வடமராட்சி பகுதியில் கடந்த 3 தினங்களுக்குள் 4 பேர் காய்ச்சலுடன் பருத்தித்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகாக யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்ப பட்டவர்கள் சிகிச்சை சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர் . இன்னும் பலர் விடுதிகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
அனைவரும் இளம் வயதினராக இருப்பதுடன், காய்ச்சல் ஏற்பட்டு இரண்டு மூன்று நாட்களினுள் நோய் மிக தீவிரமாகி அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்.
🔴எலிக்காய்சலாக இருக்கலாம் என சந்தேகிக்கபடுகின்றது🔴
இந்தக் காய்ச்சல் Laptospira interrogans எனப்படுகின்ற ஒரு வகை பக்றீரியாவால் ( Gacteria ) ஏற்படுகிறது. இந்த நோய்க் கிருமி பொதுவாக மிருகங்களின் (எலி,ஆடு,மாடு,பன்றி ) சிறுநீருடன் வெளியேற்றப்படுகிறது. இவ்வாறு வெளியேற்றப்பட்ட நோய்க்கிருமி நீர்த் தேக்கங்களில் இருந்து மனிதனின் தோலில் உள்ள சிறு புண்கள் ஊடாகவோ அல்லது தோலின் மென்மையான பகுதிகள் ஊடாகவோ (Mucous Membrane) மனித உடலின் குருதிச் சுற்றோட்டத்தைச் சென்றடைகின்றது. சில சந்தர்ப்பங்களில் இந்த நோய்க் கிருமி உள்ள நீரைப் பருகுவதாலும் மனித உடலைச் சென்றடைகின்றது.
🔴இப்போது மழைகாலம் ,வெள்ளத்தின் காரணமாக வயல்நிலங்களில் வேலை செய்யும்
விவசாயிகள், வடிகால்களை சுத்தம் செய்பவர்கள், சுரங்கங்களில் வேலை செய்பவர்கள், சதுப்பு நிலங்களில் பணியாற்றுபவர்கள், கால்வாய்கள் மற்றும் அசுத்தமான நீரில் நீச்சலடித்து விளையாடுபவர்கள் போன்ற அனைவரும், அருகிலுள்ள சுகாதார வைத்திய அதிகாரியை அணுகவும்.
திடீரென ஏற்படும் அதிக காய்ச்சல் அல்லது லேசான காய்ச்சல், உடல் குளிர்தல், கண் வெண்மையாதல், இடுப்பு மற்றும் சில பகுதிகளின் தசை மென்மையாதல், கடுமையான தலைவலி மற்றும் சிறுநீர் வெளியேறுவது குறைவாக இருத்தல் போன்ற அறிகுறிகளின் மூலம் எலிக்காய்ச்சல் ஏற்பட்டுள்ளமையை அறிந்துகொள்ள முடியும்.
இந்தக் காய்ச்சல் கடைசிக்கட்டத்துக்குச் சென்றால், இருதயம் செயற்படாமை மற்றும் பல்வேறு உடற்சிக்கல்கள் ஏற்படும் என்பதால் நோயாளியை காப்பாற்றுவது கடினமாகும் .
எனவே ஒரு நாள் காய்ச்சல் எனினும் வடமராட்சி பகுதியில் உள்ளவர்கள் பருத்தித்துறை வைத்தியசாலையை அணுகவும்
0 comments:
Post a Comment