அவுஸ்திரேலியாவில் தொலைபேசி மூலம் ஆ பாச உரையாடல்களில் ஈடுபட்ட இலங்கையை சேர்ந்த நபர் ஒருவருக்கு நீதிமன்றம் இரண்டு வருட சிறைத்தண்டனை விதித்துள்ளது.ஜெராட் சிசில் வாமதேவன் என்ற 56 வயது நபரே கைதுசெய்யப்பட்டுள்ளார்.இவர் தன்னை தொலைக்காட்சி ஒன்றின் அதிகாரி என தெரிவித்துவந்தார்அது பொய் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.தாய் ஒருவரை தொலைபேசியில் தொடர்புகொண்ட இந்த நபர் மகளை பாலி யல்வன்மு றைக்கு உட்படுத்தி துண்டுதுண்டாக வெட்டிக்கொள்வேன் என அச்சுறுத்தியுள்ளார்.ஜனவரி 2018 முதல் 2022 ஜனவரி 22ம் திகதி வரை இவர் 18 பேருடன் இவ்வாறு தொலைபேசியில் உரையாடியுள்ளார்.
தன்னை சனல் 7 தொலைக்காட்சியின் திறமையாளிகளை தேடும் நபர் என அறிமுகப்படுத்திக்கொண்டு தங்களை தொடர்புகொண்டார் என பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.எனினும் சனல் 7 தனக்கும் இந்த நபருக்கும் எந்த தொடர்பும் இல்லை என தெரிவித்துள்ளது.இதேவேளை பாதிக்கப்பட்ட நபர்கள் தங்களை தொலைபேசியில் தொடர்புகொண்ட வாமதேவன் இழிவான மோசமான பாலி யல் ரீதியிலான உரையாடலில் ஈடுபட்டார் என தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட ஒருவர் வாமதேவன் தன்னை தொலைபேசியில் அழைக்க தொடங்கியதும் காவல்துறையினரை தொடர்புகொண்டுள்ளார்.பாடகியாக வரவிரும்பும் தனது மகளிற்காக தான் தயாரித்த சுயவிபரக்கோவையில் தான் தெரிவித்திருந்த தொலைபேசி இலக்கத்தை பயன்படுத்தி வாமதேவன் தன்னை தொடர்புகொண்டார் என அந்த பெண் தெரிவித்துள்ளார்.2020 செப்டம்பர் முதல் 2021 ஜனவரி வரை வாமதேவன் அந்த பெண்ணை தொலைபேசியில் தொடர்புகொண்டு தனது மகளின் முதல் பெயரை பயன்படுத்தி ஆ பாச உரையாடல்களில் ஈடுபட்டார் தன்னை யார் என்பதை தெரிவிக்கவில்லை என அந்த பெண் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment