யாழ்ப்பாணத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளின் சின்னத்துடனான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டமை மற்றும் , புலிகளின் கொடியினை பறக்க விடப்பட்டமை தொடர்பிலான விசாரணைகளை வல்வெட்டித்துறை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
உடுப்பிட்டி பகுதியில் கடந்த 26ஆம் திகதி புலிகளின் சின்னத்துடனான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருந்தன. மறுநாள் 27ஆம் திகதி ஒரு இடத்தில் புலிக்கொடி பறக்க விடப்பட்டுள்ளது.
இவை தொடர்பில் வல்வெட்டித்துறை பொலிஸாருக்கு தகவல் கிடைக்கப்பெற்றதை அடுத்து , பொலிஸார் அவ்விடத்திற்கு சென்று அவற்றை அகற்றியதுடன் , அவற்றை சான்று பொருளாக பொலிஸ் நிலையம் எடுத்து சென்று இருந்தனர்.
இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார் சம்பவத்துடன் தொடர்புடைய நபர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதே வேளை மகிந்த தரப்பும் யாழ்ப்பாணத்தில் குழப்பங்களை ஏற்படுத்தி தென்பகுதிச் சிங்கள மக்களின் வாக்கு வங்கியைக் கைப்பற்றுவதற்காக இவ்வாறான புலிக்கொடிகளைப் பறக்க விட்டிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment