சுவிஸ் தமிழ்குடும்பப் பெண்ணுடன் அந்தரங்க தொடர்பில் லட்சக்கணக்கில் பணம் பெற்ற யாழ் தமிழ்ப் பொலிஸ் ஓடி ஒளித்தான்!!
சுவிஸ் குடும்பப் பெண்ணிடம் 60 இலட்சம் ரூபா பணம் மற்றும் நிறைய தங்கத்தை ஏமாற்றிய யாழ்.பொலிஸில் பணிபுரியும் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கடந்த 16 ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக கூறப்படுகின்றது.
யாழ்ப்பாணத்தை சேர்த யுவதி ஒருவர் திருமணம் முடித்து சுவிட்சர்லாந்திற்குச் சென்று அங்கு வசிக்கும் போது அவரது சில சொத்துக்கள் அவரது குடும்ப உறுப்பினர்களால் இரகசியமாகவும் மோசடியாகவும் கைமாற்றப்பட்டுள்ளது.
பொலிஸில் முறைப்பாடு
சுவிட்சர்லாந்தில் இருந்து யாழ்ப்பாணம் வந்து , இது குறித்து யாழ்ப்பாணம் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். அந்த புகாரை விசாரிக்கச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தருக்கும் அந்த பெண்ணுக்கும் இடையே நட்பு ஏற்பட்டு பின்னர் அது காதலாக மாறியுள்ளது.
இதனையடுத்து , சில காலத்தின் பின்னர் யாழ் பொலிஸ் உத்தியோகத்தர் சுவிஸ் பெண்ணிடம் பல்வேறு தேவைகளை காரணம் காட்டி கடனாக பணம் பெற்றுள்ளார்.
பொலிஸ் உத்தியோகத்தருக்கு அவர் வழங்கிய கடன் தொகை 60 இலட்சம் ரூபா, இதற்கு மேலதிகமாக காதலனுக்கு பரிசுப் பொருட்களுக்கு என அதிக பணத்தை செலவிட்டுள்ளார்.
அதன்பின்னர் போலீஸ் அதிகாரி தன்னுடன் இருந்த உறவில் இருந்து விலகிய நிலையில் , பெண் கடன் வாங்கிய பணத்தை அவரிடம் திருப்பித் தருமாறு கேட்டுள்ளார்.
இதேவேளை, பொலிஸ் உத்தியோகத்தர் தனது தொலைபேசி இலக்கத்தை மாற்றியதை அடுத்து பணத்தை பெறுவதற்காக யாழ்ப்பாணம் வந்த சுவிஸ் பெண் , தான் ஏமாற்றப்பட்டமை தொடர்பில் யாழ்.பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
இந்நிலையி, பெண்ணின் முறைப்பாட்டுடன் தொடர்புடைய பொலிஸ் உத்தியோகத்தர் யாழ்ப்பாணத்தில் இருந்து காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment