கனடாவின் (Canada) வருடாந்திர பணவீக்க விகிதம் கடந்த நவம்பர் மாதத்தில் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, கடந்த நவம்பர் மாதத்தில் கனேடிய வருடாந்திர பணவீக்க விகிதம் 1.9 வீதமாக பதிவாகியுள்ளது.
அந்நாட்டு அரச நிறுவனமான Statistics Canada வெளியிட்டுள்ள தரவுகளின் அடிப்படையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
இதேவேளை, குறைந்த அடமான வட்டி செலவுகள் மற்றும் மலிவான சுற்றுலா பயண கட்டணங்களின் சலுகைகள் என்பன பணவீக்க வீழ்ச்சிக்கு காரணம் என்றும் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
உணவுப் பொருட்களின் விலை
அத்துடன், பொருட்களின் விலை உயர்வு பெரும்பாலும் மந்தமடைந்துள்ளதாகவும் உணவுப் பொருட்களின் விலை கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 2.6% அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், 2021 நவம்பர் முதல் இதுவரை உணவுப் பொருட்கள் விலை 19.6 வீதமாக அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது
0 comments:
Post a Comment