துரோகம் செய்த காதலி கொடுத்த பணத்தை திருப்பிக் கொடுக்கத் தேவையில்லை: காதலனுக்கு ஆதரவாக நீதிமன்றம் தீர்ப்பு!
தனது காதலனுக்கு துரோகமிழைத்தது அம்பலமானதையடுத்து, உறவை காப்பாற்ற காதலனுக்கு வழங்கிய பணத்தை, காதல் முறிந்த பின்னர் காதலிக்கு திருப்பிக் கொடுக்க வேண்டியதில்லை என சீனாவின், ஷாங்காய் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
காதலித்த காதலத்தில் காதலியால் 300,000 யுவான் (US$40,000) கொடுக்கப்பட்டிருந்தது.
லி என்பவர் 2018 ஆம் ஆண்டு சூ என்று அழைக்கப்படும் பெண்ணுடன் காதல் உறவைத் தொடங்கினார். இருப்பினும், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, காதலி சூ தனக்கு துரோகம் செய்ததையும் தனது மருமகனுடன் தொடர்பு வைத்திருந்ததையும் லி கண்டுபிடித்தார். .
துரோகத்தால் வருத்தமடைந்த லி, உறவை முறித்துக் கொள்ள முடிவு செய்தார். பதிலுக்கு, சூ அவருக்கு மன்னிப்புக் கடிதம் எழுதினார், “நான் எனது தவறுகளை ஆழமாகப் புரிந்து கொண்டுள்ளேன். ஆம், நான் உன்னை பலமுறை ஏமாற்றிவிட்டேன், இது உனக்கு மிகுந்த வேதனையை ஏற்படுத்தியது. நான் மனதார வருந்துகிறேன். நான் என் தவறுகளைச் சரிசெய்து, என் நேர்மையால் உனக்குப் பரிகாரம் செய்வேன்“ என குறிப்பிட்டிருந்தார்.
அடுத்த இரண்டு நாட்களில், பல வங்கி பரிவர்த்தனைகள் மூலம் 300,000 யுவானை காதலனுக்கு சூ மாற்றினார். லி தனது காதலியின் மன்னிப்பை ஏற்றுக்கொண்டார். பின்னர் அவர்கள் 2022 ஆம் ஆண்டு வரை தம்பதியினர் ஒன்றாக இருந்தனர்.
ஆனாலும், தனது காதலி சூ இப்போதும் தனது மருமகனுடன் தொடர்பு வைத்துள்ளதை அவர் கண்டுபிடித்தார்.
இதனால் மனம் வெறுத்த லி, காதலனி சூ வை விட்டு நிரந்தரமாக பிரிய முடிவெடுத்தார்.
இதன்போது, காதலி சூ, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அவர் கொடுத்த பணத்தைத் திரும்பக் கோரினார். இது திருமணத்தின் எதிர்பார்ப்புடன் பிணைக்கப்பட்ட நிபந்தனைக்குரிய பரிசாகக் கருதப்பட்டது. இருவரும் பிரிந்து விட்டதாலும், திருமணம் நடக்காததாலும், லி அந்தத் தொகையைத் திருப்பித் தர வேண்டும் என்று வாதிட்டார்.
லி மறுத்துவிட்டார், சூ மீண்டும் மீண்டும் துரோகம் செய்ததால் அவருக்கு பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியதாகக் கூறினார், மேலும் அவர் அந்தப் பணத்தை அவளுடைய செயல்களுக்கு இழப்பீடாகக் கருதினார்.
பின்னர், நிதியை மீட்டுத் தரக் கோரி சூ நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை பரிசீலித்த நீதிமன்றம் லிக்கு ஆதரவாக தீர்ப்பளித்தது. அவர்களது உறவை சீர்செய்வதற்கான சைகையாக சூ தானாக முன்வந்து பணம் கொடுத்ததாகவும், திருமணத்திற்கான பரிசுப் பொருளாக இருக்கவில்லை என்றும் அது தீர்மானித்தது. பணத்தைத் திருப்பித் தருவதற்கு லி கடமைப்பட்டிருக்கவில்லை என்று நீதிமன்றம் முடிவு செய்தது.
0 comments:
Post a Comment