நன்மைகள் சேரும். வாக்குவாதங்கள் நீங்கும். சுபகாரியங்களில் கலந்து கொள்ள நேரலாம். பணம் வரவு நன்றாக இருக்கும். இழுபறியாக இருந்தவை சாதகமாக முடியக்கூடும். தேவையற்ற கவலைகள் நீங்கும். உங்களை பற்றி விமர்சனம் செய்து வந்தவர்கள் அதனை விட்டு விடுவார்கள். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 9

கடகம்

இன்று தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் விலகும். கடன் பிரச்சனை தீரும். ஆர்டர் பிடிப்பதில் இருந்த கஷ்டம் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எளிதாக பணிகளை செய்து முடிப்பார்கள். மேல் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 1, 6

சிம்மம்

இன்று பாதியில் நின்ற வீடுகட்டும் பணியை மீண்டும் தொடருவீர்கள். சிலர் புதிய வீட்டிற்கு குடிபுகுவார்கள். கணவன் மனைவிக்கிடையில் திடீரென்று கருத்து வேற்றுமை உண்டாகலாம். பிள்ளைகள் கல்வியில் முன்னேற்றம் அடைய தேவையான உதவிகளை செய்வீர்கள். வழக்குகளில் நல்ல தீர்ப்பு வரும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 5, 6

கன்னி

இன்று மற்றவர்களிடம் கவனமாக பேசுவது கருத்து வேற்றுமை வராமல் தடுக்கும். வீண் அலைச்சல் குறையும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமடைய தேவையான உதவிகள் கிடைக்கும். விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் போது கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்: 4, 6

துலாம்

இன்று புதிய மாற்றம் உருவாகும். அரசாங்க அனுகூலம் ஏற்படும். வாகனங்களைப் பிரயோகப்படுத்தும் போது மிகவும் கவனம் தேவை. வெளியூர் வெளிநாடு செல்ல வேண்டி வரலாம். பணப்புழக்கம் அதிகரிக்கும். எடுத்த காரியம் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். அதிர்ஷ்ட நிறம்: நீலம் அதிர்ஷ்ட எண்: 2, 9

விருச்சிகம்

இன்று மதிப்பு மரியாதை சிறப்படையும். செல்வாக்கு ஓங்கும். நட்பு வட்டாரத்தில் குதூகலம் ஏற்படும். எல்லா பிரச்சனைகளும் தீரும். உடல் ஆரோக்கியம் உண்டாகும். துணிச்சலாக எதையும் செய்து முடித்து காரிய வெற்றி அடைவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 1, 5

தனுசு

இன்று மற்றவர்களுடன் இருந்த பகை நீங்கும். பூர்வீக சொத்துக்களில் இருந்த சிக்கல்கள் தீரும். பணவரத்து கூடும். அரசாங்கம் மூலம் லாபம் உண்டாகும். நீண்ட தூர பயணங்களால் சாதகமான பலன் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் இருந்த தொய்வு நீங்கி விறுவிறுப்படையும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 5, 6

மகரம்

இன்று வசூலாக வேண்டிய கடன் பாக்கிகள் வசூலாகும். தொழில் தொடர்பான பிரச்சனைகள் தீரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணி தொடர்பான கஷ்டங்கள் குறையும். குடும்பத்தில் மரியாதை கூடும். உங்களது வார்த்தைகளுக்கு மதிப்பு இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்: 4, 6

கும்பம்

இன்று கணவன், மனைவிக்கிடையில் மனம்விட்டு பேசி எடுக்கும் முக்கிய முடிவுகள் நன்மை தரும். பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். கடிதம் மூலம் வரும் தகவல்கள் நல்ல தகவல்களாக இருக்கும். வர வேண்டிய பணம் வந்து சேரும். கஷ்டங்கள் குறையும். அதிர்ஷ்ட நிறம்: நீலம் அதிர்ஷ்ட எண்: 2, 9

மீனம்

இன்று மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற எடுக்கும் முயற்சிகள் சாதகமாக பலன் தரும். எதிலும் வேகமாக செயலாற்ற வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். தொழிலில் சிக்கல்கள் உருவாகாது என்றாலும் சிற்சில வாக்குவாதங்கள் இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை அதிர்ஷ்ட எண்: 9, 3

நெடுந்தீவில் இருந்து இறைச்சியுடன் வந்த பொலிஸ்க்காரனை மடக்கிய இளைஞர்கள்!


நெடுந்தீவில் இருந்து இறைச்சியுடன் வந்த பொலிஸ்க்காரனை மடக்கிய இளைஞர்கள்!

நெடுந்தீவில் இருந்து விடுமுறையில் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் கொண்டு பொதியில் இறைச்சி இருப்பதாக சந்தேகித்து அதனை குறிகாட்டுவானில் வைத்து சோதனையிட்ட போது , அதில் இறைச்சி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது..

இன்று மாலை நெடுந்தீவில் இருந்து குறிகாட்டுவான் நோக்கிவந்த படகில் விடுமுறையில் செல்வதற்காக வந்த பொலிஸ் உத்தியோகத்தர் கொண்டுவந்த பொதியில் இறைச்சி இருப்பதாக சந்தேகம் தெரிவித்து குறிகாட்டுவான் துறைமுகப்பகுதியில் வைத்து,
கடந்த பல நாட்களாக கால்நடைகளை பறிகொடுத்த இளைஞர்கள் கடற்படையினரின் உதவியுடன் பரிசோதனை செய்தபோது இறைச்சி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அதன் பின்னர் குறித்த பொலிசாருடன் , பொதியும் குறிகாட்டுவானில் கடற்படையினரின் உதவியுடன் தடுத்து வைத்துவிட்டு யாழ். அரச அதிபர், நெடுந்தீவு பிரதேச செயலருக்கு தகவல் வழங்கப்பட்டதுடன் , இது தொடர்பாக வேலணை பிரதேச செயலருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டதாக தெரியவருகின்றது.

இதன் அடிப்படையில் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் குறிகாட்டுவான் சென்று விசாரணைகளை மேற்கொண்டதுடன் நெடுந்தீவில் ஆடு காணாமல் போன இளைஞரிடம் முறைப்பாட்டினை பெற்றதுடன் கைப்பற்றப்பட்ட இறைச்சியினை ஆட்டிறைச்சியா மாட்டிறைச்சியா என ஆய்வுசெய்தபின்னர் நாளையதினம் தகவல் வழங்குவதாக தெரிவித்ததுடன் குறித்த இளைஞர்களை செல்லுமாறு அனுப்பிவைத்துள்ளதாக தெரியவருவதுடன் சம்பந்தப்பட்ட பொலிஸ் அலுவலரின் விடுமுறை இரத்து செய்யப்பட்டு அவர் குறிகாட்டுவான் பொலிஸ் சாவடியில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் இறைச்சி பகுப்பாய்வின் பின்பே நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக என தகவல்கள் தெரவிக்கின்றன.

மட்டு’வில் அளவுக்கதிகமான துாக்க மாத்திரைகளை உட்கொண்டு 18 வயது மாணவி மரணம்!!


மட்டு’வில் அளவுக்கதிகமான துாக்க மாத்திரைகளை உட்கொண்டு 18 வயது மாணவி மரணம்!!

மட்டக்களப்ப்பில் 18 வயதான மாணவி ஒருவர் அளவுக்கதிகமாக மாத்திரைகளை உட்கொண்டு உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.சம்பவத்தில் கித்துள் பகுதியை சேர்ந்த , உயர்தரத்தில் கல்வி கற்றுவந்த 18 வயதான மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அளவுக்கதிகமான மாத்திரைகளை உட்கொண்டதனால் சுகவீனமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மாணவி வியாழக்கிழமை (19) உயிரிழந்துள்ளார்.இந்நிலையில் மாணவியின் இழப்பு அப் பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Friday, December 20, 2024

பெற்றோரே அவதானம்!! 14 வயது மகனால் பறி போன 30 லட்சம் ரூபா நகைகள்!! நடந்தது என்ன?


பெற்றோரே அவதானம்!! 14 வயது மகனால் பறி போன 30 லட்சம் ரூபா நகைகள்!! நடந்தது என்ன?

களுத்துறை, பயாகல பிரதேசத்தில் 14 வயதுடைய பாடசாலை மாணவனிடம் கையடக்க தொலைபேசி வாங்கி தருவதாக கூறி 30 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான பணம் மோசடி செய்த இருவரை பயாகல பொலிஸார் கைது செய்துள்ளனர்.
18 வயது மற்றும் 21 வயதுடைய ஏத்தகம மற்றும் மங்கோன ஆகிய பிரதேசங்களை சேர்ந்த இருவரே கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பயாகல பிரதேசத்தில் வசித்து வந்த மாணவன் தனது தந்தை வழங்கிய கையடக்க தொலைபேசியை தொலைத்துள்ளார்.

இந் நிலையில் அயல் வீட்டில் வசிக்கும் அதே வயதுடைய நண்பரின் மூத்த சகோதரனிடம் கையடக்கத் தொலைபேசி ஒன்றை கோரியுள்ளார்.

அதற்காக கொஞ்சம் பணம் அல்லது தங்கப் பொருட்களை தருமாறு இந்த மாணவனிடம் அவர் கூறியுள்ளார்.

