மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பான பொதுமக்கள் கருத்து கணிப்புகள் இன்று முதல் மாகாண மட்டத்தில் ஆரம்பிக்கப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அதன்படி, மத்திய மாகாணத்தில் இன்றையதினம் கண்டி மாவட்ட செயலக வளாகத்தில் இந்த நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளன.
மேலும், ஊவா மாகாணத்திற்கு எதிர்வரும் 30ஆம் திகதியும், சப்ரகமுவ மாகாணத்திற்கு ஜனவரி 3ஆம் திகதியும் பொதுமக்களின் கருத்துக் கணிப்பு நடத்தப்படவுள்ளது.
இறுதித் தீர்மானம்
மேல்மாகாணத்திற்கான மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பான பொதுமக்கள் கருத்துக்கள் ஜனவரி 10ஆம் திகதி பண்டாரநாயக்க மாநாட்டு மண்டப வளாகத்தில் நடைபெறவுள்ளது.
மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாது என்ற மின்சார சபையின் யோசனைக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு பதில் அளிப்பதாக அறிவித்துள்ளதாகவும், மின்சாரக் கட்டணங்கள் தொடர்பான இறுதித் தீர்மானம் ஜனவரி 17ஆம் திகதி அறிவிக்கப்படும் எனவும் ஆணைக்குழு முன்னர் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment