Monday, April 22, 2024

முல்லைத்தீவில் மகனின் மரணச்சடங்கை வீட்டில் செய்யமுடியாத நிலையில் தவித்த தாய்! | Full Pond Death Ritual Cannot Be Performed At Home


முல்லைத்தீவில் மகனின் மரணச்சடங்கை வீட்டில் செய்யமுடியாத நிலையில் தவித்த தாய்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் வழமைக்கு மாறாக கிடைக்கப்பெற்ற கனமழை காரணமாக புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள தேராவில் குளம் நிரம்பி காணப்படுவதோடு மேலதிக நீர் வெளியேற முடியாத நிலை காணப்படுகின்றது.

இந்நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த தாயொருவர் உயிரிழந்த தனது மகனின் மரணச்சடங்கை வீட்டில் செய்ய முடியாது தவிக்கும் நிலையும் உருவாகியுள்ளது.

இதனால் குளத்தினை அண்மித்த பகுதியில் உள்ள மக்களின் வீடுகள் கடந்த டிசம்பர் மாதம் 18ஆம் திகதி முதல் சுமார் நான்கு மாதங்களுக்கு மேலாக குளத்து நீரில் நிரம்பி காணப்படுகின்றது.

நீரினை வெளியேற்றும் நடவடிக்கை

இந்நிலையில் குறித்த பகுதியில் வசித்த குடும்பங்கள் மூங்கிலாறு பொதுநோக்கு மண்டபத்தில் உள்ள இடைத்தங்கல் முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்தனர்.

மக்களின் தொடர்ச்சியான கோரிக்கையில் இந்த நீரினை வெளியேற்றுவதற்கான நடவடிக்கையில் மாவட்ட அரசாங்க அதிபர், முன்னெடுத்திருந்தார்.

இந்நிலையில் 17.02.2024 அன்று குறித்த நீரை வெளியேற்றும் நடவடிக்கைக்காக ஞானம் பவுண்டேசன் நிறுவனம் முன்வந்திருந்தது.

உயிரிழந்த மகனின் இறுதிக்கிரியைகள்

இருந்தும் குறித்த நிதியைக் கொண்டு வேலையை நிறைவு செய்ய வனவள திணைக்களம் உள்ளிட்ட பல்வேறு திணைக்களத்தின் தடை காராணமாகவும் அந்த தடைகள் நீக்கப்படாமை காரணமாகவும் இதுவரை குறித்த வேலைத்திட்டம் பூர்த்தியாக்கப்படவில்லை.

இந்நிலையில் குறித்த பகுதியில் இருந்த வீட்டின் உரிமையாளரது மகன் உயிரிழந்த நிலையில் அவரது இறுதிக்கிரியைகளை கூட அவருடைய வீட்டில் செய்ய முடியாத நிலையில் குறித்த தாய் இருக்கின்றார்.

அத்துடன் இவ்வாறான அதிகாரிகளின் அசமந்த போக்கு தொடர்பில் கடுமையான கண்டனத்தை வெளியிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது

0 comments

Post a Comment

online jobs in sri lanka ,
jobs in sri lanka ,
vacancies in kandy ,
tob jobs ,
online jobs in sri lanka ,
new job vacancy ,
lakbima jobs ,
jobs in colombo ,
sri lanka government job