தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பேச்சாளர் சட்டத்தரணி கே.சுகாஷ் ஈழத்தில் உருவான திரைப்படமொன்றில் நடித்துள்ளார்.
வடக்கில் ஆங்காங்கே பலர் இணைந்து திரைப்படங்கள், குறும்படங்கள் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். அவ்வாறான குழுவொன்று, ஊழியென்ற பெயரில் படமொன்றை தயாரித்துள்ளது.
இதில் கே.சுகாஷ் நடித்துள்ளார்.
நேற்று படக்குழு நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட கே.சுகாஷ் கருத்து தெரிவிக்கையில்,
இந்த திரைப்படத்தில் நடிப்பதற்காக என்னை முதலில் படக்குழுவினர் நாடிய போது , எனக்கு படத்தில் நடிப்பதில் ஈடுபாடு இருக்கவில்லை. பின்னர் இந்த படத்தின் இயக்குனரான ரஞ்சித் ஜோசப் இயக்கத்தில் வெளியான ” சினம் கொள்” திரைப்படத்தை பார்த்த பின்னர், அவரின் இயக்கத்தில் நடிப்பதில் எனக்கு தயக்கம் இருக்கவில்லை. இந்த திரைப்படம் தமிழர் வரலாற்றில் இடம்பிடிக்க கூடிய கலைப்படைப்பாக இருக்கும்.
இதனை வெற்றியடைய வைக்க வேண்டும். இதொரு நீதி கோரிய எமது பயணத்தின் வெற்றியாக அமைய வேண்டும். இந்த படத்தில் காதல் இருக்கும் காமம் இருக்காது. தமிழர்கள் அனைவரும் இப்படத்திற்கு பெருவரவேற்பு அளித்து படத்தினை வெற்றியடைக்க வைக்க வேண்டும் என தெரிவித்தார்
0 comments:
Post a Comment