13 வயதுடைய சிறுமியொருவர் உட லுறவு கொள்ளாமல் கர்ப்பமானதாக கூறப்பட்ட சம்பவம் தொடர்பான மேலதிக மருத்துவ விசாரணைகளுக்காக, சிறுமி கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் ஹெட்டிபொல பொலிஸார் மற்றும் உரிய வைத்தியர்களினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் சிறுமி கர்ப்பமானமைக்கான காரணம் தெரியவராததால் மேலதிக விசாரணைகளுக்காக கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இந்த விசாரணைகளை மேற்கொள்வதற்கு முன்னர், சிறுமியிடம் இருந்து உண்மைகளை பெற மருத்துவர்கள் கவனத்தில் கொள்ள உள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
ஹெட்டிபொல பொலிஸ் பிரிவில் வசிக்கும் சிறுமி வயிற்று உபாதை காரணமாக குளியாப்பிட்டிய வைத்தியசாலைக்கு சென்ற போது, அவர் 3 மாத கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. எனினும், சிறுமி யாருடனும் உடல் தொடர்பு வைத்ததாக குறிப்பிடவில்லை. குளியாபிட்டிய சட்ட வைத்தியர் மேற்கொண்ட பரிசோதனையிலும், சிறுமி உட லுறவு கொண்டதற்கு வாய்ப்புக்கள் இல்லையென தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment