யாழ் போதனா வைத்தியசாலையில் பைத்தியர் அர்ச்சுனா அதகளம்!! சத்தியமூர்த்திக்கு வேர்த்து வியர்த்ததாம்!! பொலிசில் முறைப்பாடு!!
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்து, வைத்தியர்களின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தார் என நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் அருச்சுனா இராமநாதனனுக்கு எதிராக யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
யாழ் . போதனா வைத்தியசாலைக்குள் இன்றைய தினம் திங்கட்கிழமை அத்துமீறி நுழைந்து கடமையில் இருந்தோருக்கு இடையூறுகளை ஏற்படுத்தி , தன்னை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டதாக வைத்திய சாலை பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
இதே வேளை பைத்தியர் அர்ச்சுனா எம்.பி தனது பேஸ்புக்கில் இவ்வாறு பதிவிட்டுள்ளார்…
இன்று காலை யாழ் போதனா வைத்தியசாலை சம்பந்தமான முறைப்பாடுகளை நேரில் ஆராய்வதற்கு வைத்தியசாலை நிர்வாகி வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி அவர்களை சந்திப்பதற்கு சென்றிருந்தேன்.
அப்போது வைத்திய அதிகாரி மிகவும் பதட்டமாகவும் வேர்த்து வியர்விருத்து மனம் சஞ்சல பட்டவராக இருந்தார்.
பெண் பிள்ளைகள் மற்றும் ஆண் பிள்ளைகளை சம்பளம் இன்றி வேலைக்கு அமர்த்தி அதன் பின்பு அவர்கள் சுகாதார அமைச்சரை சந்தித்து கொடுக்கப்பட்ட வாக்கு மூலத்தின் அடிப்படையில் மீண்டும் தற்காலிகமாக வேலைக்கு வந்திருந்து போதும் அவர்களிடம் சம்பளமும் இல்லாமல் நிரந்தர வேலையும் இல்லாமல் தொண்டராக வேண்டும் என்று வற்புறுத்தி கடிதம் ஒன்றினை எழுதிக் கொண்டு வேலைக்கு சேர்த்திதிருந்தால் பாதிக்கப்பட்ட 170 க்கு மேற்பட்ட இளம் சந்ததியினர் எனக்கு எழுத்து மூலம் முறைப்பாட்டினை அளித்திருந்தனர்.
அதன்போது அது சம்பந்தமாக தனக்கு ஒரு பாராளுமன்ற உறுப்பினர் ஆகிய எனக்கு விளக்கம் அளிக்க முடியாது எனவும் மிகவும் பதற்றத்துடன் விடையளித்திருந்தார்.
அதன் பின்பு யாழ் போலீஸ் நிலையத்தில் அவரைக் கண்டேன்.
இனி எங்கு சென்று முறையிட்டாலும் பாராளுமன்ற சிறப்புரிமை இருக்கின்றது என்பதை சம்பந்தப்பட்ட வைத்திய அதிகாரம் சொல்லிவிடுங்கள்.
சம்பந்தப்பட்ட வைத்திய அதிகாரி அல்லது சம்பந்தப்பட்ட வைத்திய சாலையில் வேலை செய்கின்ற எந்த ஊழியர் சம்பந்தமான எழுத்து மூல முறைபாட்டினை தரும் இடத்தில் பிழை செய்பவர்களுக்கு எதிரான சகல சட்ட நடவடிக்கைகளும் பாராளுமன்றத்தின் மூலம் எடுக்கப்படும்.
இதே வேளை பைத்தியர் அர்ச்சுனாவுக்கு எம்.பி பதவி கிடைக்க மிகவும் சிறப்பான முறையில் வில்லன் பாத்திரம் ஏற்று நடவடிக்கை எடுது்த பைத்திய அதிகாரிகள் சங்கம் நாளை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடலாம் என பைத்தியர் அர்ச்சுனா தனது பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment