தன்னைத்தானே மன்னர் என அறிவித்துக்கொண்டுள்ள இளைஞர் ஒருவர், சுவிஸ் நகர தெருக்களில் உலாவருகிறார்.
சுவிட்சர்லாந்தின் Zug மாகாணத்தைச் சேர்ந்தவரான ஜோனாஸ் (Jonas Lauwiner, 29) என்னும் இளைஞர், தன்னை ஒரு மன்னர் என அறிவித்துக்கொண்டுள்ளதுடன், பாதுகாவலர்கள் சூழ வலம் வருகிறார்.
கடந்த வார இறுதியில், Bern நகரில் அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள பகுதியில் தெருக்களில் ராணுவ வாகனம் ஒன்றில் பவனி வந்தார் அவர்.
கைவிடப்பட்ட கட்டிடங்கள், தனியார் சாலைகள் மற்றும் காடுகளை பணம் கொடுத்து வாங்கும் ஜோனாஸ், அவை தனது ராஜியத்தின் பகுதி என்று கூறுகிறார். மன்னர் ஜோனாஸுக்கு முடிசூட்டு விழாவும் நிகழ்ந்துள்ளது.
என்றாலும், சுவிஸ் அதிகாரிகளுக்கு தொல்லை கொடுக்க விரும்பாத ஜோனாஸ், தனது ராணுவ வாகனத்தை தெருக்களில் ஓட்ட சட்டப்படி அனுமதி பெற்றுள்ளதுடன், தேர்வும் எழுதி வெற்றிபெற்றுள்ளார்.
தான் தெருக்களில் பவனி வரும்போது, மக்கள் தன்னைப் பார்த்து கையசைப்பதும், புன்னகைப்பதும், தனக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக தெரிவிக்கிறார் ‘மன்னர்’ ஜோனாஸ்!
0 comments:
Post a Comment