பிரித்தானியாவில்(UK) 15 வயதுக்கு குறைவான சிறுவர்களுக்கு புகையிலைப் பொருள்களை விற்பனை செய்வது விரைவில் தடைசெய்யப்படலாம் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது தொடர்பிலான புதிய சட்டமூலம் மீது பிரித்தானிய நாடாளுமன்றில் வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், இந்த சட்டம், புகை பிடிக்காத முதல் தலைமுறையை உருவாக்கக் வழிவகுக்கும் என்று அதிகாரிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
புகையிலை பாவனை
இந்நிலையில், சட்டம் நடைமுறைக்கு வந்தால் இந்த ஆண்டு 15 வயதை அடையவுள்ள அல்லது அதற்கும் குறைவான வயதுடைய இளையர்கள் ஒருபோதும் புகையிலைப் பொருள்களை வாங்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனாக் (Rishi Sunak) கடந்த ஆண்டு புகையிலை பாவனை தொடர்பில் புதிய கொள்கைகளை அறிவித்திருந்தார்.
இங்கிலாந்தில் சிகரெட் வாங்கச் சட்டப்படி அனுமதிக்கப்படும் வயது வரம்பு ஒவ்வோர் ஆண்டும் உயர்த்தப்படும் என அவர் கூறியிருந்தார்.
இங்கிலாந்தில் தற்போது 18 வயதுக்குக் குறைவானவர்களுக்குச் சிகரெட்டுகளையோ, புகையிலைப் பொருள்களையோ விற்பது சட்டப்படி குற்றமாகும்.
மேலும் இளையர்கள் மின் சிகரெட்டுகள் பயன்படுத்துவதைத் தடுக்கும் நடவடிக்கைகளும் புதிய சட்டத்தின்கீழ் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment