யாழ்போதனா வைத்தியசாலை பணிப்பாளர் சத்தியமூர்த்தியின் பேஸ்புக் பதிவின்போது கருத்திட்ட வேதநாயகம் தபேந்திரன் பதிவிட்ட கருத்தை அப்படியே தந்துள்ளோம்..
உங்களை வாழ்த்துவோரை விடத் தூற்றுவோரது கருத்துகளைக் கவனத்தில் எடுங்கள். அர்ச்சுன ஒரு எம்பியாக வருமளவுக்கு எவ்வாறு விஸ்வரூபம் எடுத்தாரென இதயசுத்தியுடன் ஆராயுங்கள்.
தங்களைப் பணிப்பாளராகக் கொண்ட KEDT-கிளிநொச்சி கல்வி வளர்ச்சி அறக்கொடைக்கு எந்தெந்த நாடுகளிலிருந்து எந்தெந்தக் காலம் எவ்வளவு பணம் வந்தது.
எவ்வாறு எவ்வளவு எவ்வளவு செலவழித்தீர்கள் போன்ற விபரங்களைப் பகிரங்கப்படுத்துங்கள்.
நான் 2012 முதல் 2020 வரை கிளிநொச்சி மாவட்ட சமூக சேவைகள் உத்தியோகத்தராகப் பணியாற்றினேன். அதனால் உங்களை நன்றாக அறிவேன்.
என்னிடம் உதவி கேட்டு வருவோருக்கு கற்றல் உதவித் தொகை வழங்கக் கேட்டு கடிதம் எழுதிக் கொடுத்துக் கரடிப் போக்கில் உங்களது விஞ்ஞானக் கல்வி நிலையத்தில் இயங்கும் கிளிநொச்சி கல்வி வளர்ச்சி அறக்கட்டளைக்குப் பலரை அனுப்பினேன்.
ஆனால் ஒருவருக்குமே ஒரு ரூபா கொடுக்கப்படவில்லை.
நான் யாழ் இந்துக் கல்லூரியின் பழைய மாணவன். அதனால் வெளிநாடுகளில் உங்களது அமைப்புக்குத் தந்த பணம் எவ்வளவு என ஓரளவு அறிந்து வைத்துள்ளேன்.
நிற்க…
தங்களை ஒருமுறை கிளிநொச்சி மாவட்டத் தமிழ்ச் சங்கத்தின் விழா ஒன்றுக்குப் பிரதம விருந்தினராக அமைத்துக் கௌரவித்தோம். எமது சங்கத்தின் அலுவலக உத்தியோகத்தருக்கு மாதம் 20 000 சம்பளம் கொடுக்கின்றோம். ஒரு மாதச் சம்பளத்தைத் தாங்கள் தரச் சொல்லிக் கேட்டோம். ஆம் என்றீர்கள். கைதட்டினோம். ஆனால் பலமுறை கேட்டும் தரவில்லை.
0 comments:
Post a Comment