அண்மைக்காலமாக யாழ்.போதனா வைத்தியசாலை பற்றிய பாதகமான செய்திகள் தொடர்ச்சியாக வெளிவந்துகொண்டிருக்கின்றன.
யாழ்.மக்களின் மிகப்பெரிய நம்பிக்கையின் அடையாளமாக இருக்கவேண்டிய யாழ்.போதனா வைத்தியசாலை தொடர்பாக வெளிவந்து கொண்டிருக்கின்ற செய்திகள் தமக்கு கவலை அளிப்பதாகத் தெரிவிக்கின்றார்கள் யாழ் மக்கள்.
ஒரு காலத்தில் கொழும்பு உட்பட பல்வேறு மாகாணங்களில் இருந்து சிகிச்சைக்காக நோயாளர்கள் யாழ்ப்பாணம் வந்த நிலை மாறி தற்பொழுது சிறிய சிறிய சிகிச்சைகளுக்கு கூட யாழ்.மக்கள் கொழும்பை நோக்கிச் சென்றுகொண்டிருப்பதாக குற்றம் சுமத்துகின்றார்கள்.
இந்த விடயம் தொடர்பில் யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் கலாநிதி கவனத்தில் எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை முன்வைக்கின்றார்கள்.
தனியார் வைத்திய நிலையங்களை நோக்கி நோயாளர்களை முன்தள்ளுகின்ற சதியின் வெளிப்பாடாக இது இருக்குமா என்று சில முக்கியஸ்தர்களால் சந்தேகமும் எழுப்பப்பட்டு வருகின்றது.
யாழ்.போதனா வைத்தியசாலை தொடர்பாக அண்மையில் வெளிவந்த செய்திகளில் சிலவற்றை பணிப்பாளரின் கவனத்திற்கு தருகிறோம்.
பொதுமக்களின் நன்மை கருதி யாழ்.போதனா வைத்தியசாலை பற்றிய நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கு உங்களுடன் இணைந்து பணியாற்ற ஊடகங்களும் தயாராக இருக்கின்றன என்ற உறுதியையும் தந்து நிற்கின்றோம்.
0 comments:
Post a Comment