இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.
இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 03 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 368 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 20 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 420 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.
ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 30 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, இன்று நள்ளிரவு முதல் ஒரு லீற்றர் ஒட்டோ டீசல் 333 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.
சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 09 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, ஒரு லீற்றர் சுப்பர் டீசல் 377 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.
மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 30 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஒரு லீற்றர் மண்ணெண்ணெய் 215 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.
0 comments:
Post a Comment