இதன்படி குறித்த மாணவன் தனது வீட்டின் அலமாரியில் இருந்த சுமார் 30 லட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளை சந்தேக நபருக்கு, மூன்று தடவைகள் கொண்டு வந்து கொடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பிரதான சந்தேகநபர் அவற்றை இரண்டு இடைத்தரகர்கள் மூலம் மூன்று முறை அடமானம் வைத்து, சுமார் 17 லட்சம் ரூபாயை பெற்றுள்ளார்.

மேலும் மாணவருக்கு ட்ரோன் கேமராக்கள், விலையுயர்ந்த வாசனை திரவியங்கள், ஆடைகள் ஆகியவற்றையும் கொடுத்துள்ளார்.

வீட்டில் இருந்த தங்க நகைகள் காணாமல் போனமை தொடர்பில் சிறுவனின் தந்தை முறைப்பாடு செய்ததையடுத்து, சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.

மேலும் விற்கப்பட்ட மற்றும் அடகு வைக்கப்பட்ட தங்க நகைகளை விசாரணைகளின் பின்னர் பொலிஸார் மீட்டுள்ளனர்.

இறந்த மனைவியின் உடலுக்கு ஈரத்துணி கட்டி கணவனும் பிள்ளையும் போலீசாரை ஏமாற்றியது ஏன்?


இறந்த மனைவியின் உடலுக்கு ஈரத்துணி கட்டி கணவனும் பிள்ளையும் போலீசாரை ஏமாற்றியது ஏன்?

இரத்தினபுரி, கஹவத்தையில் உயிரிழந்த மனைவியின் மரணத்தை மறைக்க முயற்சித்த கணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

விலங்குகளுக்காக பொருத்தப்பட்ட பாதுகாப்பற்ற மின்சார கம்பியில் சிக்கிய 45 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாய் உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து உடலை, குளித்ததனை போன்று செய்து துண்டு ஒன்றை உடலில் கட்டி மரணத்தை மறைக்க முற்பட்ட சந்தேகத்தின் பேரில் இறந்தவரின் கணவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸாரின் விசாரணையில், மின்சாரம் தாக்கியதற்கான காரணத்தை மறைக்க, இறந்த பெண்ணின் உடலில் ஈரமான ஆடைகளை அணிவித்து, சடலத்தை வீட்டுக்குள் கொண்டு வந்துள்ளமை தெரியவந்துள்ளது.

17ஆம் திகதி பிற்பகல் மின்சாரம் தாக்கி உயிரிழந்த 2 பிள்ளைகளின் தாயான செனரத் சந்திரலதாவின் பிரேத பரிசோதனையின் போது உண்மை தகவல் வெளிவந்துள்ளது.

சாட்சியமளித்த உயிரிழந்த பெண்ணின் கணவர், குளித்துவிட்டு வீட்டுக்குள் வந்த தனது மனைவி பலத்த அலறல் சத்தம் கேட்டதாகவும், அங்கு சென்று சோதனையிட்டதாகவும்தெ ரிவித்திருந்தார்.
அப்போது மனைவி கீழே கிடந்ததாக குறிப்பிட்டுள்ளார். தந்தைக்கு ஆதரவாக 20 வயது மகனும் பொய் சாட்சியம் வழங்கியுள்ளார்.

விசாரணையின் போது விலங்குகளுக்காக பொருத்தப்பட்ட பாதுகாப்பற்ற மின்சார கம்பியில் சிக்கியமையே மரணத்திற்கு காரணம் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Thursday, December 19, 2024

துரோகம் செய்த காதலி கொடுத்த பணத்தை திருப்பிக் கொடுக்கத் தேவையில்லை: காதலனுக்கு ஆதரவாக நீதிமன்றம் தீர்ப்பு!


துரோகம் செய்த காதலி கொடுத்த பணத்தை திருப்பிக் கொடுக்கத் தேவையில்லை: காதலனுக்கு ஆதரவாக நீதிமன்றம் தீர்ப்பு!

தனது காதலனுக்கு துரோகமிழைத்தது அம்பலமானதையடுத்து, உறவை காப்பாற்ற காதலனுக்கு வழங்கிய பணத்தை, காதல் முறிந்த பின்னர் காதலிக்கு திருப்பிக் கொடுக்க வேண்டியதில்லை என சீனாவின், ஷாங்காய் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

காதலித்த காதலத்தில் காதலியால் 300,000 யுவான் (US$40,000) கொடுக்கப்பட்டிருந்தது.

லி என்பவர் 2018 ஆம் ஆண்டு சூ என்று அழைக்கப்படும் பெண்ணுடன் காதல் உறவைத் தொடங்கினார். இருப்பினும், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, காதலி சூ தனக்கு துரோகம் செய்ததையும் தனது மருமகனுடன் தொடர்பு வைத்திருந்ததையும் லி கண்டுபிடித்தார். .

