அவுஸ்திரேலியாவில் வணிகவளாகமொன்றில் நபர் ஒருவர் மேற்கொண்ட கத்திகுத்து தாக்குதலில் நால்வர் கொல்லப்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த சம்பவமானது இன்று(13) சற்று முன்னர் சிட்னியின் பொன்டி ஜங்சன் எனப்படும் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
வணிக வளாகமொன்றிற்குள் நபர் ஒருவர் கத்தியுடன் காணப்படுவதாக பொதுமக்களை எச்சரித்துள்ள காவல்துறையினர் இந்த பாரிய சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் சம்பவ இடத்திலிருந்து பொதுமக்கள் தப்பியோடிய வண்ணமுள்ளதாக ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
Stabbing Attack Mall In Sydney Australia Four Dead
அத்தோடு அவசரசேவை பிரிவினரின் வாகனங்கள் அந்த பகுதிக்கு விரைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலர் கத்திக்குத்திற்கு இலக்காகியுள்ளதாக தகவல்கள் வெளியாகிருப்பதுடன் துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment