நோயாளர்களுக்கு நடக்கும் கொடுமைகள்!! அருச்சுனாவைத் தொடர்ந்து வைத்திய நிபுணர் ஒருவரும் பைத்தியதிகாரிகள் சங்கத்திற்கு எதிராக களத்தில் குதித்தார்!!
தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையின் மகப்பேற்று நிபுணரான யோகராசா சிவாகரனின் பேஸ்புக் பக்கத்தில் இருந்த பதிவினை அப்படியே நாம் இங்கு தந்துள்ளோம்…
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை மற்றும் ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலை அவற்றின் தரத்திற்கு ஏற்ற சேவையை வழங்குவதில்லை என்று யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் தனது பேட்டி ஒன்றில் குறிப்பிட்டிருந்தார்.
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு நான்கு வைத்திய நிபுணர்களுக்கான வெற்றிடங்கள் காணப்படும் போதிலும் அவை வருடார்ந்த வைத்திய நிபுணர்களுக்கான இடமாற்றம் பட்டியலில் காட்டப்படாதது ஏன்?
அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உறுப்பினர்களின் உறவுகளை தமது வீட்டு அருகாமையில் உள்ள வைத்தியசாலையில் பணிபுரிய வைப்பதற்காக, சாவச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு நியமனம் பெற்று வரும் வைத்திய நிபுணர்கள் சில நாட்களில் முறையற்ற ரீதியில் சட்டவிரோதமாக தூர இடங்களுக்கு VOP அடிக்கப்படும் என்று பயமுறுத்தப்பட்டு உளவியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டு இடமாற்றம் செய்யப்படுவது சரியா?
மேற்குறிப்பிட்ட ஆதார வைத்தியசாலைகளை தரங்களை ஒத்த கிழக்கிலும் தெற்கிலும் உள்ள வைத்தியசாலைகளில் போதியளவு வைத்திய நிபுணர்கள் நியமிக்கப்படும்போது வடக்கில் உள்ள ஆதார வைத்திய சாலைகளில் வைத்திய நிபுணர்களுக்கான பதவி வெற்றிடங்களும் ஆளணிகளும் உருவாக்கப்படாதது ஏன்? நியமிக்கப்படாதது ஏன்?
இவை அனைத்துக்கும் வட மாகாணத்தையும் யாழ்ப்பாணத்தையும் நிர்வகிக்கின்ற மருத்துவ நிர்வாகிகளின் இயலாமையும் வினைத்திறனின்மையும் அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் அடாவடித்தனமான நடவடிக்கைகளும் தான் காரணம்!
கடைசியில் என்னவோ பாதிக்கப்படுவது அப்பாவி பொதுமக்களே தான்!
வைத்திய நிபுணர்களுக்கான இடமாற்றங்கள் வெற்றிடம் பற்றிய சரியான அறிவு அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உறுப்பினர்களை விட எமக்கு அதிகமாக உள்ளது. எல்லோரையும் முட்டாளாக்க முயற்சி செய்ய வேண்டாம்.
வடக்கு தவிர்ந்த அனைத்து மாகாணங்களிலும் பி தர ஆதார வைத்திய சாலைகளில் வைத்திய நிபுணர்கள் வெற்றிடங்கள் காட்டப்பட்டு நியமிக்கப்படும்போது ஏன் வடக்கில் உள்ள ஆதார வைத்தியசாலைகளில் மட்டும் இந்த வெற்றிடங்கள் காட்டப்படுவது இல்லை?
வடக்கு மாகாணம் தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் உள்ள பல B தர ஆதார வைத்தியசாலைகளில் ஒரு துறையில் ஒன்றுக்கு மேற்பட்ட வைத்திய நிபுணர்கள் பணியாற்றும் போது வடக்கில் உள்ள ஆதார வைத்திய சாலைகளில் வைத்திய நிபுணர்களின் வெற்றிடம் மாற்றப்பட்டியல்களில் காட்டப்படுவது கூட இல்லை. ஏன்?
எந்த ஒரு தொழிற்சங்கமும் இடம் மாற்ற சபையில் இடம்பெறாத போது அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் இடம் மாற்ற சபையில் இருப்பதால் நடக்கும் அநீதிகளும் லஞ்ச ஊழல்களும் பிரசித்தமானவை. அதற்கான விசாரணைகளும் நடைபெற்றன. நடைபெற்று வருகின்றன.
அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் விசேடமாக யாழ்ப்பாண கிளை தமது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப வைத்தியர்களின் இடம் மாற்றத்தில் தலையீடு செய்வது இங்குள்ள சுகாதார நிலைமையை மேலும் மோசமடையவே செய்யும்.
இதே வேளை இவ் வைத்திய நிபுணருக்கு எதிராக பழஞ்சீலை சிவாகரன் என்ற பெயரில் பேக் ஐடி ஒன்று உருவாக்கி பைத்திய அதிகாரிகள் சங்கத்தைச் சேர்ந்த சிலர் கருத்துத் தெரிவித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது
0 comments:
Post a Comment