யாழ்ப்பாணம் மீசாலையைச் சொந்த இடமாகக் கொண்ட தான் யூரியூப்பர் ஒருவருக்கு இலங்கைப் பணத்தில் ஒரு லட்சம் ரூபாவை கொடுத்து ஏமாந்துள்ளதாக ஜேர்மனியில் வசிக்கும் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தனது ரிக்ரொக் தளத்தில் வீடியோ ஒன்றைப் பதிவு செய்துள்ளார்.
மீசாலையில் உள்ள பிள்ளையார் கோவில் ஒன்றில் எதிர்வரும் சில நாட்களில் நடக்கப் போகும் திருவிழாவிற்காக ஜேர்மனியிலிருந்து யாழ்ப்பாணம் வரவுள்ளாராம் குறித்த அன்ரி.
அந் நேரத்தில் வைத்தியர் அர்ச்சுனாவை நேரில் சந்தித்து சில விடயங்கள் கதைக்க வேண்டும் என எண்ணி அர்ச்சுனாவின் தொலைபேசி அழைப்புக்கு பல தடவைகள் தொலைபேசி எடுத்தும் அர்ச்சுனா பதில் அளிக்கவில்லையாம்.
இதன் காரணமாக அர்ச்சுனாவின் வீடியோக்களை பதிவிடும் யூரியூப்பர் ஒருவரை தொடர்பு கொண்டு அர்ச்சுனாவை சந்திக்க ஏற்பாடு செய்து தருமாறு கேட்டாராம்.
அதற்கு உடன்பட்ட யூரியூப்பா் கடந்த மாத இறுதிப்பகுதியில் இடம்பெற்ற வெள்ள அனர்த்தத்திற்காக அருசு்சுனாவால் ஏற்பாடு செய்யப்பட்ட உதவிச் செயற்பாடுகளுக்காக அவரிடம் கொடுப்பதற்காக ஒரு லட்சம் ரூபாவை அனுப்புவீர்களா என குறித்த யூரியூப்பர் தன்னைக் கேட்டாராம். அதற்கு உடன்பட்டு அவரது கணக்கிற்கு ஒரு லட்சம் ரூபா தான் அனுப்பியதாக குறித்த அன்ரி கூறுகின்றார்.
இதன் பின்னர் குறித்த யூரியூப்பருடன் தொடர்பு கொள்ள முடியவில்லை எனவும் அவர் தனது தொலைபேசி இலக்கத்தை வட்சப் மற்றும் வைபரில் தடை செய்துள்ளதாகவும் அன்ரி கூறுகின்றார். குறித்த யூரியூப்பர் யார், மற்றும் அவர் அனுப்பிய பணத்தொகைக்கான ஆதாரங்களை அன்ரி தெரியப்படுத்தவில்லை.
0 comments:
Post a Comment