கனடாவின் விமான நிலையத்தில் கொள்ளையிடப்பட்ட 400 கிலோ கிராம் தங்கத்தின் ஒரு பகுதி உருக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி ரொறனரோவின் நகைக்கடையொன்றில் இந்த தங்கம் உருக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வளவு தங்கம் உருக்கப்பட்டது
எனினும் எவ்வளவு தங்கம் இவ்வாறு நகைக் கடையில் உருக்கப்பட்டது என்பது பற்றிய துல்லியமான தகவல்கள் இதுவரையில் வெளியிடப்படவில்லை.
இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் தமிழர் ஒருவர் உள்ளிட்ட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
12 பேருக்கு எதிராக குற்றம்
கொள்ளைச் சம்பவம் தொடர்பில் 12 பேருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்தக் கொள்ளைச் சம்பவத்துடன் எயார் கனடா விமான சேவை நிறுவனத்தின் இரண்டு பணியாளர்களுக்கும் தொடர்பு உண்டு என விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
0 comments:
Post a Comment