துரோகத்தால் வருத்தமடைந்த லி, உறவை முறித்துக் கொள்ள முடிவு செய்தார். பதிலுக்கு, சூ அவருக்கு மன்னிப்புக் கடிதம் எழுதினார், “நான் எனது தவறுகளை ஆழமாகப் புரிந்து கொண்டுள்ளேன். ஆம், நான் உன்னை பலமுறை ஏமாற்றிவிட்டேன், இது உனக்கு மிகுந்த வேதனையை ஏற்படுத்தியது. நான் மனதார வருந்துகிறேன். நான் என் தவறுகளைச் சரிசெய்து, என் நேர்மையால் உனக்குப் பரிகாரம் செய்வேன்“ என குறிப்பிட்டிருந்தார்.

அடுத்த இரண்டு நாட்களில், பல வங்கி பரிவர்த்தனைகள் மூலம் 300,000 யுவானை காதலனுக்கு சூ மாற்றினார். லி தனது காதலியின் மன்னிப்பை ஏற்றுக்கொண்டார். பின்னர் அவர்கள் 2022 ஆம் ஆண்டு வரை தம்பதியினர் ஒன்றாக இருந்தனர்.

ஆனாலும், தனது காதலி சூ இப்போதும் தனது மருமகனுடன் தொடர்பு வைத்துள்ளதை அவர் கண்டுபிடித்தார்.

இதனால் மனம் வெறுத்த லி, காதலனி சூ வை விட்டு நிரந்தரமாக பிரிய முடிவெடுத்தார்.

இதன்போது, காதலி சூ, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அவர் கொடுத்த பணத்தைத் திரும்பக் கோரினார். இது திருமணத்தின் எதிர்பார்ப்புடன் பிணைக்கப்பட்ட நிபந்தனைக்குரிய பரிசாகக் கருதப்பட்டது. இருவரும் பிரிந்து விட்டதாலும், திருமணம் நடக்காததாலும், லி அந்தத் தொகையைத் திருப்பித் தர வேண்டும் என்று வாதிட்டார்.

லி மறுத்துவிட்டார், சூ மீண்டும் மீண்டும் துரோகம் செய்ததால் அவருக்கு பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியதாகக் கூறினார், மேலும் அவர் அந்தப் பணத்தை அவளுடைய செயல்களுக்கு இழப்பீடாகக் கருதினார்.

பின்னர், நிதியை மீட்டுத் தரக் கோரி சூ நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை பரிசீலித்த நீதிமன்றம் லிக்கு ஆதரவாக தீர்ப்பளித்தது. அவர்களது உறவை சீர்செய்வதற்கான சைகையாக சூ தானாக முன்வந்து பணம் கொடுத்ததாகவும், திருமணத்திற்கான பரிசுப் பொருளாக இருக்கவில்லை என்றும் அது தீர்மானித்தது. பணத்தைத் திருப்பித் தருவதற்கு லி கடமைப்பட்டிருக்கவில்லை என்று நீதிமன்றம் முடிவு செய்தது.

காதலனுக்கு கள்ளத் தொடர்பு இருப்பதாக சந்தேகித்து ரயில் முன் பாய்ந்து பலியான மல்ஷானி!!


காதலனுக்கு கள்ளத் தொடர்பு இருப்பதாக சந்தேகித்து ரயில் முன் பாய்ந்து பலியான மல்ஷானி!!

புத்தளம், முந்தல் நவதன்குளம் பகுதியில் யுவதி ஒருவர் தொடருந்து தண்டவாளத்தில் தலையை வைத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தனது காதலனுக்கு வேறு உறவு இருப்பதாக சந்தேகமடைந்த யுவதியொருவர்  இவ்வாறு தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். தனியார் ஆடை நிறுவனமொன்றில் பணிபுரிந்து வந்த 20 வயதுடைய பியுமி மல்ஷானி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தொடருந்து வரும் தண்டவாளத்தை நோக்கி மகள் ஓடியதை கண்ட தாயார் அலறியடித்து ஓடிய போதிலும் அவர் தொடருந்தில் மோதுண்டு உயிரிழந்துள்ளார்.

சாரதி தொடருந்தினை நிறுத்தி யுவதியின் சடலத்தை மதுரங்குளிய ரயில் நிலையத்திற்கு கொண்டு சென்ற நிலையில், புத்தளம் ஆதார வைத்தியசாலைக்கு சடலம் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

காதலர்களுக்கு இடையில் ஏற்பட்ட காரசாரமான தொலைபேசி உரையாடலின் பின்னர் மகள் விபரீத முடிவை எடுத்துள்ளதாக தாயார் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
online jobs in sri lanka ,
jobs in sri lanka ,
vacancies in kandy ,
tob jobs ,
online jobs in sri lanka ,
new job vacancy ,
lakbima jobs ,
jobs in colombo ,
sri lanka government job