உலகிலேயே மிகவும் நீளமான அதிக உடல் பருமனான பாம்புகளில் ஒன்றான ‛‛வாசுகி’’ இந்தியாவின் குஜராத் மாநிலம் கட்ச் பகுதியில் வாழ்ந்திருப்பதை கண்டுபிடித்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த பாம்பு 4 கோடியே 70 லட்சம் கோடி ஆண்டுக்கு முன்பு இருந்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
குஜராத் மாநிலம் கட்ச் பகுதியில் பானந்த்ரோ லிக்னைட் சுரங்கத்தில் இருந்து கடந்த 2005 ஆம் ஆண்டு சில எலும்புகள் புதை படிமங்களாக கிடைத்துள்ளன.
எலும்புகள்
இதன்போது முன்காலத்தில் வாழ்ந்த ராட்சத முதலை இறந்து பூமிக்கடியில் புதைந்து இருக்கலாம் எனவும் அதன் எலும்புகள் தான் புதை படிமங்களாக இப்போது கிடைத்துள்ளதாகவும் கூறப்பட்டது.
4 கோடியே 70 லட்சம் கோடி ஆண்டு பழமையான வாசுகி பாம்பு: மர்மத்தை கண்டறிந்த ஆய்வாளர்கள்! | World Longest And Fattest Snake Vasuki Discovered
இருப்பினும் அந்த எலும்புகள் முதலைக்குரியதுதான் என்பது உறுதி செய்யப்படாத நிலையில் அந்த புதைப்படிம எலும்புகள் ஆய்வுக்காக சேகரிக்கப்பட்டன.
அந்த எலும்புகள் எந்த உயிரினத்துக்கானது என்பது பற்றிய ஆய்வு தொடங்கப்பட்ட நிலையில் கடந்த 2022 இல் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் பூமியில் 50 அடிக்கு ராட்சத பாம்பு வாழ்ந்து வந்துள்ளதென கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வாசுகி பாம்பு
அதாவது குஜராத் மாநிலம் கட்ச் பகுதியில் புதைபடிமங்களாக கிடைத்த எலும்புகள் ராட்சத பாம்புக்குரியதெனவும் அந்த பாம்பு அனகோண்டா வகையை சேர்ந்ததது எனவும் இந்த பாம்பின் பெயர் ‛வாசுகி' எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்து கடவுள்களில் ஒருவரான சிவபெருமானுக்கும் வாசுகி பாம்புக்கும் நெருங்கிய பந்தம் உள்ளதாக புராணங்களில் கூறப்படுகிறது.
World Longest And Fattest Snake Vasuki Discovered
சிவபெருமான் பாற்கடலை கடைய மத்தாக பயன்படுத்தியது ‛வாசுகி' பாம்பு எனவும் இந்நிலையில் அந்த வகை ‛வாசுகி' பாம்பை சேர்ந்ததுதான் கண்டுபிடிக்கப்பட்ட இந்த பாம்பு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த பாம்பு பொதுவாக சூடான பிரதேசத்தில் தான் வசிக்கும் என்பதனால் குஜராத்தின் கட்ச் என்பது வெப்பம் நிறைந்த பகுதி என்பதால் அங்கு இருந்திருக்க வாய்ப்புள்ளது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment