கனடாவில் தனுசா 2ம் கலியாணம்! கோபத்தில் தாய் தனது 2 வது மகளுக்கு சொத்து எழுதியால் யாழ் வந்து தாய் மீது தனுசா தாக்குதல்!!
கனடாவில் பிரஜா உரிமையுடன் வசித்து வந்த 43 வயதான தனுசா எனும் குடும்பப் பெண் ஒருவர் யாழ்ப்பாணம் வந்து தனது 69 வயதான தாயாரை தும்புத்தடி மற்றும் செருப்பால் கடுமையான தாக்குதலை மேற்கொண்டுள்ளதாகத் தெரியவருகின்றது. இச் சம்பவம் தொடர்பாக தனுசாவின் சகோதரி பொலிசாரிம் முறையிடவுள்ளார்.
தனது கணவனையும் 16 வயது மற்றும் 13 வயதான மகன்களையும் கைவிட்டு விட்டு கனடாவில் 35 வயதான இன்னொரு குடும்பஸ்தருடன் தனுசா தற்போது குடித்தனம் நடாத்தி வருகின்றார். இது தொடர்பாக யாழ்ப்பாணத்தில் தனுசாவின் தாய் கடும் கோபத்துடன் இருந்துள்ளார். கனடாவில் கணவனை கை விட்டு இன்னொருவருடன் வாழ்ந்து வரும் தனது மகளுக்கு பாடம் கற்பிக்க தாயார் முடிவு செய்துள்ளார்.
தனுசாவுக்கு கொடுக்க நினைத்த பலகோடி ரூபா பெறுமதியான சொத்துக்களை யாழ்ப்பாணத்தில் தன்னுடன் வாழும் தனது இரண்டாவது மகளுக்கு எழுதிக் கொடுத்துள்ளார். யாழ் நகரப்பகுதியில் உள்ள கடைத்தொகுதியுடன் கூடிய 3 பரப்பு காணி மற்றும் வலிவடக்குப் பகுதியில் உள்ள 30 பரப்புக் காணி என்பவற்றையே தனது இரண்டாவது மகளான குடும்பப் பெண்ணுக்கு எழுதிக் கொடுத்துள்ளார். யாழ் நகரப்பகுதியில் உள்ள காணியில் கட்டப்பட்ட கடைத் தொகுதி கனடாவிலிருந்து தனுசா அனுப்பிய காசிலேயே கட்டப்பட்டதாக தெரியவருகின்றது.
இதனையடுத்து கொலை வெறியில் கனடாவிலிருந்து வந்த தனுசா, தாய் மற்றும் சகோதரி மீது கடும் தாக்குதலை நடாத்தியுள்ளதாகத் தெரியவருகின்றது. தடுக்க முற்பட்ட சகோதரியின் கணவன் மீதும் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. அத்தடன் தனுசா தனது தாயாரையும் பலவந்தமாக தன்னுடன் வந்த வாகனத்தில் ஏற்றிக் கடத்த முற்பட்டதாகவும் அயலவர்கள் தடுத்து நிறுத்தியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக பொலிசாருக்கு அறிவிக்க ஆயத்தமான போது தாயார் அதனைத் தடுத்து நிறுத்தியதுடன் நாளைக்குள் தனுசா கொழும்புக்கு ஓடாவிட்டால் பொலிசாரிடம் பிடித்துக் கொடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறும் தாயார் தனது உறவுகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாகத் தெரியவருகின்றது.
0 comments:
Post a Comment