பிரபல சமூக வலைத்தளமான டிக்டோக் செயலியை கிர்கிஸ்தான் நாடு தடை செய்துள்ளது.
வீடியோக்களை பகிரக்கூடிய டிக்டோக் (TikTok) செயலிக்கு பல்வேறு நாடுகளில் எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து இந்தியா, நியூசிலாந்து, பிரித்தானியா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் தடை விதித்தன.
பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாகவும், குழந்தைகளின் மனநலம் பாதிக்கப்படுவதாகவும் டிக்டோக் செயலி மீது குற்றம்சாட்டப்பட்டது.
TikTok
இந்த நிலையில், மத்திய ஆசிய நாடான கிர்கிஸ்தானும் ''TikTok'' செயலியை தடை செய்துள்ளது. இதற்கான அறிவிப்பில், தங்கள் நாட்டில் செயல்படக்கூடிய Telecom Operator-களுக்கு டிக்டோக் செயலிக்கான அணுகலை வழங்கக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளது.
குழந்தைகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, தேசிய நலனுக்கான செயற்குழு வெளியிட்ட பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கிர்கிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.
அதேபோல் தங்கள் நாட்டின் அரசு விதிமுறைகளை மதிக்காமல் ByteDance நிறுவனம் செயல்படுவதாக கிர்கிஸ்தான் கூறியுள்ளது.
0 comments:
Post a Comment