குருநாகலில் பரபரப்பு!! உறவு கொள்ளாமலே 13 வயதுச் சிறுமி கர்ப்பம்!! பொலிசார், வைத்தியர்கள் தீவிர விசாரணை!!
13 வயது சிறுமி கர்ப்பமான சம்பவம் தொடர்பில் வைத்தியர்கள் மற்றும் ஹெட்டிபொல பொலிஸார் நேற்று விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
பல நாட்களாக வயிற்று வலியால் பாதிக்கப்பட்ட சிறுமி குளியாபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் சிறுமி இரண்டு மாத கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து சிறுமியிடம் விசாரணை நடத்தப்பட்டது. தான் யாரையும் காதலிக்கவில்லை, யாருடனும் நெருங்கிப்பழகவில்லையென அவர் தெரிவித்துள்ளார். எப்படி கர்ப்பமானேன் என தெரியாது என்றும் தெரிவித்துள்ளார்.
சிறுமி எந்த முறையற்ற தொடர்பையும் கொண்டிருக்கவில்லை என அவரது பெற்றோர் போலீஸாரிடம் பலமுறை கூறியுள்ளனர்.
சிறுமி குளியாப்பிட்டிய சட்ட வைத்தியரிடம் அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், சிறுமி உடலுறவு கொண்டதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை என தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணைகள் நடந்து வருகிறது.
0 comments:
Post a Comment