யாழ்ப்பாணம், அச்சுவேலி பிரதேசத்தில் வீடொன்றுக்குள் நுழைந்து நடத்தப்பட்ட தாக்குதலில் முதியவர் ஒருவர் படுகாயமடைந்தார். வீடு, வாகனமும் சேதமாக்கப்பட்டது.
நேற்ற (27) நள்ளிரவு இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அச்சுவேலி, பத்தமேனி பகுதியிள்ள வீடொன்றுக்குள் நுழைந்து, வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தின் கண்ணாடிகளை அடித்து நொருக்கியதுடன், வீட்டு யன்னல்களையும் அடித்து உடைத்துள்ளனர்.
அத்துடன், அந்த வீட்டிலிருந்த 70 வயதான முதியவரையும் வாளால் வெட்டியுள்ளனர்.
இரண்டு நண்பர்களுக்கு இடையிலான வர்த்தக விவகாரத்தில் ஏற்பட்ட மோதலே இந்த வன்முறை சம்பவத்துக்கு காரணமென காயமடைந்தவரின் மகன் தெரிவித்துள்ளார்.
மரக்கறி வர்த்தகத்தில் ஈடுபட்ட இரண்டு நண்பர்களில் ஒருவர் சில காலத்தின் முன்னர் வெளிநாடு செல்ல முயன்றார். அப்போது தனது பாரவூர்தியை மற்றைய நண்பனிடம் விற்றுள்ளார்.
வெளிநாடு சென்ற நண்பர், சில காலத்தில் முயற்சி தொல்வியடைந்து, பணத்தையும் இழந்து ஊர் திரும்பியுள்ளார்.
நண்பனிடம் விற்ற பாரவூர்தியை திருப்பிக் கேட்டுள்ளார். நண்பனும் கொடுத்துள்ளார். ஆனால் பாரவூர்திக்குரிய பணத்தை கொடுக்கவில்லை. சிறிய அவகாசம் கொடுத்த நண்பன், பணம் செலுத்தாததால் பாரவூர்தியை மீளப்பெற்று, வேறொரு தரப்புக்கு விற்பனை செய்து விட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த மற்றைய நண்பனின் தரப்பை சேர்ந்தவர்களே இந்த வன்முறை தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். பாரவூர்தியை விற்பனை செய்த நண்பனின் வீடு புகுந்து தாக்குதல் நடத்தியதுடன், தந்தையையும் வெட்டியுள்ளனர் என தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதலில் ஈடுபட்ட இரண்டு சகோதரர்களை அச்சுவேலி பொலிசார் கைது செய்துள்ளனர்.
0 comments:
Post a Comment