திருகோணமலை கடற்பரப்பில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஆளில்லா விமானமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த ஆளில்லா விமானம் தொடர்பில் இலங்கை விமானப்படை மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக விமானப்படை ஊடகப் பேச்சாளர் எரந்த கிகனகே தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஆளில்லா விமானத்தை திருகோணமலை கடற்பரப்பில் கடற்றொழிலாளர் ஒருவர் கண்டுபிடித்துள்ளார்.
மேலதிக விசாரணை
அதனை தொடர்ந்து கரைக்கு கொண்டுவரப்பட்ட ஆளில்லா விமானம் , காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து, மேலதிக விசாரணைக்காக விமானப்படை தளத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இந்த நிலைியல், இது தொடர்பில் தென்னிலங்கை ஊடகமொன்று கருத்து தெரிவித்துள்ள விமானப்படை ஊடகப் பேச்சாளர் எரந்த கிகனகே,
“குறித்த ஆளில்லா விமானம் விமானப்படையின் பயிற்சி மற்றும் தாக்குதல் விமானங்களை இலக்காகக் கொண்ட விமானங்களின் பிரதியாக பயன்படுத்தப்படும் ஆளில்லா விமானம்.” என தெரிவித்துள்ளார்.
இதன்படி, கண்டு பிடிக்கப்பட்ட ஆளில்லா விமானம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, சில ஆண்டுகளுக்கு முன்பு, இதேபோன்ற ஆளில்லா விமானம் இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் இருந்து நாட்டிற்கு வந்ததாகவும் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment