யாழ்ப்பாணத்தில் இறையடி சேர்ந்த தனது தந்தைக்காக மகன் ஒருவர் மிகவும் பிரமாண்டமான ரீதியில் ஒரு நினைவாலயத்தை அமைந்துள்ளார்.
கந்தசாமி பகீரதன் என்பவரே தனது தந்தையான கந்தசாமிக்காக இந்த நினைவாலயத்தை அமைத்து அதற்கு கந்தக்கோட்டம் என பெயர் சூட்டியுள்ளார்.
இந்த நினைவாலயமானது தற்போது அனைவராலும் பேசப்பட்டு வருகின்றது.
நெகிழ்ச்சி செயல்
யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை, சுழிபுரம் கிழக்கு பகுதியில் இந்த நினைவாலயமானது அமைக்கப்பெற்றுள்ளது.
Taj Mahal Built By The Son For The Father Jaffna
கடந்த 2011.04.01 அன்று கந்தசாமி உயிரிழந்த நிலையில் அடுத்த வாரமே இந்த நினைவாலயத்திற்கு அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது.
இந்நிலையில் ஒரு வருடத்தில் பெரும்பாலான வேலைகள் செய்து முடித்த இருந்தாலும், நிதிப் பிரச்சினை காரணமாக அதனை முற்றுப்பெற வைக்க முடியாத நிலையில் மிகுதி வேலைகள் தற்போது இடம்பெறுகின்றன.
நினைவாலயம்
கடந்த பல வருடங்களாக, இந்த நினைவாலயத்திற்கு அருகாமையில் வசிக்கும் மாணவர்களுக்கு 40% இலவசக் கல்வி வழங்கப்பட்டு வந்தது.
இந்த கட்டடக்கலையானது இந்திய கலைஞர்களால் கட்டப்பட்டது போன்று தோற்றமளித்தாலும் முற்றுமுழுதாக யாழ்ப்பாணம் - தொல்புரம் பகுதியில் வசிக்கும் தொழிலாளர்களின் கை வண்ணத்திலேயே கட்டப்பட்டுள்ளது.
தாஜ்மஹால், ஜெய்ப்பூர் அரண்மனை மற்றும் ஆலயங்களின் கட்டடக்கலைகளை உள்ளடக்கியே இந்த நினைவாலயம் அமைக்கப்பெற்றுள்ளது.
அண்மைக் காலங்களில் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையே வன்முறைகள், முரண்பாடுகள் தோற்றம்பெற்று வரும் நிலையில் தந்தைக்காக மகன் கட்டிய இந்த நினைவாலயமானது அடுத்தகட்ட சந்ததியை ஒரு நல்வழிப்படுத்த சந்தர்ப்பங்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment